Tuesday, August 30, 2011

நீங்க எல்லாம் படிச்சி எந்த _ _ _ புடுங்க போறீங்க??

காதலர்கள் நிச்சயம் படிக்கணும், காதலிக்க போறவங்க கூட படிக்கலாம், தப்பு இல்ல.

சமீபத்தில் ஒரு உள்ளூர் பேருந்தில் (லாங் டிரைவ் வா இருந்து இருந்தா கூட நாம அமைதியா தூங்கிட்டு இருக்கலாம்)ஒரு மணி நேர பயணம் செய்ய வேண்டியது வந்தது. அதுல ரெண்டு பேர் பண்ண அராஜகம் இருக்கே, ஒரு வாரமா எப்ப நினைச்சாலும் கடுப்பு தலைக்கு ஏறுது.


ஏதோ ஒரு பொறியியல் கல்லூரில படிக்கற ரெண்டு பசங்க. பொண்ணு ஜன்னலோரமா உட்கார்ந்துகிட்டு இருக்கு. பையன் அது பக்கத்துல உட்கார்ந்துகிட்டு இருக்கான். மூணாவது சீட்டில் ஒருவர் (கொஞ்சன் வயசானவர்) உட்கார்ந்து கொண்டு இருந்தார். பையன் ஏற்கெனவே அவன் வேலைய செய்துகொண்டிருந்தான் போல. நான் ஏதேச்சையா பார்த்தேன். உட்கார இடம் இல்லாததால் நான் நின்று கொண்டிருந்தேன்.

அவன் பொண்ணுக்கு பின்புறம் கழுத்து பக்கமா ஒரு கையும் முன் பக்கம் (என்ன இருக்கும்) அந்த பக்கம் ஒரு கையுமா போட்டுக்கிட்டு ஆடறான், பேசறான், தடவுறான். பக்கத்துல ஒரு பெரிய மனிசன் உட்கார்ந்துகிட்டு இருக்கார் என்று அவனும் சரி அந்த பொன்னும சரி கொஞ்சம் கூட சட்டை பண்ணல. பேருந்துல அவ்ளோ பேர் இருக்கறதையே அவங்க கண்டுக்கல. ஒரு ஆளையா கண்டுக்க போறாங்க? கொஞ்ச நேரத்துல அவர் இறங்கவேண்டிய இடம் வந்த உடன் எழுந்து இறங்கி போய்ட்டார். நாம உட்கார்ந்தாலும் இதே நிலைமைதான்னு நினைச்சி வேற ஒருத்தவங்கள (பெண்) உட்கார விட்ட பிறகு, பக்கத்துல ஒரு பொண்ணு இருக்குனு பார்த்து கூச்சப்பட்டு அமைதியா இருப்பாங்கனு பார்த்தா ?

அவன் எழுந்து ஜன்னல் ஓரம் போயிட்டு அந்த பொண்ணை இந்த பக்கம் உட்கார வைச்சிட்டு திரும்பவும் ஆரம்பிச்சிட்டான். தொடைய கிள்ளறான், தலைல இருக்கற முடிய கோதி விடறான், மடியில படுக்க வைக்கறான், அந்த பொண்ணோட துப்பட்டாவ சரி பண்ணி விடறான், அப்பாப்பா, தலைய ஜன்னலோரம் திருப்பி பார்க்க முடியல. அந்த நாய்ங்க பின்னாடி இருந்த இருக்கை காலி ஆக அங்க போயிட்டு உட்கார்ந்தா, நாம கொஞ்சம் உயரம் என்பதால இப்பவும் அந்த சனியனுங்க கண்ணுல பட்டு தொலைய பார்வையை ஜன்னலோரம் திருப்பிட்டேன்.

அதுங்க பக்கத்துல இருந்த பெண் வேறு ஒரு இருக்கையை நோக்கி நகர, அந்த இருக்கையில் வந்து அமர்ந்த ஒரு பெரிய மனிசன் தலயில கைய வைச்சிகிட்டு கடைசி நிறுத்தம் வரை திரும்பி பார்க்காம, குனிஞ்ச தலை நிமிராம வந்ததை பார்க்கும் போது எனக்கே பாவமா இருந்தது. கடைசி வரைக்கும் அந்த -------------- யாரையும் கண்டுக்கல. ஒரு நேரத்துல முத்தம் வரைக்கும் போகிடிச்சிங்க.
பொது இடத்தில் காதலிப்பதோ, கை பிடிப்பதோ நிச்சயம் தவறாக எல்லோராலும் பார்க்கப்படாது. ஆனால் எல்லையை மீறும் போது? வீட்டில் இதுங்க என்ன செய்து கொண்டு இருந்தாலும் யாரும் எதுவும் கேட்டு விட போவது இல்லை, தவறு நடக்காத வீடுகளும் இல்லை.

சமுகத்தில் பொது இடம் என்பது சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை கூடும் இடமாக உள்ள போது அந்த இடங்களில் புகை பிடிப்பதே குற்றம் என்று சொல்லப்படுகின்றது. இது போன்ற சம்பவங்களை பார்க்கும் பள்ளி மாணவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பது வயது வந்தோர் எல்லோர்க்கும் தெரிந்த ரகசியம். ஏற்கெனவே எட்டாவது படிக்கும் போதிலிருந்தே ஜோடியாக சுற்ற ஆரம்பித்திருக்கும் மாணவர்கள் தொடுதல் வரை செல்லுதல் என்பது, தனி மனித வாழ்க்கையை நிச்சயம் வேறு பாதைக்கு அழைத்துக்கொண்டு சென்று விடும். தனி மனிதர்கள் சேர்ந்ததே இந்த சமுகம்.

சமுகத்தில் தான் செய்யும் தவறுகள் என்ன மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதை பற்றி நினைக்காத, வருத்தப்படாத இந்த ................................. எல்லா படிச்சி எந்த மயிற புடுங்க போகுதுங்க?

படிக்காத, மனித பிறப்பா இல்லாத நாய்கள் நடு ரோட்டில் செய்வதற்கும் இதுங்களுக்கும் என்ன வித்தியாசம்?

நாகரீகம் கருதி சிலதை சொல்லவில்லை, இந்த பகுதியில் இருக்கும் புகைப்படத்திற்கும் நான் எழுதியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, கோப படுபவர்கள் தாராளமாய் கோபபடலாம், பின்னூட்டத்தில்.

Saturday, August 27, 2011

வீட்டிற்க்கு வெளியே......? உஷார்.!

இது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது குறைந்த பட்சம் கடைபிடிக்க வேண்டிய, கடை பிடித்தால் நன்மை பயக்கும் எனக்கு தெரிந்த தகவல்கள்.

நடந்து செல்லும் போது:

* நடந்து செல்லும் போது இடது புறமாக செல்வதை விட வலது புறமாக நடந்து செல்வது நம் ஊரை பொறுத்த வரையில் நல்லது. காரணம் இடது புறம் நடந்தா நமக்கு பின்னாடி வரவன் நம்மை வந்து இடிச்சதுக்கு அப்பறம் தான் நமக்கு தெரிய வரும். இதே வலப்புறம் நடந்து போனா எதிரில் வருவதை பார்த்து கொஞ்சம் உஷாராகலாம்.

* கூட குழந்தைகளை கூட்டிட்டு போகும் போது நாம் சாலையின் பக்கமும் குழந்தையை நடைபாதையின் பக்கமும் கை பிடித்து அழைத்து செல்வது நல்லது. காரணம் குழந்தைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் நடக்காது. ஆடி ஆடி தான் நடந்து வரும்.

* நம் பேருந்துகளின் பக்க வாட்டில் நடக்கும் போது தள்ளி நடப்பது நலம். இல்லையென்றால் உங்கள் மேல் எச்சில் வந்து விழ 99 சதவிகித வாய்ப்பு உள்ளது.

* நண்பர்கள் யாரையாவது எதிர்பார்த்து கொண்டு திரும்பி திரும்பி பார்த்தவாறு நடந்தால் உங்களிடம் ஆட்டோகார அண்ணன் வந்து சவாரி எங்க போகணும் என்று கேட்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதில் ஏற மறுத்தல் சாவு கிராக்கியாக்கப்படுவீர்கள்.

* அவசர வேலையாக நடக்கும் போது உங்கள் கை மற்றவர்கள் மீது பட வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் பார்த்து ஆட்டுங்க கையை.

* ஓட வேண்டும் என்று முடிவு செய்த பின்பு சாலையின் ஓரம் ஓடுங்கள். ஆனால் சாலையை சந்திப்புகளை நின்று, கவனமாக கடந்து செல்லுங்கள்.

* நீங்கள் ஓரமாக நல்லபடியாக நடந்தால் கூட உங்கள் மேல் ஏதாவது சிறு வாகனம் வந்து லேசாக மோதினால், உராசினால் கண்டுகொள்ளாமல் மன்னித்து விட்டு செல்லுதல் நமது மனதிற்கு நலம். இல்லையென்றால் தேவையில்லாத ரத்த அழுத்தம் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

* படிக்கட்டுகளில் நடக்கும் போது அவசரப்பட்டால் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய வாய்ப்பு வரலாம். ஸ்டைலான நடை, ஓட்டம் அங்க வேண்டாம்.

* சாலையின் நடுவில் எச்சிலை துப்புவது, குப்பையை போடுவது போன்ற வேலைகளை தயவு செய்து செய்ய வேண்டாம்.

* போய் சேர வேண்டிய இடத்தை பொறுத்து கிளம்பும் முன்னரே அவசர வேலைகளை (1&2) முடித்துவிடுவது நலம். இல்லையென்றால் நடு சாலையில் நாயை போல காலை தூக்காமல் வேறு மாதிரி நாம் செயல்பட வேண்டி வரலாம்.

*நடந்து கொண்டிருக்கும் போது பாக்கெட்டுகளில் இருந்து எதையும் எடுக்காதீர்கள். வேறு சில பொருட்கள் தவறி விழ வாய்ப்பு இருக்கின்றது. நாம் நடப்பதால் அதை கவனிக்காமல் விட்டுவிடுவோம்.

* குடும்பத்தோடு போகும் போது சத்தம் போடாமல் (சண்டை அல்லது வாக்கு வாதம்) போவது நலம். இல்லையென்றால் போவோர் வருவோர் எல்லாம் உங்களை காட்சி பொருளாக மாற்ற வாய்ப்பு உள்ளது.

* நடந்து கொண்டே புத்தகமோ , செய்தி தாள்களையோ படிப்பது நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்துவதாக தோன்றலாம். ஆனால் பல நேரங்களில் பாதாள சாக்கடை திட்டம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாதாள சாக்கடை திட்டம் இல்லாத இடங்களில் கூட சாதாரணமாக ஏதோ சில பள்ளங்களை பார்க்க முடியும்.

* கடக்க வேண்டிய சந்திப்பில் நீங்கள் கடக்க, பச்சை விளக்கு சிக்னலில் எறிந்த உடனே ஓடாதீர்கள். நமது ஊ்ரில் மஞ்சள் விளக்கை பார்த்த உடன் வண்டியை நிறுத்த யாரும் பழக்கப்படவில்லை. அதனால் அப்போதும் பார்த்து கடப்பது நல்லது.

* சாலையின் சந்திப்புகளில், ரயில்வே கேட்களில் கடக்கும் போது செல்போன் உபயோகிப்பது என்பது 108 க்கு அழைப்பு விடுப்பதற்கு சமம். சமீபத்தில் ஒரு பெண் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது ரயில் மோதி இறந்து விட்டார். அவரை காப்பாற்ற முயற்சி செய்ய பலரும் கத்தினார்கள். ஆனால் அந்த பெண்ணால் அந்த சத்தத்தை கேட்க முடியவில்லை. காரணம் ஹெட் செட்.



* மற்றவர்கள் கடக்கின்றார்கள் என்பதற்காக நீங்கள் அவர்களோடு சேர்ந்து சாலையை கவனிக்காமல் கடக்க முற்படாதீர்கள். பெரிய ஆபத்து வரலாம்.

* உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் பதிவு செய்யுங்கள் பின்னூட்டத்தில்.


அடுத்த பதிவில் வாகன பயணம் ... (உண்மையில் உஷாராக இருக்க வேண்டியது அதில் தான்)