Friday, July 1, 2011

மல்டிமீடியா (MULTIMEDIA) படிக்க ஆசையா? பகுதி - 2

பகுதி ஒன்றை படிக்க இதன் (மல்டிமீடியா படிக்க ஆசையா?) மீது இடது பொத்தானை அழுத்தவும்.

2. வலைத்தள வடிவமைப்பு (Web Designing)



மென்பொருட்கள் :
Adobe Photoshop, Adobe Flash, Adobe Dreamweaver, Sound forge

வலைத்தள வடிவமைப்பு (web designing) , மற்றும் வலைத்தள விரித்தல் (web developing) இரண்டையும் சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம். வலைத்தளங்களில் இரண்டு வகை (static and dynamic) உண்டு. இந்த இரண்டு வகை வலைப்பக்கங்களுக்கு ஒரு உதாரணம் வேண்டுமானால் 1. www.shanmukhaengineering.in 2. www.mayajaal.com . முதல் வலைத்தளத்தில் பார்க்கும் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்ப்படுத்த முடியாது. அந்த நிறுவனத்தை பற்றிய விபரங்களை பார்வையிட முடியும், அவ்வளவுதான். ஆனால் இரண்டாம் வலையில் நாம் திரைப்படத்திற்கு முன் பதிவு செய்ய முடியும். பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இது போன்று உள்ளீடு செய்யப்படும் (பயன்படும்) வலைத்தளம் கணினி மொழியை (script) கொண்டு கட்டமைக்கப்படுகின்றது. இதற்க்கு தனியாக cold fusion, HTML, css script போன்ற மொழிகள் (computer language) பயில வேண்டும்.

முதல் வலைத்தளம் முழுக்க முழுக்க மேற்கண்ட நான்கு மென்பொருட்களை பயன்படுத்தி செய்யப்பட்டது. போட்டோஷாப் வலைத்தளத்தின் மாதிரியை உருவாக்குவதில் முக்கியமான மென்பொருள். பிளாஷ் வலைத்தளத்தில் நாம் பார்க்கும் அசைவுட்டங்கள் (animation) செய்ய பயன்படுகின்றது. ட்ரிம் வீவர் , போட்டோஷாப் இல் வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களையும், பிளாஷ் இல் வடிவமைக்கப்பட்ட அசைஊட்டங்ககளையும் இணைத்து வடிவமைக்க (compose) பயன்படுகின்றது. சவுண்ட் போர்ஜ் வலைத்தளத்தில் இடம்பெறும் சப்தங்களை வடிவமைக்க (only editing and using effects, not for composing) (உருவாக்க அல்ல) பயன்படுகின்றது.

பயன்பாடுகள் :

இணையதளம் என்ற வார்த்தையில் நாம் பயன்படுத்தும் எல்லாம் இதில் உள்ள மென்பொருட்களை பயன்படுத்தி இருக்க 90% வாய்ப்பு உள்ளது. 10% மொழிகள் (script) கொண்டு செய்யப்பட்டு இருக்கலாம். இந்த மென் பொருட்களை தாண்டி பலவிதமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றது. அவை மிக எளிதாக வலைதலங்களை கட்டமைக்க பயன்பட்டாலும் எல்லாவற்றிலும் சில குறைபாடுகளை காண முடியும். மேலும் இந்த முக்கிய 4 மென்பொருட்களை கையாள கற்றுக்கொள்வதின் மூலம் இது போல எளிதில் வலைதள வடிவமைப்புக்கு பயன்படும் மென்பொருட்களை அனாவசியமாக கையாளும் திறன் கிடைக்கும்.

வேலைவாய்ப்பு :

முதல் பகுதியில் சொன்னது தான். சிறிய நிறுவனங்களில் மட்டுமே எளிதில் வேலை கிடைக்கும், வருமானம் மாதம் 7000 ரூபாய் முதலில் முன் அனுபவம் இல்லாமல் கிடைப்பதே அரிதுதான். இந்த படிப்பை முடிக்கும் தறுவாயில் நாம் கற்றதை கொண்டு சில வலைத்தளங்களை நாம் வடிவமைத்து வைத்துக்கொண்டால் நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது மிகவும் பயன்படும். நல்ல அனுபவம் பெற்ற பணியாளர்கள் 20000 ரூபாய் சம்பளம் பெற கூட வாய்ப்பு உள்ள துறை.

இரு பரிமாண அசைவூட்டம் பற்றிய பதிவில் மீண்டும் சிந்திப்போம்.

எந்த கல்வி நிறுவனமும் ஒரு வலைப்பக்கத்தை வரைகலை செய்து அதை இணையத்தில் ஏற்றி (
upload) இணைய உலாவியில் காட்டுவதாக தெரியவில்லை. படிக்க சேரும் முன்பு கேட்டுக்கொள்ளவும்.