Wednesday, January 26, 2011

BOYS SONG EFFECT-Time Slice

வணக்கம் நண்பர்களே.
மன்மதன் அம்பு திரைப்படத்தின் நீலவான பாடலுக்கு பிறகு நாம் தெரிந்து கொள்ள போகும் இரண்டாவது தொழில் நுட்பம் இது. BOYS திரைப்படத்தில் எகிறி குதித்தேன் என்ற பாடலில் கதை மாந்தர்கள் பாடிக்கொண்டு இருக்கும் போது தீடிர் என்று அந்தரத்தில் மிதப்பது போல நின்று விட்டு camera angle சுற்றி வந்த உடனே மீண்டும் தரையை வந்து அடைவார்கள் அல்லவா? அதை பற்றியது தான் இந்த பதிவு . அந்த தொழில் நுட்பத்தின் பெயர் Time slice . ( bullet time) இன்னும் சில பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு. அதற்க்கான இடம் எப்படி தயார் செய்யப்படுகின்றது என்பதை பார்க்க.
ஒரு சின்ன demo reelஒரு அட்டகாசமான demo reelஒரு superb addஇது matrix திரைப்படத்தில் இருந்து முதன் முதலில் உபயோகோப்படுத்த பட்டது என்பார்கள்.சரி. இவ்வளவு வீடியோ வையும் பார்த்த பிறகும் புரியவில்லையா?

Red Color - video camera
blue color - still camera
green color - action area
ஒரு காமேரவிலிருந்து பார்த்தால் இப்படித்தான் தெரியும்.
நடிகர்கள் நடித்துக்கொண்டு இருக்கும் பொது இரண்டு video காமெராவும் ஒளிப்பதிவு செய்துகொண்டு இருக்கும். அதே நேரத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட action freeze ஆக வேண்டும் என்று இயக்குனர் நினைகின்றரோ அந்த movment வந்த உடன் அந்த மற்ற ஸ்டில் கேமரா ஒளிப்பதிவு செய்ய வைக்கப்படும். அவை அனைத்திற்கும் ஒரே சுவிட்ச் தான் இருக்கும். எனவே அவை அனைத்தும் ஒரே action னை தான் படம் பிடிக்கும். ஆனால் பல்வேறு தொடரச்சியான கோணங்களில். மீண்டும் ஒரு முறை முதல் 3 படக்காட்சிகளை பார்க்கவும். பின்னர் video படத்தொகுப்பின் (editing) போது இந்த வரிசையில் தொகுக்கப்படும்.


ஆனால் இங்கே எல்லாம் சரியாக இருந்தாலும் ஒரு கேமரா வழியே பார்க்கும் போது இன்னொரு கேமரா தெரிகின்றது அல்லவா?
ஆம் முடிந்த வரை அது போல தெரியாதவாறு கேமரா கோணத்தை அமைப்பார்கள். மீறி தெரிந்தால் ?

1. 1. Blue matte technology அல்லது 2. Roto scoping . தேவைப்படும் .இப்போதே பதிவு பெரியதாகி விட்டதால் இன்னொரு பதிவில் பார்க்கலாம். மீண்டும் ஒருமுறை video வை பார்க்கலாமே?

Tuesday, January 18, 2011

Machete-2010 ஒரு தலைவன் இருகின்றான்....!யாராவது இது கமலின் அடுத்த படத்தின் கதை என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..!

இரண்டு அண்டை நாடுகள் உண்டு ( உங்களுக்கு தெரிந்த இரண்டு நாடுகளின் பெயர் example கு இந்தியா - இலங்கை அப்படினு கூட எடுத்துக்கலாம் அதற்கு நான் பொறுப்பல்ல)

இதில் ஒரு நாட்டில் ஒரு அரசியல் வாதி (ஒரு தலைவன் இருகின்றான்....!) உண்டு
அவர் அங்கே ஒரு உயரிய பதவியில் இருகின்றார்
அவருக்கு உதவி செய்ய ஒரு தொழில் அதிபர் (ரவுடி னு கூட சொல்லாம் போல) உண்டு. அவருக்கு கட்டளை இட போதை பொருட்கள் விற்கும் தாதா ஒருவர் உண்டு. இவர்கள் இருவரும் அண்டை நாட்டை சேர்ந்தவர்கள் . அந்த தாதா தான் போதை பொருட்களை அவர் நாட்டில் இருந்து இங்கே கொண்டு வந்து விற்று இந்த அரசியல் வாதிக்கு பங்கு கொடுத்து வைத்து இருப்பார்.

அரசியல் வாதியின் பொழுது போக்குகளில் துப்பாக்கி சுடுதலும் உண்டு. அதாவது அண்டை நாடுகளில் இருந்து இவர்கள் நாட்டுக்கு (தரை வழியாக) வருபர்களை சுட்டு விளையடிகொண்டு இருப்பார். அதற்கு அந்த எல்லை பாதுகாப்பு படை துறை தலைவரும் உடந்தை. ஏனென்றால் அரசியல் தலைவர் தானே அவரை நியமித்து இருப்பார்? (உதரணமாக நீங்கள் ஊழல் வழக்கு யார் மேல உள்ளதோ அவர் தான் ஊழல் கண்காணிப்பு துறை தலைவராக இந்தியாவில் இருப்பதை நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கின்றேன்)
அரசியல்வாதி செய்யும் அனைத்து வேலைகளையும் ? தொழில் அதிபர் படம் பிடித்து வைத்து இருப்பார் .

இந்த நிலையில் அண்டை நாடுகளில் இருந்து இங்கே வந்து பிழைத்துக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் ஒரு குழுவாக செயல் பட்டுக்கொண்டு இருப்பார்கள். முடிந்த வரை புதிதாக வருபவர்களுக்கு வேலை தங்குமிடம் எற்படுத்தி கொடுப்பார்கள். இவர்களுக்கு தன்நாட்டு மக்கள் கொல்லபடுவது தெரியும். இருந்தாலும் இந்நாட்டு அரசையும் அந்த எல்லை பாதுகாப்பு துறை தலைவரையும் கொல்வதற்கு (போர் புரிவதற்கு ) நேரம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

இந்த நிலையில் இங்கே தேர்தல் வரும். அரசியல்தலைவர் மேடை பேச்சுகளில் தன் இனம் தன் மொழி தன ஜாதி என்று அவர் நாடு மக்களிடம் பேசிக்கொண்டு இருப்பார். இருந்தாலும் இவர் தவறி கூட தோற்றுவிட கூடாது என்பதற்காக ஒரு நாடகம் அரங்கேறும். ஒரு வெளிநாட்டுகாரனை வைத்து இந்த தலைவரை கொல்ல திட்டம் இந்த தொழில் அதிபரால் தீட்டப்படும். அவன் அங்கு இவரை கொல்ல வரும் போது வேறு ஒருவன் இவனை சுட்டு விட்டு அந்த அரசியல் தலைவரை காலில் சுட்டு விடுவான். பழி வெளிநாட்டுகாரன் மேல் விழும். அரசியல் தலைவர் அனுதாப ஓட்டு வாங்கி ஜெய்துவிடுவார்.

உள்நாட்டு போலிஸ் இவனை தேடும். அந்த தொழில் அதிபரும் இவனை தேடுவான். எங்கே உண்மையை சொல்லிவிடுவானோ என்று. பின்பு நாயகனை(வெளிநாட்டுகாரன்) அந்த நாட்டில் தங்கியுள்ள அந்த குழுவை சேர்ந்த பெண் ஒருத்தி காப்பாற்றி தன வீட்டில் தங்க வைப்பாள். வில்லன்கள் அந்த வீட்டை கண்டு பிடித்து விட அங்கு இருந்து தப்பி ஓடி பின்பு எப்படி அவர்களை பழி வாங்குகின்றான் என்பதை திரையில் பாருங்கள்.

படத்தின் பெயர் Machete 2010
முழு நிர்வாண காட்சிகள் உள்ள படம்
உடலுறவு காட்சிகள் இல்லை
பேரல் கணக்குல ரத்தம் ஓடும்
தலையை கூட நாலு துண்டா வெட்டுவாங்க
குடலை புடுங்கி மாலையா போடறதுக்கு பதில் வேற ஒன்னு நடக்கும்
கடைசியில் அந்த அரசியல்வாதிக்கு நேரும் மரணம் இங்கே நிறைய பெயருக்கு நடந்தால் ரொம்ப நல்ல இருக்கும்னு நீங்க நினைச்சா அதற்கு நான் பொறுப்பல்ல
குழந்தைகளோடு நிச்சயம் இந்த படத்தை பார்க்க வேண்டாம்
உங்களுக்கு எதிர்பாராத காட்சிகள் நிறைய இருக்கும்
நம்பி பார்க்கலாம் செம ரத்தம் சாரி செம சூப்பர்
நம்ம அரசியல் வாதி எப்படி பட்டவர்கள் னு நிறைய காட்சிகள் இருக்கு

ஒரு முக்கிய உரையாடல் ஓன்னு வரும்
பாதிக்க பட்டவர்கள் சார்பில்

We didn’t cross the border
The border crossed us
இது எப்ப எல்லாருக்கும் புரிய போதோ தெரியல.

ஒரு வேலை நீங்க already இந்த படத்தை பார்த்துட்டு இருந்தால் ஒன்னும் கவலை பட வேண்டாம்.

shooter 2007 திரைப்படத்தை பார்க்கலாம்
இதுவும் செம surprice படம்நம்ம நாட்டுல நடக்கறதை பத்தி வெளிநாட்டுகாரன் எல்லாம் படம் எடுக்கறான்.
இங்க இருக்கறவங்க?
ம் என்னத்த சொல்ல?

போயிட்டு 75 வது படத்தை பாருங்க
அப்பவாவது உங்களுக்கு தேச பற்று வருதானு பார்க்கலாம்(யாரையும் திட்டாம பதிவு போடறது எவ்ளோ கஷ்டமா இருக்கு)

Tuesday, January 11, 2011

மன்மதன் அம்பு - நீல வான ஆச்சர்யம்..!

வணக்கம் நண்பர்களே...
இது மன்மதன் அம்பு திரைப்படத்தின் விமர்சனம் அல்ல. பலர் இதைபற்றி எழுதி முடித்துவிட்டதால், அத்திரைப்படத்தில் நான் பார்த்த , எனக்கு ஆச்சர்யம் தந்த ஒன்றை பகிர்ந்து கொள்ள இந்த பதிவு. இது எத்தனை பேருக்கு ஆச்சர்யம் தரும் என்று எனக்கு தெரியாது (காரணம் பின்பு சொல்கிறேன்).எப்போதும் திரைப்படத்தின் சென்சர் போர்ட் சர்டிபிகேடில் இருந்து எண்டு கார்டில் ஆடியோ கம்பெனியின் லோகோ கீழிருந்து மேலே போகும் வரை பார்க்க ஆசைபடுவேன். ஆனால் அது நடக்காத காரியம். அதை பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

இந்தமுறை நண்பர்களோடு பார்க்க திட்டமிட்டு இருந்ததால் அரை மணி நேரம் தாமதமாகத்தான் உள்ளே சென்றோம். திடீர் திடீர் என்று சிலர் சிரித்தார்கள். புதிதாய் வந்த எங்களுக்கு சரியாக புரியவில்லை. (ஒருவேளை ஏற்க்கெனவே அரைமணி நேரம் உள்ளே இருந்ததால் பழகிட்டு இருப்பங்களோ ?). உபயம் LIVE AUDIO REC ..! சரி விசயத்திற்கு வருவோம்.

கமலும், மேலை நாட்டு பெண்ணும் (பெயர் தெரியவில்லை, தெரிந்தாலும் நம் வாயில் நுழையப்போவதும் இல்லை) தோன்றும் அந்த நீ........ வானம் பாடல் தான் நான் சொல்லவந்த மன்மதன் அம்பு - நீல வான ஆச்சர்யம்..! ஒரு நிமிடம் யோசித்து விட்டு பின்பு தொடரவும்...

உங்களுக்கு இரண்டு ஆச்சர்யங்கள் தோன்றி இருக்கலாம் .
1. மேலை நாட்டு பெண் .?
ம்ம் ! (ஒரு வேலை இந்திய நாட்டு பெண் சலித்து விட்டு இருக்கலாம்.... கவனிக்கவும் .. ரசிகர்களுக்கு )
ஆனால் அதை கூட மதராசப்பட்டினத்தில் செய்து விட்டார்கள் . அப்ப அது இல்ல . பின்ன அடுத்து என்னவா இருக்கும்?
2. பாடல் ஒளிப்பதிவு பின்னோக்கி செல்லும் யுக்தி ?
அதை கூட அலை பாயுதே , சித்திரம் பேசுதடி போன்ற படங்களில் செய்து விட்டார்கள் அல்லவா?
உங்கள் பதில் ஆமாம் என்று இருந்தால் , இதனால் தான் நான் முதலில் சொன்னேன். “இது எத்தனை பேருக்கு ஆச்சர்யம் தரும் என்று எனக்கு தெரியாதுஎன்று!

சரி அதில் நான் கண்ட ஆச்சர்யம் .

அந்த பாடலை நன்றாக கவனித்தால் அதில் கமல் உதட்டசைவு (lip sync) சரியாக இருக்கும். அதாவது ஒளிப்பதிவு பின்னோக்கியும் ஒலிப்பதிவு முன்னோக்கியும் இருக்கும் . நான் முன்பு சொன்ன மற்ற இரண்டு படங்களில் உதட்டசைவு இருக்காது. காரணம் உதட்டசைவு என்பது ஒலி சம்பந்தப்பட்டது. பின்பு அதுவும் பின்நோக்கி சென்று விடும். பின்பு எப்படி இது சாத்தியமாகியது?

இது பற்றி தெரிந்து கொள்ள சில அடிப்படை விசயங்களை தெரிந்து கொள்வோம்
ஒளிப்பதிவு என்பதில் சாதரணமாக ஒரு கேமரா வில் 24 fps (fps = frames per second) படம் பிடிக்கப்படும். தேவைபடும் காட்சிகளில் 48 fps ல் படம் பிடித்து அதை ஒரு செகண்ட்க்கு 24 fps என்று மாற்றும் போது நாம் கேமரா முன்பு 1 sec க்கு செய்த மூவ்மென்ட் திரையில் 2 செகண்ட் வரும் (slow motion). அதையே 12 fps என்று படம் பிடித்து 24 fps என்ற வேகத்தில் பார்த்தல் நாம் செய்த மூவ்மென்ட் மிக வேகமாக ஓடும் . பெரும்பாலும் action காட்சிகள் இப்படித்தான் படம்பிடிக்க படுகின்றது.

ஏன் இதை சொல்ல வந்தேன் என்றால், இந்த பாடல் முழுவதும் slow motion இருக்கும். எனவே இந்த பாடல் 48 fps இல் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு இருப்பீர்கள் . அதன் காரணமாக அவர்கள் சாதரணமாக ( 4 நிமிட காட்சிக்கு 2 நிமிடம்) நடித்தால் போதுமானது . ஆனால் உதட்டசைவு சரியாக இருக்க வேண்டும் அல்லவா? அதுவும் பின்னோக்கி...! முன்னரே நாம் இரண்டு நொடிக்கான காட்சியை ஒரு நொடியில் படம் பிடிக்க முடிவு செய்து விட்டோம் (48 fps because of slow motion). அப்போ ஒலி யில்? அதையும் இரண்டு நொடிக்கான பாடலை ஒரு நொடியாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் 4 நிமிட பாடல் 2 நிமிட பாடலாக வேகமாக ஓடிவிடும். (சில REMIX பாடல்களில் செய்யப்படும் யுக்தி இது). சரி அதையும் மாற்றி விட்டோம். அடுத்து ?


இது பின்னோக்கி செல்லும் பாடல் என்பதால் பாடலை முன்னோக்கி ஒலிப்பதிவு செய்து பின்பு மென்பொருள் உதவியுடன் அதை பின்னோக்கி மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் நமக்கு ஒரு புதிய மொழி கிடைக்கும். ஆனால் சத்தியமாக புரியாது. அப்படி மாற்றிவிட்டு அதை எழுத்து வடிவமாக்குவது மிக மிக கடினம். ஆனால் வேறு வழி இல்லை. LIP sync க்காக அதை எழுதி மனப்பாடம் செய்து ஒளிப்பதிவின் பொது பின்னோக்கி இருக்கும் பாடலை உதட்டசைக்க வேண்டும். பின்னர் ஒளிப்பதிவை மென்பொருள் உதவியுடன் பின்னோக்கி இருப்பது போல் மாற்றுவார்கள். அப்போதுதான் ஒளிப்பதிவை பின்னோக்கி மாற்றும் போது ஒலி (lip Sync) முன்நோக்கி வரும். அப்புறம் எடிட்டர் வேலை.. . ஒளியையும் ஒலியையும் சேர்ப்பது தான் .

அப்பா அப்பா அப்பா......
இப்பவே தலை சுத்துது இல்ல? புரியலைனா இன்னொரு முறை படிங்க பாஸ் !புதிதாய் யோசித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் என் சார்பில் !
http://www.youtube.com/watch?v=bxNJHuM0Js0

வாழ்த்துக்கள் ரவிக்குமார் கும் கமலுக்கும் .
(நான் சொல்லும் பெரிய மனிதர்கள் பெயர் பின்னால் எல்லா இடத்திலும் திரு அல்லது சார் என்பதை சேர்துக்கொள்ளவும்)

இன்னொரு விஷயம் .
மேலை நாட்டு பெண்ணை பயன் படுத்தாமல் போய் இருந்தால் பின்பாதி ஒரு காட்சியில் அவர், அப்பெண் பேசும் மேலை நாடு மொழியை அக்கப்பலில் பணிப்பெண் பேசும் போது இவராலும் பதில் சொல்ல முடியாமல் போய் இருக்கும். திரிஷா inspire ஆகி இருக்க மாட்டார்கள். மேலும் கமலின் காதலை அக்காட்சியில் த்ரிசாவால் புரிந்து கொள்ள முடியும். மொழி கற்றுக்கொள்வது என்பது அப்பெண் மீது கொண்ட காதலால் வந்தது போன்றது தான் அந்த காட்சி. இது திரைக்கதை யுக்தி.