Thursday, September 22, 2011

அட்டகாசமா அஞ்சு (5)படம் - இங்கேயே முழுசா பார்த்துடுங்க

என்ன வேலை பாருங்க, இந்த short film கு. வியாபாரம் ஆகாது, ஆனாலும் தரம் எப்படி இற்கு பாருங்க. ஒவ்வொரு ஷாட்டும் அட்டகாசம்.



ஜாலியா சிரிக்கலாம். ஆனாலும் தரம் குறைந்த அசைவூட்டம் இல்லை









ச்சே, பிரேம் பை பிரேம் கையாள வரைந்து படமா மாத்தி இசை சேர்த்து...........
படைப்பாளியை பாராட்டியே ஆகணும். 2d animation.






stop motion என்னும் தொழில் நுட்பம். அப்படின்னா என்ன னு தனியா ஒரு பதிவு எழுதிடலாம். அவ்ளோ வேலை இருக்கு.




படத்தை பத்தி விமர்சனம் எதுவுமே நான் எழுதலா இல்ல? அப்ப நீங்க எழுதுங்க, அதுக்கு தானே கமென்ட் பாக்ஸ் இருக்கு?

எந்த படம் ரொம்ப புடிச்சி இருக்கு?, எது மொக்கை? எது அழகு? எது திரும்ப பார்க்கனும் போல இருக்கு? ஏன் னு நீங்க எழுதுங்களேன்...!

( யப்பா , ஒரு வழியா ஈசியா ஒரு பதிவை எழுதி முடிச்சிட்டேன் )

Tuesday, September 20, 2011

நிர்கதியாய் நிற்கின்றோம் - காங்கிரஸ் (பின்னி எடுத்த polimer tv )


ஞாயிறு தோறும் பாலிமர் டிவியில் இரவு 9 மணிக்கு மக்களுக்காக என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதில் யாரவது ஒரு அரசியல்வாதியை பேட்டி (பின்னி) எடுப்பார்கள். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு (பச்சாதாபம்) எல்லாம் கிடையாது. போன வாரம் (18-09-2011) அன்று பேட்டிகொடுக்க வந்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஞானசேகரன் (முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்). மெதுவாக சிரிசிகிட்டே ஆரம்பிச்ச பேட்டி கொஞ்ச நேரத்துல சூடாகியது.
அவர் கொடுத்த பேட்டியில நினைவில் நிற்பது மட்டும்

* அந்த தொகுதியில நின்னா தோற்றுவிடுவோம் னு தெரிஞ்ச பிறகும் ஏன் நின்னீங்க?
அப்படி இல்ல, நிக்க மாட்டேன்னு சொன்ன பயந்து போய் ஒதுங்கிட்டதா சொல்லுவாங்க. போரில் போரிட சென்ற பிறகு வெற்றி அல்லது தோல்வி இரண்டில் ஒன்றை பார்க்கத்தான் வேண்டும்.
(போர் ..... அதுவும் நீங்க?)

*தங்கபாலுவை இந்த தேர்தலுக்கு முன்னாடியாவது மாத்தி இருக்கலாமே? (எரியற தீயில் எண்ணைய ஊற்றும் கேள்வி)
இல்ல இப்ப மாத்தினா உள்ளாட்சி தேர்தல்ல தோற்றுவிட்டால் (?) மீண்டும் புது தலைவரை போட சொல்லுவாங்க. அதனால மொத்தமா போட்டுக்கலாம் னு அவரையே தொடர்ந்து தலைவராக ஏற்றுக்கொண்டு வழி நடப்போம்.

*சட்ட மன்ற தேர்தல் தோல்வி எதிர்பார்க்கப்பட்டது என்று சொல்லும் நீங்கள் ஏன் தி மு க வோடு கூட்டணியை தொடர்ந்தீர்கள்?
மேல் இடத்திற்கு எடுத்து சொன்னோம். ஆனால் (அன்னை சோனியா காந்தி) அவர்கள் செய்யும் முடிவே இறுதியானது என்பதால் வேறு வழி இல்லாம போய்விட்டது.
(தொண்டனின் எண்ணத்தை கேட்காத கட்சி எல்லாம் ஒரு கட்சியா?)

* இந்த தருணத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி என்பது தற்கொலைக்கு சமமான முடிவு என்பது போல தோன்றுகின்றதே?
நீங்க என்னங்க, நாங்களே தனியா நிக்க முடிவு பண்ணி வெளிய வந்தா மாதிரி சொல்லறீங்க? அவரே (கலைஞர்) கூட்டனினு சொன்னார், அப்புறம் அவரே இல்லன்னு சொல்லிட்டார். வேறு வழி இல்லாம நிர்கதியாய் நிற்கின்றோம், தே மு தி க வந்தால், அல்லது யாராவது கூட்டனி குறித்து பேச வந்தால் நிச்சயம் கூட்டனி அமைத்து போட்டியிடுவோம் (பா ஜா கா கூட பேசி பாருங்க சார்). தனியா நின்னா கூட நல்லது தான். சீட் கேட்டு அடிக்கடி சண்டை போடற எல்லாருக்கும் தேர்தல்ல நிக்க வாய்ப்பு கொடுக்க இதுதான் சரியான தருணம்.
(அம்மா வாங்க, அய்யா வாங்க, என் போதைக்கு நீங்க தான் ஊறுகாய்)

* போர் குற்றம் செய்ததாக சொல்லப்படும் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்ததன் காரணம் என்ன?
(வாய் ரொம்ப நேரம் ரோலிங் ஆச்சு என்ன என்னவோ சம்பந்தம் சம்மந்தம் இல்லாம பேசிட்டு) அது நமது பண்பாடு. வந்திருப்பது எதிரியாக இருந்தாலும் நாம் அவர்களிடம் நாகரீகமாகத்தான் நடந்துகொள்ள முடியும்.

* சர்ச்சையில் சிக்கியுள்ள அவரை இந்தியாவுக்கு கூப்பிட அப்படி என்ன அவசியம்?
கடைசி வரைக்கும் பதில் வரல.

* ராஜீவ் கொலை வழக்கில் அவர்கள் மூவரை (சாந்தன் முருகன் பேரறிவாளன்) அவசரமாக (விசாரணை கமிசன் அறிக்கை வரும் முன்பு) தூக்கில் போட சொல்வதின் காரணம் என்ன ?
விசாரணை கமிசனுக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கும் தொடர்பு எதுவும் இல்லை. ஆதலால் அது வெளி வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல. (அப்புறம் எப்பவும் போல ரோலிங்)

பாலிமர் டிவி பார்க்கற வழக்கம் இல்லனா கூட சண்டே மட்டும் இரவு 9 மணிக்கு பாருங்கள்.

Saturday, September 17, 2011

சினிமாவில் விஷுவல் எபக்ட்ஸ் -part 2

முந்தைய பதிவிற்கு இங்கே சொடுக்கவும்.

அந்த பதிவில் கடைசியாக கிரீன் அல்லது ப்ளூ மேட்டில் (திரை பின்னணி) யில் வெள்ளை நிற புள்ளிகள் ஏன் அதன் பயன் பாடு என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன்.

வெள்ளை புள்ளிகள் காம்போசிட்டிங் (compositing) செய்ய பயன்படும் ட்ராக்கிங் (tracking) என்ற ப்ராஸஸிர்க்கு பயன்படுகின்றது. எளிமையாக சொல்லவேண்டுமானால், கிரீன் மேட் பின்னணியில் எடுக்கப்படும் காட்சியானது ஸ்டெடி கேமரா கொண்டு எடுக்கப்பட்டால் காம்போசிட்டிங் செய்யும் போது எளிமையாக அந்த பின்னணி நிறத்தை நீக்கிவிட்டு பின்னணியில் தேவையான ஒரு படத்தை வைத்துவிட்டால் போதும். கீழ் உள்ள வீடியோ இந்த வகை.




ஆனால் எடுக்கப்படும் கேமரா அசையும் படியான காட்சிக்கு தேவைபட்டாலோ, பின்னணி அசையும் படி இருந்தாலோ நாம் நமது வீடியோவில் எடுத்த காட்சியை பின்னணி நிறத்தை நீக்கி அப்படியே வைத்தால் இரண்டும் தனிதனி வீடியோ காட்சிகள் என்பது மிக எளிமையாக கண்டுபிடிக்கப்பட்டு விடும்.




இரண்டு காட்சிகளும் தனித்தனியாக ஆடிக்கொண்டிருக்கும். அது போல சிறு அசைவு கூட இது கிராபிக்ஸ் என்பதை பார்வையாளனுக்கு தெரியப்படுத்திவிடும். எனவே ஒரு வீடியோவின் அசைவுகளும் இன்னொரு வீடியோவின் அசைவுகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.





மேற்கண்ட வீடியோவில் கேமரா அசைந்தாலும் கூட காம்போசிட் செய்யப்பட்டு இருக்கும் அந்த இரண்டு சிறிய உருவங்கள் சரியாக தரையில் ஆடாமல் இருப்பது போல உள்ளதற்கு காரணம் tracking.



எப்படி track செய்வது:? ஒரு வீடியோவில் இருக்கற மூவ்மென்ட் ஐ அப்படியே எடுத்து இன்னொரு வீடியோவுக்கு வைக்கற வேலைதான் நாம இப்ப பார்க்க போற tracking. மேல இருக்கற வீடியோவில் கிரீன் மேட்டில் நிற்பவனின் வீடியோ ஆடுகின்றது அல்லவா? (கவனம் : கேமரா ஆடியதால் வீடியோ இப்படி தெரிகின்றது) அது ஒரு வீடியோ. இன்னொரு வீடியோ பின்னணியில் காம்போசிட் செய்து வைக்கப்பட்டுள்ள தீ எரியும் வீடியோ. காம்போசிட் செய்யப்படும் இரண்டு வீடியோக்களில் ஒன்று ( பெரும்பாலான நேரங்களில்) கம்புயூட்டரில் டிசைன் செய்து இருப்பார்கள். காரணம் லைவ் வாக எடுக்க முடிந்த காட்சிகளுக்கு எதுக்கு தேவை இல்லாமல் கிரீன் மேட்? அப்படி கணினியில் டிசைன் செய்து வீடியோவாக மாற்றும் போது எந்த அசைவுகளும் இல்லாதவாறு ரெண்டர் (வீடியோவாக மென்பொருளில் இருந்து மாற்றும் ப்ராசெஸ்) செய்வார்கள். அவ்வாறு கேமராவில் எடுக்கப்பட்ட காட்சி மற்றும் கணினியின் துணையுடன் வடிவமைக்கப்பட்ட காட்சி இரண்டையும் காம்போசிட் செய்ய பயன்படும் மென்பொருளில் (combustion, after effects, fusion, shake ) ஏதாவது ஒன்றில் ஏற்றி (import) செய்துகொண்டு, முதல் வீடியோ வில் உள்ள கிரீன் மேட்டை நீக்கிவிட்டால் (வெள்ளை புள்ளிகள் போகாது, ஏன் என்றால் அது வேறு வண்ணம்) பின்னணி எம்ப்டியாக (transprent) கிடைக்கும்.


பின்னர் இன்னொரு வீடியோவை செலக்ட் செய்து அந்த ப்ளூ மேட் வீடியோவில் உள்ள வெள்ளை நிற புள்ளிகளின் ஏதாவது சில புள்ளிகளை தேர்வு செய்து (bind - காகிதத்தின் அடியில் காந்தமும் மேல் புறம் இரும்பு தாதுக்களும் வைத்திவிட்டு காந்தத்தை நகர்த்தினால் மேல் உள்ள தாதுக்களும் நகரும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்) track ஐ தேர்வு செய்தல் வெள்ளை புள்ளிகள் ஆடும் அல்லது (ஒவ்வொரு படமாக , நினைவில் கொள்ளுங்கள் வீடியோ என்பது தொடர்ச்சியான படங்கள்) நகரும் அசைவிற்கேற்ப இந்த வீடியோவும் நகரும். இப்போது மேல் உள்ள lord of the wings வீடியோவை மறுமுறை பாருங்கள்.



இவ்வாறு track செய்து முடித்த பின்பு அந்த வெள்ளை புள்ளிகளை தனியாக நீக்குவார்கள். அது வேறு ஒரு தனி வேலை. சரி இந்த வீடியோவில் கேமரா ஒரு பக்கம் ஆடிக்கொண்டு இருக்கின்றது, அதனால் ஈசியாக track செய்து விட்டோம். ஆனால் கேமரா சுற்றி வருவதாக இருந்தால்?




அடுத்த பதிவில் 3D tracking பற்றி பார்க்கலாம்.

Friday, September 16, 2011

ரஜினி எப்படி ஒத்துகிட்டார்?

சந்திரமுகி படத்துல ரஜினி ஒரு குட்டி கதைய முதல் முறையா வடிவேலு கிட்ட சொல்லுவார். "ஒரு ஊருல ஒருத்தன் இருந்தானாம், அவனுக்கு எழுந்திரிச்சி நிக்கவே தெம்பு இல்லையாம், ஆனா ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம்..?" என்று வடிவேலுவை சொல்லுவார். அதுவும் இல்லாம ஜோதிகா "சொல்லறது ஒன்னு செய்யறது ஒண்ணுனு " ரஜினிய பார்த்து சொல்லுவாங்க.



ஆனா அதே கதைய திரும்ப சொல்லும் போது வடிவேலு ரஜினையை அது நீதான் பா என்று சொல்லுவார். அதாவது அந்த எழுந்திரிக்க முடியாத,...........?



ரஜினி எப்படி ஒத்துகிட்டார்?

Thursday, September 8, 2011

பேஸ்மன்ட் ஸ்ட்ராங், பில்டிங் வீக் - டாப் 10 தமிழ் திரைப்பட நடிகர்கள்

தலைப்பை பார்த்த உடனே புரிஞ்சி இருக்கும், ஆரம்பிக்கும் போது நல்லா ஆரம்பிச்சி பின்னர் காலுன்றி தமிழ் சினிமாவில் நிற்க முடியாமல் போன (அ) போராடிக்கொண்டிருக்கின்ற டாப் 10 நடிகர்களை (எண் வரிசைப்படி அல்லது என் வரிசைப்படி) வரிசைபடுத்தி இருக்கின்றேன்.

போட்டியில் பங்கேற்கும் நடிகர்கள் குணால், வினய், ஷாம், ரவி கிருஷ்ணா, ஜீவன், ஸ்ரீகாந்த், மனோஜ், ஜித்தன் ரமேஷ், விக்ரகாந்த், டேனியல் பாலாஜி, விஷ்ணு, பிரசன்னா, சிபி, சக்தி, அஜ்மல், பிரசாந்த், சாந்தனு, பரத், நகுல், சித்தார்த், அருள் நிதி, கிஷோர், பசுபதி, சம்பத்ராஜ். சுந்தர்.சி, எஸ் ஜே சூர்யா, சேரன், ஆகிய 26 நடிகர்கள் போட்டி போடுகின்றனர்.

முதலில் போட்டியிலிருந்து வெளியேறுபவர்களை பார்க்கலாம்.
சுந்தர்.சி , எஸ்.ஜே சூர்யா, சேரன்.






மூன்று பேருமே மிக பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்கள், நடிகராக சுந்தர் சி யின் தலைநகரம் ஓடியது போல அவர் நடித்த மீதி எந்த படமும் ஓடியதாக நினைவில்லை. அந்த படத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட் வடிவேலுவின் காமெடி. சூர்யாவின் வாலியும் குஷியும் போட்ட போடுல, தானே நடித்து எடுத்த படம் நியூ. ரகுமான் இசையும் சிம்ரனின் இடுப்பும் படத்திற்கு பக்க பலமா இருந்தாலும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட படம். அப்புறம் நடிச்ச படம் எதுவும் வேலைக்காகல. சேரன் தேசிய விருது வாங்கிய இயக்குனர். நடிக்க வந்து ஆட்டோகிராப் மட்டும் சக்கை போடு போட மத்ததெல்லாம் இவரை போட ஆனாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பவர். இந்த மூன்று பேருமே நடிக்க வந்த பின்பு தங்களுக்குரிய அடையாளங்களை இழந்தவர்கள். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இயக்குநராகி ஒரு கலக்கு கலக்க வாய்ப்பு இவர்களுக்கு உள்ளதால் பில்டிங்கும் ஸ்ட்ராங் ஆகும் என்று நம்புவோம்.

அடுத்து வெளியேறுபவர்கள் கிஷோர் பசுபதி சம்பத் ராஜ்.







மூன்று பேருமே எந்தவித கதாபாத்திரம் மற்றும் வில்லன் வேடங்களுக்கு நடிக்க தயங்குவதில்லை. கிஷோரின் பொல்லாதவன் திரைப்படமும் போர்க்களம் திரைப்படமும் மாறுபட்ட நடிப்புக்கு உதாரணம். பசுபதிக்கு தூளும் குசேலனும். சம்பத்க்கு கோவாவும் ஆரண்யகாண்டமும். மேலும் தமிழ் படம் இல்லையென்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துகொண்டு தமிழில் நல்ல வாய்ப்பு வந்தால் பிடித்து மீண்டும் ஒரு ரவுண்டு வர தயங்கவே மாட்டார்கள்.

அடுத்து வெளியே செல்ல நடையை கட்டிக்கொண்டிருப்பவர்கள் .

அருள் நிதி- வம்சம் ஓடினாலும் மற்ற எதுவும் ஓடாவிட்டாலும் எந்த கவலையும் இல்லை. நிதி இருப்பதால் படம் எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

பிரசன்னா சிபி அஜ்மல் : அஜ்மலை(கோ) தவிர மற்ற இருவரும் எந்த ஒரு பெரிய பட்ஜெட் படத்துலயும் நடிச்சதில்லை. தனியாக இவர்கள் நடித்த எந்த படமும் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை, ஹிட்டும் ஆகவில்லை. பேஸ்மேன்டே ஸ்ட்ராங் இல்லை. so rejected.

சாந்தனு - முதல் படமே ரகுமான் இசை. பாட்டு எல்லாம் ஹிட். ஆனா இப்ப வரைக்கும் நல்ல நடிகரா ஆகல. யருமே பட வாய்ப்பு கொடுக்கலைனா கூட அப்பா பாக்யராஜ் இருக்கார். பரத், நகுல் & சித்தார்த் - ஷங்கரின் பாய்ஸ் இவர்களுக்கு நல்ல பிரமாண்டமான அறிமுகம். சின்ன வயசு. கண்டேன் காதலை பரத்திற்கு சந்தானம் கொடுத்த ஹிட். நகுலுக்கு காதலின் விழுந்தேன் "நாக்க முக்க" பாடலால் குறைந்த பட்ச கவனம் இருக்கும் அவர்மேல் தயாரிப்பாளர்களுக்கு. இவரும் தனியா எந்த ஹிட்டும் கொடுத்ததில்லை. சித்தார்த் வேற மொழி பக்கம் ஓடி விட்டார். நான்கு பேருக்குமே சின்ன வயசு. எப்போதாவது ஜெய்க்க வாய்ப்பு உள்ளது.

பிரசாந்த் - சரியான வயது, உடல் நிலை, ரொம்ப பெரிய ஹிட்ஸ் எல்லாம் கொடுத்தும் இப்போதைக்கு இவருக்கு ஸ்க்ரீன் அலர்ஜி. நிறைய ஹிட்ஸ் கொடுத்து விட்டதால் இவரும் பட்டியலிலிருந்து வெளியே போகின்றார்.

மீதி இருப்பவர்களை கொண்டு டாப் 10

பத்தாவது இடம் - விக்ரகாந்த்

விஜயின் தம்பின்னு அறிமுகமாகி விஜய் சூர்யா போல விஜயகாந்த் கூட ஒரு படம் நடிச்சி ஹிட் ஆகலாம்னு பார்த்து வில்லன் ரோலுக்கு போய் இப்ப எங்க போறதுன்னு தெரியாம இருப்பவர்.

ஒன்பதாவது இடம் - மனோஜ் பாரதிராஜா

பெரிய இயக்குனரின் மகன். அவர் இயக்கத்தில் தாஜ்மஹால் ஒரு அறிமுக படம். ரகுமான் இசை, வைரமுத்து பாடல்னு ஆடியோ அட்டகாசமா போனாலும் படம் சரியாக போகவில்லை. அப்புறமும் விடாம ஈரநிலம் னு ஒரு படம் எடுத்தார் அப்பா இயக்குனர் இமயம். அப்பவும் சரி படல. அப்புறம் நிறைய படங்களில் நடிச்சி ஒரு நேரத்துக்கு அப்புறம் ச்சே போ னு நடிக்கரத்தை விட்டுட்டு இயக்கத்தின் பக்கம் போய்ட்டார்.

எட்டாவது இடம் - ஜித்தன் ரமேஷ்

அப்பா பெரிய தயாரிப்பாளர். ஜித்தன்னு ஒரு பெரிய படம். அதனாலேயே பெயர் கூட ஜித்தன் ரமேஷ். பாட்டு எல்லாம் ஹிட். ஆனா என்ன புண்ணியம், வசனம் பேச சொன்ன படிக்கச் ஆரம்பிச்சிடுறார். இவரை போலவே அருண் விஜய். பெரிய இடத்து பசங்களா இருந்தாலும் ஜெயிக்க முடியாம கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள். பில்டிங்க்ஸ் வீக்.

ஏழாவது இடம் - ஸ்ரீகாந்த்

முதல் படம் ரோஜா கூட்டம். ஆஸ்கார் பிலிம்ஸ் நாலர கோடி ரூபாய் தயாரிப்பில் பரத்வாஜ் இசையில் ஹிட் ஆன ஸ்ரீகாந்தின் முதல் படம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி பார்த்திபன் கனவு நல்ல ஹிட். அதோட போனவர் ரெண்டு ஹீரோ மூனாவது ஹீரோனு நடிக்க வேண்டிய அளவுக்கு ஆளாகிட்டார். நல்ல லுக் இருந்தும் ஏன் இப்படி இருக்கார்னு அவருக்கே தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இல்ல. (ரொம்ப வெள்ளையா இருக்கார்) ஹும், இனி தனியா வந்து ஹிட் கொடுக்க வாய்ப்பு ரொம்ப கம்மி.

ஆறாவது இடத்தில் ஷாம்

12 B னு ஜோதிகா சிம்ரன் கூட அட்டகாச அறிமுகம். ஜீவாவின் இயக்கம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை. வித்தியாசமான திரைக்கதை. அப்புறம் என்ன என்ன படமோ நடிச்சி பார்த்தும் முன்றாவது வேறு மொழிக்கு சென்று ரெண்டாவது ஹீரோ லிஸ்டில் சேர்ந்துட்டார். இவர் முகத்தில் பல தரப்பட்ட பாவனைகள் (expressions) வந்து நான் பார்த்தது இல்லை. இனி கஷ்டம் தான்.

5 மற்றும் நாலாவது இடம் - டேனியல் பாலாஜி & ஜீவன்

நல்லவர்களாக திரைப்படத்தில் அறிமுகமாகி வில்லனா மாறின பிறகு ஏல்லோரளையும் கவனிக்க பட்டவர்கள். திரும்ப நல்லவனா மாற ஆசைப்பட்டதால இருந்ததையும் இழந்தவர்கள். வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் பாலஜிக்குனா, காக்க காக்க ஜீவனுக்கு. இனி இவர்கள் என்ன செய்வதாய் உத்தேசமோ தெரியவில்லை. வில்லனாய் மாறினால் மறுபடியும் ஒரு ரவுண்டு வரலாம்.

மூன்றாவது இடம் விஷ்ணு

வெண்ணிலா கபடி குழு. ஒரு நல்ல அறிமுகம். இயக்குனர் சுசீந்திரனுக்கும். பாட்டு எதுவும் சொல்லிகொள்ளும்படியா இல்லனாலும் நல்ல ஹிட். அப்புறம் துரோகி, பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் னு என்ன பண்ணாலும் தியேட்டருக்கு கூட்டம் வராம போக என்ன பண்ணறதுனு திட்டம் போட்டுகொண்டிருகின்றார். I G புள்ளையா இல்லாம இருந்தா அந்த முதல் பட வாய்ப்பு கூட கிடைச்சி இருக்காதுன்னு தான் நான் நினைக்கி்றன். குரலும் சரி இல்ல . நடிப்பும் சொல்லிக்கொள்ளும் படியா இல்ல. இனி தனி ஹீரோ மாஸ் படம்னு எல்லாம் கனவு காண்பது சொந்த காசில் மட்டுமே முடியும்.

இரண்டாவது இடம் - வினய்

உன்னாலே உன்னாலே எவ்ளோ பெரிய மியுசிக்கல் ஹிட். ஜீவா இயக்கம். ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக். வெளி நாடுகளில் கண்ணுக்கு குளிர்ச்சியாக படம்பிடிக்கப்பட்ட படம். அப்புறம் வந்த படங்களில் ஜெயம் கொண்டான் படம் மட்டும் சுமாரா போக அதோடு அவரும் போய்ட்டார். இனி தமிழ் படங்களில் பார்பதே கடினம் தான்.

முதல் இடம் ரவிகிருஷ்ணா

7G ரெயின்போ காலனி. படம் தாறுமாறா ஓடின படம். யுவன் மியூசிக் செல்வா இயக்கம்னு பட்டைய கிளப்புன படம். பாட்டு எல்லாம் இப்ப கூட ரவியையும் சோனியா அகர்வாலையும் ஞாபகபடுத்தும். அதுக்கு அப்பறம் இவர் ஒரு டம்மி ஆகியது மிக பெரிய ஆச்சர்யம். குரல் இவருக்கு ரொம்ப பெரிய மைனஸ். ஆரண்ய காண்டம் படத்துல கரெக்டா செட் ஆச்சி. இவரும் தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் இனி கஷ்டம் தான்.

இவர்களின் குறிப்பிட்ட படங்கள் நல்ல படியா போனதுக்கு இவர்கள் தான் காரணம் என்று சொல்ல முடியாது. அதிகபட்ச காரணம் கதையும் திரைக்கதையும் இசையும், ஒளிப்பதிவும் தான். வேறு யாரவது புது முகம் நடித்து இருந்தாலும் படம் ஓடி இருக்கும். எனவே கதையே சினிமாவில் முக்கியம் என்று நிருபித்த டாப் 10 நடிகர்கள் இவர்கள். ஆனாலும் கதைக்கு இவர்கள் கொஞ்சம் பொருத்தமாகவே இருந்தார்கள். உதாரணமா ரவிகிருஷ்ணா கீச் கீச் என்று பேசினாலும் 7G கு அது நல்லா செட் ஆச்சி. அந்த கதையின் கதா பாத்திர வடிவமைப்புக்கு அது நன்றாகவே பொருந்தியது.

குணால விட்டுட்டோமே? காதலர் தினம் . ப்பா...! கதிர் இயக்கம், ரகுமான் இசை, ஸ்ரீ ராம் ஒளிப்பதிவு, am ரத்னம் பிரமாண்ட தயாரிப்பு. என்ன ஹேர் ஸ்டைல், கன்னத்துல குழி விழும் சிரிப்பு. பாவம் வாழ கொடுத்து வைக்கல. வீணா தற்கொலை பண்ணிக்கிட்டு போய் சேர்ந்துட்டார். இனி எங்கிருந்து நடிப்பது.?

Tuesday, September 6, 2011

சினிமாவுல விசுவல் எபக்ட்ஸ் (visual effects) எப்படி பன்றாங்கனு தெரியுமா?

வணக்கம் நண்பர்களே..!

இது blue matte டெக்னாலாஜி பதிவின் தொடர்ச்சி. விசுவல் எபக்ட்ஸ் னா என்னனு தெரிஞ்சிக்கணும்னு முடிவு பண்ணி இந்த பக்கம் வந்த பிறகு இந்த விசயங்களை முழுசா தெரிஞ்கிக்கணும் இல்ல? அப்ப மேல இருக்கற லிங்க் ஐ கிளிக் பண்ணி படிச்சி முடிச்சிட்டு இங்க வாங்க. தொடரலாம். நேரம் இல்லப்பா அப்படின்னு சொல்லறவங்க தொடருங்கள். இந்த பதிவின் முடிவில் அந்த பதிவுக்கு போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வர வைக்க முயற்சி செய்கின்றேன்.

அந்த பதிவை படிச்சிட்டு வந்துடீங்களா? அந்த பதிவில் கடைசியாக கேட்டு இருந்த கேள்விகள், 1. blue matte தவறாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலோ, ஒளி வடிவமைப்பு போன்ற இன்ன சில பிற விசயங்களில் தவறு நடந்து இருந்தாலோ என்ன செய்வது?

படத்தை நெகடிவில் (பிலிம் = ஒளிப்பதிவு) பதிவு செய்து முடித்து லேப் சென்று புராசசிங் செய்த பின்பு VFX நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்த பின்பு அங்கு அந்த நீல நிற பின்னணியை அகற்ற முற்படும் போது (matte remove) சரியாக வரவில்லைஎன்றால் நமக்கு தேவையான object இன் முனைகளில் (EDGE) நீல நிறம் தெரிய வாய்ப்பு உள்ளது.

மீண்டும் எல்லாவற்றையும் சரி செய்து படப்பிடிப்பு நடத்த அதிகம் பொருட்செலவு ஆகும் அல்லவா? எனவே அந்த எண்ணத்தை கை விட்டுவிட்டு அடுத்த தொழில் நுட்பத்திற்கு செல்லலாம்.

Rotoscoping :

இந்த தொழில்நுட்பம் அதிகமாக திரைப்படங்களில் பயன்படுத்தபடுவது. திரைப்படம் என்பது தொடர்ச்சியான புகைப்படம் என்பதை அறிவீர்கள் தானே?

ஒரு நொடிக்கான படத்தில் 24 தொடர்ச்சியான அசைவுகள் நிறைந்த புகைப்படம் இருக்கும். அதை கணினியில் தொடர்ச்சியாக தரவிறக்கம் செய்து அதற்கென உள்ள மென்பொருளில் ஏற்றி விடுவார்கள். பின்னர் முதல் படத்தில் தேவையான பொருளை சுற்றி மெதுவாக வரைவார்கள். அங்கு வரைதல் என்பது தேவையானவற்றை மட்டும் தெரிவு செய்வதாகும்.
தெரிவு செய்த பின்பு வரும் அந்த கோட்டை (path) என்று அழைப்பார்கள். அதில் வரும் அந்த புள்ளிகள் தான் அந்த பொருளின் வடிவத்தை நிர்ணயிக்கின்றது. அந்த புள்ளிகள் ஆங்கர் (anchor points) என்று அழைப்பார்கள். இப்போது முதல் படத்தில் தேர்வு செய்து விட்டார்கள் அல்லவா? இந்த முதல் படத்திற்கும் அடுத்த படத்திற்கும் சிறிய மாற்றம் (movement) மட்டுமே வரும். எனவே அடுத்த படத்தில் (frame) இதே கோட்டைக்கொண்டு அனிமேஷன் முறையில் அந்த சிறிய மாறுபாட்டை மட்டுமே செய்வார்கள். புரியவில்லை என்றால் தொடர்ச்சியாக 24 படங்களை போடோஷோப் மேன்பொருளைகொண்டு வெட்டி எடுப்பதை கற்பனை செய்து பாருங்கள்.

அப்ப அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? முதல் படத்தை ஏற்கெனவே தெரிவே செய்து விட்டதால் இரண்டாவது படத்திற்காக மீண்டும் தெரிவு செய்ய தேவை இல்லை. முதல் படத்தின் அந்த கோட்டை மட்டும் சிறு மாற்றம் செய்தால் போதும். நேரம் மிச்சம். பயன்படும் மென் பொருள் mocha . இது adobe தயாரிப்பில் இப்போது கிடைக்கின்றது. இப்போது வந்துள்ள adobe cs5 இல் இதை மேலும் எளிமை படித்தி இருகின்றார்கள். முதல் படத்தை மட்டும் நாம் தெரிவு செய்தால் போதும். தொடர்ச்சியான படங்களை அதுவே tracking முறையில் தெரிவு செய்துகொள்கின்றது.

தெரிவு செய்து முடித்த பின்பு அதன் பின்னணியில் ஏதாவது ஒரு அனிமேஷன் கிளிப்பிங்க்சையோ அல்லது தேவைப்படும் பின்னணியையோ வைத்து விடுவார்கள்.



இரண்டாவது கேள்வி. நீல அல்லது பச்சை திரையில் ஏன் அந்த வெள்ளை புள்ளிகள்? ஏற்கெனவே இதை படிச்சதே செம குழப்பமா இருக்கு இல்ல? அடுத்த பதிவில் பார்க்கலாம் அந்த (tracking for compositing) தொழில் நுட்பத்தை.

இங்க தசாவதாரம் மேக்கிங் உள்ளது.