Sunday, June 5, 2011

சாமியாருக்கு தகுதியில்லை, சரி. நமக்கு இருக்கின்றதா?


இன்றைய பெரும்பாலான வலைப்பதிவர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். காரணம் சாமியாரின் உண்ணாவிரதப்போரட்டத்தை பற்றி ஒரு கட்டுரையை அல்லது தனது சொந்த கருத்துக்களை எழுதி அதிகமான பாராட்டுக்களையும், பார்வையாளர்களையும் பெற்றே விட்டார்கள். (பெரும்பாலான பதிவுகள் அவருக்கு தகுதி இல்லை என்பதையே மையப்படுத்தி இருந்தனர்.) இன்டலி மற்றும் அதைப்போன்ற தமிழ் தகவல் திரட்டிகளில் அதிகமான ஓட்டுக்களை பெற்று இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். எழுத்தளர்களாக அங்கீகாரம் பெறுவதற்கே இந்த உழைப்பு. அதிலும் வெற்றியும் கிடைத்துவிட்டது. சரி அடுத்து? அடுத்து என்ன , அடுத்த வாரம் வேறு யாரவது விரதம் இருந்தால் அவர்களைப்பற்றியும் (குறைகளை) எழுதி சாதனை படைக்கலாம். எனது இந்த பதிவும் அந்த சாதனை படைத்தால் நானும் அவர்களில் ஒருவன் தான்.

சாமியாரின் குறைகளாக நம்மவர்கள் சொல்லும் காரணங்களில் சில.

1. இவரின் லேகியம் மனித மற்றும் விலங்கு எலும்புகளை கொண்டு செய்யப்பட்டது
2. இந்தியா முழுவதும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே விகித சம்பளம் வழங்க வேண்டும் என்று சொல்லும் இவர் , இவரின் மடத்தில் வேலை பார்த்த 15 பேருக்கு மிக குறைவான சம்பளம் தந்தார்.
3. கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் இவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது?

நியாயமான கேள்விகள் தான். அப்படியே ஆளும் கட்சி சொல்லும் சில குறைகளை கேட்டுவிட்டு வருவோம்.

1. கபில் சிபல்: யோகாசனம் செய்வதை போதிக்கும் சாமியார் எங்களுக்கு அரசியல் ஆசனம் செய்வது எப்படி என்று போதிக்க கூடாது.
2. திக் விஜய் சிங்: அவர் ஒரு வியாபாரி. 5 நட்ச்சத்திர சத்தியாகிரகம் நடத்துகிறார். விரதம் நடத்துவதால் கருப்பு பணம் திரும்ப வந்துவிடாது. காங்கிரஸ் அவரைக்கண்டு பயப்படவில்லை.
3. காவல் துறை: 5000 பேருக்கு யோகாசனம் சொல்லித்தரப்போவதாக அனுமதி வாங்கிவிட்டு உண்ணாவிரதம் நடத்தியதால் கைது செய்தோம்.

நண்பர்களே, இதை கவனித்தீர்களா? நாம் சொல்லும் பெரும்பாலான குறைகளை இவர்கள் சொல்வதில்லை. சொன்னால்? இவர்களின் வண்டவாளங்களை யாராவது தண்டவாளம் ஏற்றிவிடுவார்கள் என்ற பயம். ஏன் என்றால் காங்கிரசில் இப்போது உள்ளவர்கள் யாரும் மாற்று துணி இல்லாமல், அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இல்லை. பொது நலத்தை முழு நேர வேலையாக செய்யும் (அரசியல்வியாதிகள்) இவர்கள் கோடிஸ்வரர்களாக இருக்கும் போது பணம் வாங்கிக்கொண்டு யோகா சொல்லித்தரும் சாமியார் (இல்ல மாமியாரோ) கோடிஸ்வரனாக இருப்பது எந்த வகையில் தவறு என்று நாம் சொல்கின்றோம்?

5 நட்சச்சத்திர விரதம் என்றால், 10 பைசா செலவில்லாமல் மக்களும் அந்த சாமியாரும் கட்டாந்தரை வெய்யிலில் உட்கார்ந்து விரதம் செய்ய வேண்டுமா? நீங்களும் அதைத்தான் எதிர்பார்கின்றீர்களா நண்பர்களே?


இது ஏ சி வசதி செய்யப்படாத கட்டாந்தறையா? அல்லது இவர்கள் சம்பாதித்து கட்டிய டெல்லி பாடியாலா அரண்மனையா? ஆலமரத்தடியில் நடக்கும் பள்ளிகூடங்கள் எதுவும் இன்றைய இந்தியாவில் இல்லையா?

ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து பதவி கொடுத்து, சம்பளம் கொடுத்து, அவர்களுக்கு காவலுக்கு நிற்கும் காவலாளிகளுக்கும் சம்பளம் கொடுக்கும் நாம் கட்டாந்தரையில் அமர்ந்து போராட வேண்டும் அல்லவா? நமக்கு ஒரு வீடு கூட இல்லாத போது இவர்களுக்கு எதுக்கு இத்தனை வீடுகள் அரசாங்க செலவில்? அதுவும் குளிர்சாதன வசதியுடன்? பொட்டல்காடுகளில் தலயில் தலைப்பாகை கட்டிக்கொண்டு ஏர் ஓட்டும் விவசாயியின் ஒரு ரூபாய் கூடவா அவர்கள் அனுபவிக்கும் வசதிகளில் இருக்காது? இன்னும் என் அப்பனை போல எத்தனையோ பேரின் அப்பன்களுக்கு ஏ சி என்றால் என்னவென்று கூட தெரியாதே. அவர்களின் ஓட்டுகளை , பணத்தை சம்பளமாக பெரும் அரசியல் வாதி சாலையில் நடந்தா போய்க்கொண்டு இருக்கின்றான்? ஏ சி கார்கள் படை சூழ அல்லவா நம்மை நிறுத்திவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றான்?

காங்கிரஸ் அவரைக்கண்டு பயந்திருந்தால் இந்நேரம் சிறையில்தான் இருந்திருப்பார் என்று பகலில் சொன்ன திக் விஜய்க்கு அவர் ஏன் இரவில் கைது செய்யப்பட்டார் என்று இந்நேரம் தெரிந்திருக்குமா? பயமில்லாமலா விமான நிலையம் சென்று பேச்சு வார்த்தை நடத்தினீர்கள்? கபில் சிபலுக்கு சாமியார்கள் அரசியல் பாடம் எடுக்க கூடாதாம். பிறக்கும் போதே கபில் அரசியல் வாதியாக பிறந்தார் போல. சரி அவர் சொல்லித்தர வேண்டாம். அவரை குறை சொல்லும் வலைப்பதிவு தோழர்கள் சொல்லுவார்களா? அல்லது அவர்கள் சொன்னாலும் கபில் ஏற்றுக்கொள்ள மாட்டாரா? பின்ன யார் சொல்ல வேண்டும்? யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்றால் இது ஜனநாயகமா? கைதுக்கு காரணம் தவறான முறையில் அனுமதி பெற்றது. அற்ப்புதம் இது. மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஒருவாரமாக தெரிந்த விஷயம் காவல் துறைக்கு இரவு 1 மணிக்குத்தான் யாரோ தொலைபேசியில் அழைத்து சொல்லி இருகின்றார்கள்.

வலைப்பதிவாளர்களின் பார்வையைப் பார்ப்போம். அவருக்கு தகுதி இல்லை சரி. நமக்கு? சில கேள்விகள் கேட்டுக்கொள்வோமா?
1. இதுவரை நமக்கு சரியாக பட்ட மக்கள் போராட்டங்கள் எத்தனை இருக்கும்?
2. அதில் ஒன்றிலாவது நாம் கலந்து கொண்டு இருகின்றோமா?
3. அன்ன ஹசெய்ராவிடம் குறை உள்ளது , சாமியாரிடம் குறை உள்ளது, மாமியாரிடம் குறை உள்ளது?. அப்ப நம்மிடம்? குறை இல்லை என்று வாய் சொன்னால் போய் சொல்லும் குறை இருக்கின்றது என்பதை மனம் உணருமா?
4. யார் போரடினாலும் குறை சொல்லும் நாம் (நான்) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல தயாராக இருக்கின்றோமா?
5. உனக்கும் எனக்கும் வேலை இருக்கின்றது. அதனால் தான் என் குடும்பம் பிழைக்கின்றது என்றால், வேலை இல்லாதவன் போரடிவிட்டு போகட்டுமே? அதை குறைசொல்வதில் அப்படி என்ன ஆனந்தம்?
6. நீங்கள் மானசீகமாக நேசிக்கும் குறைகளற்ற நடிகனும் (அ) அரசியல்வாதியும் ஊழல் செய்பவர்களுக்கும் கருப்பு பணம் சேர்ப்பவர்களுக்கும் மரண தண்டனை (அ) ஆயுள் தண்டனை தர வேண்டும் என்று போராட்டம் செய்வார்கள?
7. உண்ணாவிரதமோ, காவலர்களின் அடி விழும் நடைப்பயணமோ நமது உடம்புக்கு தாங்காது என்று சொல்பவர்கள் தி நகரில் ஓர் இனத்துக்காக நடைபெற்ற கையெழுத்து போடும் போராட்டத்திலாவது கலந்து கொண்டீர்களா?
8. குறைந்த பட்சம் நான் 100 சதவிகிதம் போக்குவரத்து விதியை மதிப்பவன். இதுவரை ஒரு முறைகூட மீறியதில்லை என்று சொல்ல முடியுமா?
8. எல்லப்போரட்டங்களையும் குறை சொல்வதில் ஆர்வம் வருகின்றதா? மன நல மருத்துவர் யாரையாவது தெரியுமா?

ஒன்று போராடுவோம். அல்லது அமைதியாய் இருப்போம். அவர்கள் பிரபலம் ஆவதற்கு போராடுகின்றார்கள் என்றால்? நீங்கள் எதற்கு உங்கள் பதிவுகளை எழுதிக்கொண்டு இருக்கின்றீர்கள்? வலைத்திரட்டியில் இணைத்துகொண்டிருகின்றோம்?

அடுத்து வரப்போகும் கொடுமையை எதிர்க்க துணிவில்லாததால் இன்றைய கொடுமையை ஏற்றுக்கொள்வதில் ஆரம்பிகின்றது அடிமைத்தனம்.

தண்டோரா: நன்றி சொல்ல எந்த காரணமும் பெரிதாக இல்லை ஆயினும் நன்றி. முழுவதுமாக படித்ததற்காக...!

13 comments:

Sivamjothi said...

Very good one..

கிருத்திகன் said...

போராடுவதை விட விமர்சிப்பது இலகுவானது.

M.Mani said...

தாங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அன்னா ஹசாரே மற்றும் இந்தச்சாமியார் போராட்டங்களால் ஊழலுக்கு ஒரு விடிவு வரப்போவதில்லை. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுகிறது. அதைக்கண்டுதான் ஊழல் அரசு பயப்படுகிறது. அவர்களுக்கு தாளம் தட்டும் போலி மதச்சார்புவாத பதிவர்கள் அவரைக் கிண்டல் செய்கின்றனர்.

Ashwin-WIN said...

நான்தான் முதலா?
சுடுவதை ரொம்ப சுடுது.

Ashwin-WIN said...

//பொது நலத்தை முழு நேர வேலையாக செய்யும் (அரசியல்வியாதிகள்) இவர்கள் கோடிஸ்வரர்களாக இருக்கும் போது பணம் வாங்கிக்கொண்டு யோகா சொல்லித்தரும் சாமியார் (இல்ல மாமியாரோ) கோடிஸ்வரனாக இருப்பது எந்த வகையில் தவறு என்று நாம் சொல்கின்றோம்?//
உண்மைய புட்டுபுட்டு வைக்குறேலே. பதிவர்களே நல்லவற்றை ஆதரிப்போம் 49 வீதம் குறையிருந்தாலும்.

Ashwin Win
அஷ்வின் அரங்கம்

tshankar89 said...

Exactly the same content was in my mind. I was just amazed to see the statements from Digvijay/Sibal. Weather Ramdev is a right person or not, but his point on corrupted person shall be hanged or behind the bars for life, why can not be implemented. If this is implimented, then the first family to be affected will be Sonia & co. So...........

Kumaran said...

தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்....!
நல்லா இருக்கு.....!

Jey said...

உங்களின் இந்த பதின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு.

வாழ்த்துக்கள்.

என்னைப் புறுத்தவரை ஊழலுக்கு எதிராக யார் போராடினாலும் ஆதரவு உண்டு.

Jayadev Das said...

அருமையான கட்டுரை, போலிகளுக்கு வைத்தீர்கள் சரியான ஆப்பு.

Anonymous said...

Dear,

Excellent.

No words to say about your message.

They will shame for those who are comments against to Anna and Baba.

Jegan said...

நச்ச்..

yasaru said...

நெத்தியடி தல..

Unknown said...

உங்கள் எழுத்துக்கு நான் அடிமை!!தொடர்ந்து எழுதுங்கள்!!