Wednesday, June 1, 2011

சிம்புவின் சிறந்த 10 திரைப்படங்கள்காதல் அழுவதில்லை சாரி (மன்னிக்கவும்) அழிவதில்லை யில் தொடங்கி இப்போது வெளி வந்துள்ள வானம் திரைப்படம் வரையிலான 13 திரைப்படங்களில் சிம்புவின் சிறந்த 10 திரைப்படங்களை தொகுத்துள்ளோம். இதை தாண்டி குழந்தை நட்சத்திரமாகவும், நட்புக்காகவும் (கெஸ்ட் அப்பியரன்ஸ் - நான் சரியாதான பேசறன்?) பல படங்களில் நடித்து இருக்கின்றார் என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகின்றது.மேலே பார்த்த வீடியோ (காணொளி) தந்தையும் மகனும் நடித்தது . சிலர் இதை ஆஸ்கார் பெர்போர்மென்ஸ் (வெளிப்படுத்துதல், நடித்தல்) என்று கிண்டல் செய்தாலும் அந்த படத்தின் டைட்டில் கார்டில் (பெயர் போடும் முதல் காட்சி) அவரது பெயர் இடம் பெற்றுள்ளதால் இவர் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகின்றது. ஆனால் கீழ்காணும் காணொளி இடம்பெறும் படத்தை பாருங்கள். அதில் குழந்தைகளின் உணர்வு வெளிப்பாடுகளை. கவனம் : நான் யாரையும் கம்பேர் (ஒப்பீடு) செய்ய சொல்லவில்லை. (children of the heaven)சிம்புவின் ஓவர் ஆக்டிங் (அதிகப்படியான நடிப்பு) பலரையும் எரிச்சல் அடிய வைத்து இருக்கும். அந்த எரிச்சல் அடைந்த நபர்களில் நானும் ஒருவன். நடிப்பு பிடிக்காததால் அவரை ஒரு நடிகராக ஏற்றுக்கொள்ள மனம் மறுத்துள்ளது பல தருணங்களில். அதே போல சாதாரண மனிதனாக அரை மதிக்க மனம் மறுப்பதற்கும் பல அவரின் அக வாழ்க்கை கூறுகள் இருகின்றது. யாரின் அக வாழ்க்கை பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்ற போதும் சமுதாயத்தில் ஒரு மனிதனாக மதிக்கப்பட நிச்சயம் அவரின் ஒழுக்கம் மிக முக்கியமானது. அதிலும் அவர் சிறந்ததாக இல்லை. அதனாலேயே அவரின் படங்களை எப்போதும் வெறுத்திருக்கின்றேன்.

போதாத குறைக்கு அவரை பற்றிய இந்த பதிவுக்காக சில காணொளி மற்றும் எழுத்துரு தொடர்பான தேடுபொறி வலைத்தளங்களில் பெயரை பதிவு செய்ய ஆரம்பித்தாலே (கீழ்கண்ட படத்தை பார்க்கவும்) என்ன என்னமோ வந்து நிற்கின்றது.
இப்படி இருக்கும் போது ஏன் இந்த 10 படங்களின் தொகுப்பு.? அவரின் சில நல்ல விசயங்களை அல்லது நடவடிக்கைகளை அல்லது படங்களை பாராட்ட வேண்டும் என்பது எனக்குள் இருக்கும் ஒரு நேர்மையான ஏழுத்தாளனின் (எழுத்தாளன்னு ஏத்துபீங்கள?) எண்ணம், கடமை.

சரி படத்திற்கு போகலாம். பட வரிசை பத்தில் பத்தாவது இடம்

10. விண்ணை தாண்டி வருவாயா?

பத்தாவது இடத்தை இந்த படம் பிடிக்க காரணம் ஒரு திரைப்படம் என்பது சமுகத்தில் நல்ல விளைவுகளை ஏற்ப்படுத்த பயன்படும் (பயன்பட்ட) ஒரு அற்ப்புதமான கலை சார்ந்த மீடியா (ஊடகம்). ஆனால் சமீபகாலங்களில் சமுகத்தை சீரழிக்க வைக்கும் காட்சிகள் இல்லாத படங்களை பார்ப்பதே கடினமாகி விட்டதால் அது போன்ற எந்த காட்சியும் இல்லாத படத்தை பாராட்ட வேண்டிய நிலைக்கு தமிழ் திரைப்பட துறை வந்துவிட்டது. (இதை படித்துபாருங்கள் ) அந்த வகையில் இந்த திரைப்படம் அவரின் முந்தைய எல்லா திரைப்படங்களை விடவும் நல்ல படம் தான். நல்ல அழகான ஒளிப்பதிவு மற்றும் இசை. காதலை மிக சாதரணமாக சொல்லியதும் இறுதிக்காட்சியில் இடம்பெறும் ட்விஸ்ட் (உண்மையை திரித்தல்) ஆச்சர்யமானதாகவும் இருந்தது.
இந்த படத்தில் சிம்பு விரலை ஆட்டாமல் இருந்ததாலேயே பலர் அவரை இந்த படத்தில் இருந்து இவரை ரசிக்க ஆரம்பித்துவிட்டர்கள் என்று அவருக்கே புரிந்து இருக்கும். கௌதமை தவிர வேறு யாரவது இந்த திரைப்படத்தின் இயக்குனராக இருந்து இருந்தால் ? என்ன பாடு படுத்தி இருப்பாரோ?நான் திரையரங்கில் பார்த்த முதல் சிம்புவின் திரைப்படம் இது. அதை இரண்டாவது முறையும் பார்க்க வைத்த படம். (வேறு எந்த படத்தையும் இரண்டு முறை திரையரங்கில் பார்த்தது இல்லை). படத்தில் சிம்புவை பற்றி? இயக்குனர் ஒளிப்பதிவாளர் இசைஅமைப்பாளர் நடிகர்கள் என்ற முறையே இவர் நான்காவது இடத்தைதான் பிடித்து இருக்கின்றார். ஒருவேளை அதனால கூட இந்த படம் இவருக்கு ஒரு சிறந்த படமாக அமைந்து இருக்கலாம். அடுத்த படத்திற்கு போகலாம்.9.8.7.6.5.4.3.2.


1.வானம்

தமிழில் வரும் நல்ல படத்தை நடிகர் இயக்குனர் நடிகைகள் என்பதை தாண்டி (கடந்து) வரவேற்க வேண்டியது நமது கடமை. அந்த வகையில் நல்ல கருத்துக்களை முன் வைத்து இருக்கும் இந்த படம் நிச்சயம் சிம்புவின் திரைப்பயணத்தில் ஒரு பொக்கிஷம். பிற மொழி நல்ல திரைப்படங்களை பாராட்டும் நாம் நிச்சயம் இந்த படத்தை பாராட்டுவதில் தவறே இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.

மனிதாபிமானம், கதை மாந்தர்கள், கதை சொன்ன விதம் ஆகியவை இந்த படத்தை சிம்புவின் மற்ற படங்களில் இருந்து முற்றிலும் வேறு ஒரு பக்கம் மாற்றி வைக்கின்றது. இதை விட ஒரு சிறந்த படத்தில் இவர் நடிப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை.காரணம் முடிந்த வரை இந்த படத்தையே இவர் இதன் மூலத்திலிருந்து (வேதம்) மாற்றி இருக்கின்றார் என்னும் குற்றச்சாட்டுகள் வலைத்தளங்களில் பரவி கிடக்கின்றது. இதிலும் கதை, வசனம் ( உரையாடல் ) காட்சி அமைப்பு , நடிகர்கள் என்று நான்காவது (என்னை பொறுத்தவரை) இடத்தைதான் பிடித்து இருக்கின்றார்.

மீதி உள்ள காலி இடங்களை (எட்டு) அவரின் வாழ்நாட்களுக்குள் பூர்த்தி செய்வார் என்று நம்புவோம். எதிர் பார்ப்போம்.

வானம் படத்தை பாராட்டவே இந்த பதிவை ஆரம்பித்தேன். ஆனால் மனதின் எண்ணங்கள் இப்படி எழுத வைத்துவிட்டது.

படத்தை பற்றி விமர்சனம் செய்து இருக்கலாம். ஆனால் நான் பொதுவாக எந்த படத்தையும் விமர்சனம் செய்வதில்லை. மாறாக நல்லதை அறிமுகம் செய்யவே விரும்புகின்றேன்.

வானம் நல்லது.ஏன் சிம்பு இப்படி ?

தண்டோரா: ஹாட்ரிக் (தொடர்ந்து மூன்று) பதிவுகளை பாப்புலர் (பிரபலம்) ஆக்கிய இன்ட்லி வாசகர்களுக்கும், படித்தவர்களுக்கும் மேல் வலப்புறம் முதல் இடத்தில் உள்ள pool (வாக்களிப்பு) லில் வாக்களித்தவர்களுக்கும் நன்றி.

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

தர வரிசை சரிதான்

துஷ்யந்தனின் பக்கங்கள் said...

விண்ணை தண்டி வருவாயா ரியலி குட் மூவி பாஸ்

துஷ்யந்தனின் பக்கங்கள் said...

//பல அவரின் அக வாழ்க்கை கூறுகள் இருகின்றது. யாரின் அக வாழ்க்கை பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்ற போதும் சமுதாயத்தில் ஒரு மனிதனாக மதிக்கப்பட நிச்சயம் அவரின் ஒழுக்கம் மிக முக்கியமானது.//

நிதர்சனமான உண்மை பாஸ்