Tuesday, April 26, 2011

இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா?


இந்த பதிவுக்கு இது போன்ற தலைப்பை விட இரண்டு ________ களின் கேம் ஷோ , என்றோ ராஜ் டிவியின் முள்ளமாரித்தனம் என்றோ, தொலைக்காட்சியின் வியாபார விபச்சாரம் என்றோ இன்னும் சில கோபமான தலைப்புகளும் மனதில் எழுந்த போதும் பதிவுலகில் சீரியசான பதிவுகள் படிக்கப்படுவதை காட்டிலும் காமெடியான பதிவுகள் அதிகமாக படிக்கப்படுகின்றது என்ற காரணத்தால் (அல்லது நானே நினைத்துக்கொண்டதால்) இந்த தலைப்பை வைத்து இருக்கின்றேன்.

ராஜ் டிவியில் கீழே உள்ளம் கேம் ஷோ ஐ எப்பவாவது பார்த்து இருப்பீர்கள். படத்தில் காணும் நபர்கள் யார் என்பதை கால் பண்ணி சொன்னால் பணம் 60000 ரூபாய் கிடைக்கும் என்ற தகவலை பெரிய எழுத்திலும், ஒரு காலுக்கு (call-அழைப்பு) 10 கட்டணம் என்பதை சிறிய எழுத்திலும் அமைத்து ஒளிபரப்புகின்றார்கள். ஒரு 100 ரூபாயாவது யாருக்காவது கொடுத்தால் சந்தோசம் தான். ஆனால் இது ஒரு நேரடி ஒளிபரப்பே இல்லை என்பது தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம்.

ரெகார்ட் செய்த வீடியோ கிளிப்புகளை கொண்டு நேரடி ஒளிப்பரப்பு போன்று ஒளிபரப்பு செய்யப்படுகின்ற இந்த திருட்டுத்தனம் ஏன்? இந்த நிகழ்ச்சி தினமும் குறைந்த பட்சம் 2 முறை அரைமணி நேரம் வீதம் மொத்தம் 1 மணி நேரம் ஒளிபரப்புகிண்டார்கள். ஒரு நாளில் ஒரு நிமிடத்திற்கு இருவர் என்று ஆசைப்பட்டு (பேராசை பட்டு) கால் செய்தால் கூட 60 நிமிடத்திற்கு 120 பேர் வீதம் 1200 ரூபாயை மக்களிடம் இருந்து திருடிக்கொண்டு இருக்கின்றார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது நேரடி ஒளிபரப்பு அல்ல (live) என்பதே தெரியவில்லை. படிக்க தெரிந்தவர்கள் live என்ற வார்த்தை இருக்கின்றதா என்பதை பார்க்க கூட மனம் வராது.

காரணம் இந்த ரெண்டு ನೈಕಲುಂ பேசுவதை கேட்கும் போது இது நேரடி ஒளிபரப்பு என்று நினைத்து விடுவார்கள். நான் பழகும் மனிதர்களில் தினமும் ஒருவராவது குறைந்தபட்சம் 250 ரூபாயாவது தொலைத்துவிட்டு லைன் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகின்றார்கள். அப்போதும் அவர்களுக்கு தெரிவதில்லை அவர்கள் ஏமாற்றப்படுவது. மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். லாட்டரியை விட மோசமான ஒன்று இது. அதில் குறைந்த பட்சம் பணத்திற்கு ஒரு சீட்டையாவது தருகின்றார்கள்.



இந்த நிகழ்ச்சியை பார்த்து ஏமாறுபவர்கள் எல்லாம் அதிகம் கல்வி அறிவு இல்லாத, பண வசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான். இது போன்ற மக்களிடம் இருந்து நேரடியாக திருட திருடர்களுக்கு கூட மனம் வராது. ஆனால் மக்களிடம் நேர்மையாக இருக்க வேண்டிய ஊடகத்துறை இது போன்ற கொள்ளைகளில் ஈடுபடுவது மிகவும் கேவலமான ஒன்று. அப்படி கொள்ளை அடிக்கும் அளவுக்கு பணம் வேண்டும் என்றால் இதோ, ரெகார்ட் கால்ஸ் என்று தெரிந்தே இது மக்கள் ஏமாற்றுகின்றோம் என்று தெரிந்தே இது போல நடிக்கும் இந்த ____ கொண்டு ஆபாச படங்களை எடுத்து (porngrapy) நடு இரவுகளில் ஒளிபரப்பு செய்து கொண்டு trp ரேட்டை அதிகமாக்கி கொள்ளலாம். விளம்பரங்களின் மூலம் இதைவிட அதிக பணம் கிடைக்கும்.

இதில் ராஜ் டிவி www.vettrimaalai.com என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து திருடிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் மின் அஞ்சல் முகவரி customercare@vettrimaalai.com ஆகும். அவர்கள் தான் இந்த தொலைபேசி எண்ணின் மூலம் பணத்தை திருடி ராஜ் டிவிக்கு பங்கு கொடுப்பவர்கள்.

இதை படிக்கும் யாராவது சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்த முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள். குறைந்த பட்சம் அவர்களின் மின் அஞ்சலுக்கு நமது கோபத்தை வெளிபடுத்துவோம். பதிவுலகில் இதை பற்றி அதிகமாக விமர்சித்தால் அது இந்த ராஜ் நிறுவனத்தை சென்று அடையும். அதன் மூலம் அந்த நிறுவனமே இந்த நிகழ்ச்சியை நிறுத்தினால் மட்டுமே இந்த திருட்டை தடுக்க முடியும். இதை இன்டலியில் பாப்புலர் ஆக வேண்டும். அல்லது இதை பற்றிய கட்டுரை அதிகமாக வர வேண்டும்.

குறைந்த பட்சம் இதை காப்பி & பேஸ்ட் செய்து உங்கள் பதிவாக அல்லது மீள்பதிவாக இடுங்கள். எனது பதிவின் பெயர் போட வேண்டும் என்ற அவசியம் நிச்சயம் இல்லை.

இந்த கண் முன்னே நடக்கும் திருட்டை நம்மால் தடுக்க முடியுமா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுகொள்வோம்.

மேலே படத்தில் உள்ள थिदार्कालाई எங்கேயாவது பார்த்தால் ..........................................!

Thursday, April 21, 2011

The Game - 1997 பக்காவான சஸ்பென்ஸ் த்ரில்லர்.

வணக்கம் நண்பர்களே...!

உங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் செய்திகள் வாசிப்பவர் உங்களுடன் பேசினால் எப்படி இருக்கும்?
காரணமே என்னவென்று தெரியாமல் ஒரு மிகப்பெரிய கொலை கும்பல் உங்களை கொலை செய்ய துரத்தினால் எப்படி இருக்கும்?
ஒரு கால் டாக்ஸி யில் போய் கொண்டு இருக்கும் போது அந்த டிரைவர் வண்டியை வேகமாக ஓட்டி சென்று அவர் மட்டும் கீழே குதித்துவிட்டால்?
உங்களுடைய பணம் சொத்து எல்லாம் ஒரே நாளில் பறி போய் விட்டால்?
ஊர் பெயர் தெரியாத இடத்தில் கையில் பத்துபைசா கூட இல்லாமல் பிச்சை எடுக்க விட்டால்?
அப்படி ஒரு அடுக்கடுக்கான திருப்பங்கள் நிறைத்த படம் இது.

ஒரு கோடிஸ்வரன் நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருக்கிறார். ஆனா அவருடைய வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை. அந்த நேரத்தில் ஒரு பிறந்த நாள் விழாவில் அவரின் நண்பர் அவருக்கு பரிசாக ஒரு கூப்பனை கொடுகின்றார். அது ஒரு நிறுவனத்தின் கூப்பன் என்றும் அங்கே சென்று பதிவு செய்து கொண்டால் பல விதமான எதிர்பாராத சுவாரிசியமான நிகழ்வுகள் ஏற்ப்படும் என்றும் சொல்ல அவர் வேண்டா வெறுப்பாக அங்கே சென்று பதிவு செய்துவிட்டு வருகின்றார். அவரது சில நண்பர்களும் ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் பதிவு செய்து சுவரிசியமான சில நிகழ்வுகளை சந்தித்ததாக சொல்கின்றனர்.

அவர் வீட்டுக்கு வரும் போது அந்த நிறுவனத்திடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வருகின்றது. உங்களுக்கான விளையாட்டு நடைபெறாது என்றும் நீங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் சொல்லிவிட்டு இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. அதைபற்றி கவலை கொள்ளாமல் அவர் வீடு வந்து சேர்கின்றார். வீட்டின் முன்புறத்தில் யாரோ மாடியிலிருந்து வீழ்ந்து தற்க்கொலை செய்து கொண்டிருப்பது போல ஒரு உடல் கிடக்க இவர் பயந்து சென்று அருகில் பார்க்கும் போது அது ஒரு பொம்மை என்று தெரிகின்றது. இதன் பின்பு தான் மேலே சொன்னதெல்லாம் நடக்கின்றது.

படத்தின் பெயர் தி கேம் (1997). செவென் (seven) திரைப்படத்தின் இயக்குனர் டேவிட் ப்லேன்சேர் (david flencher) தான் இந்த படத்திற்கும் இயக்குனர். seven திரைப்படம் எப்போதும் துப்பறியும் திரைப்படங்களுக்கான வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் ஒரு இடத்தை பிடிக்க கூடியது.



மைகேல் டௌக்லஸ் (michael douglas) இன் நடிப்பு அபாரமாக இருக்கும்.

உயிருக்கு பயந்து போலிசாரிடம் புகார் தந்து அவர்களை அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அழைத்துசென்று பார்க்கும் போது அங்கே அப்போது தான் கட்டுமான பணிகளே நடந்து கொண்டு இருக்கும்.

அப்பாவின் சொத்துக்கள் எல்லாம் போய்விட்ட பின்பு ஏதோ ஒரு ஊரில் பிச்சை எடுக்கும் நிலை வரும் போது நம்மை அறியாமலே நம் மனம் வேதனை கொள்ளும். காரணம் முதல் 20 நிமிடங்கள் அவர் எவ்வளவு சொகுசான வாழ்க்கையை சாதாரணமாக வாழ்ந்து இருகின்றார் என்பதை காட்டுவார்கள்.

சொத்துக்கள் எல்லாம் போன பின்பு உயிரே போனாலும் பரவா இல்லை என்று முடிவெடுத்து களத்தில் இறங்கும் போதும், கடைசி காட்சியிலும் அற்ப்புதமான இயல்பான நடிப்பு.

திரைப்படம் 2 மணி நேரம். முதல் 20 நிமிடம் இயல்பான வாழ்க்கை. அடுத்த ஒரு மணி நேரம் பரபரப்பு, கடைசி 20 நிமிடம் பழிவாங்குதல் என்று ஒரு பக்காவான சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது. ஒரு சில காட்சியை தவிர்த்துவிட்டால் குழந்தைகளோடு கூட இந்த படத்தை பார்க்கலாம்.

இந்த படத்தில் வருவதை போன்ற ஒரு கிளைமாக்ஸ் இதுவரை வேறு எந்த படத்திலும் பார்த்தது இல்லை. யாரிடமும் இந்த கிளைமாக்ஸ் ஐ சொல்லிடாதீங்க. அடுத்தடுத்து 2 கிளைமாக்ஸ் உள்ள படம்.

Monday, April 18, 2011

I Spit on your Grave- 2010 பெண்களுக்கான அடல்ட் திரைப்படம்

I Spit On Your Grave (2010)
வணக்கம் நண்பர்களே...!

இந்த திரைப்படம் 1978 ல் வெளிவந்த day of the women படத்தின் ரீமேக். எப்போதும் போல அதே கதைக்கு வேறு ஒரு திரைக்கதை நிகழ் காலத்திற்கு ஏற்றார் போல மாற்றப்பட்டு வெளிவந்து இருகின்றது.

படத்தின் கதை இதுதான்.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிம்பு கதை எழுத தனியாக தன் மோட்டார் வண்டியில் போவார் அல்லவா? அதே போல ஒரு பெண் சென்றால் என்னவாகும் என்பதின் கற்பனை தான் இந்த படம். ஆனால் இதுபோல நிச்சயம் எங்கேயாவது நடந்துகொண்டு தான் இருக்கும் என்று நம்ப வைக்கின்ற அளவுக்கு படம் பிடித்துள்ளார்கள்.

நாயகி (சொல்லவே பெருமையா இருக்கு பா-காரணம் செகண்ட் ஆப் ) ஒரு எழுத்தாளர். தனியாக ஒரு ஊருக்கு வந்து இருகின்றாள். ஒரு வீட்டை வாடைகைக்கு எடுத்து தங்குகின்றாள். ஒரு சில நாட்களில் யாரோ தன்னை மறைந்திருந்து நோட்டமிடுகின்றார்கள் என்பதை உணர்கின்றாள். அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் அவள் வீட்டில் அத்துமீறி நுழைகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு ஒரு விதமாக அவளை அடித்து துன்புறுத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து அந்த பகுதியின் காவலரிடம் (செரிப்) புகார் செய்கின்றாள். காவலர் நாயகியை கூட்டிக்கொண்டு அவளின் தங்குமிடத்தை அடைகின்றார். நாயகி நடந்தவற்றை காவலரிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அந்த 4 நபர்கள் அங்கே வருகின்றனர். பின்பு தான் தெரிகின்றது அந்த காவலரும் அவர்களும் நெருக்கமானவர்கள் என்று. அவர்கள் அனைவரும் தனித்தனியாக அவர்களின் விருப்பம் போல ?

irreversible திரைப்படத்தில் வரும் வன்கொடுமையை போல மற்றறொரு வன்கொடுமை காட்சி அது. எல்லாம் முடித்த பின்பு அவர்கள் அவளை துப்பாகியால் சுட்டு கொள்ள முடிவெடுகின்றார்கள் . பின்பு ஆரம்பிகின்றது பழி வாங்கும் படலம்.
தான் எப்படி எல்லாம் வலியை அனுபவித்தாலோ அதே மாதிரியான வலியை அதைவிட பல மடங்காக திருப்பி கொடுகின்றாள். இந்த படம் எந்த அளவுக்கு குருரமானது என்பதற்க்கான ஒரு காட்சி. ஒருவனின் ஆணுறுப்பை அறுத்து அவனது வாயில் வைத்து திணிப்பாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதை மறைமுகமாக தான் படம் பிடித்து இருப்பார்கள். படம் 100 நிமிடம். 50 நிமிடம் ஆண்களுக்கு , 50 நிமிடம் பெண்களுக்கு. (சரியான கால ஒதுக்கீடு). படத்தில் மொத்தமே 9 பேர் தான் நடித்து இருக்கின்றார்கள்.



படத்தில் வரும் சில உரையாடல்கள்.
male: i fuck you.
Female: you alredy did that. now its my turn.

male: please , please !
Female: please what i was said to you

male: she is innocent
Female: so was i?

சிலகாட்சிகள்:
வன்கொடுமை தந்த பாதிப்பை விட அவள் நடக்க சிரமப்படும் இடம் வலி நிறைந்த காட்சி அது
தான் செய்த தவறை மனைவி இன்னும் பார்க்கவில்லை (video tape) என்ற இடத்தில் வேறு எந்த காரணமும் இல்லாமல் அவளை முத்தமிடும் கணவனின் பயம் நிறைந்த காட்சி.
பயத்தில் ஆண் சிறுநீர் கழிக்கும் காட்சி
காப்பற்ற படுவோம் என்ற எண்ணத்தில் mam mam please என்று அழுவதும் பின்பு கோபத்துடன் i will find and fuck you in the hell என்று கத்துவதுமான காட்சி

day of the woman 1978 trailer



இவ்வளவு கொடூரமான படத்தை ஏன் பெண்கள் பார்க்க வேண்டும்?
சிம்பிள் . தமிழ் படங்கள் சொல்வது போல கற்பழிக்கப்பட்ட உடன் தூக்கில் தொங்க கூடாது. இந்த படத்தில் வருவதை போல வேண்டுமானால் செய்யலாம். சில கேள்விகள் எழலாம் இந்த படத்தை பார்க்கும் போது. நம்ம ஊர் மாஸ் ஹீரோக்கள் படத்தை தியேட்டரில் .......! என்று பார்ப்பதை விட இது எவ்வளவோ மேல்.......!

குழந்தைகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய படம்.

Directed by steven R.Monroe
budjet 1.5million $
gross 280,581 $

Wednesday, April 6, 2011

Duel & Dead End - கார்களில் நகரும் கதைகள்

வணக்கம் நண்பர்களே...,

இரண்டு வித்தியாசமான திரைப்படங்களை பற்றிய பதிவு இது. அந்த திரைப்படங்கள் Duel (1971) . மற்றும் Dead End (2003).

Duel : கதையின் நாயகன் காரில் ஒரு இடத்திற்கு கிளம்புகின்றான். சாலையில் சென்றுகொண்டு இருக்கும் போது முன்னால் செல்லும் ஒரு tanker lorry முந்திச்செல்ல முற்ப்படுகின்றான். அவன் முந்திசென்ற பின்பு இவனது காரை அதே tanker லாரி இவனை முந்தி செல்கின்றது. மீண்டும் இவன் முந்தி செல்ல ஆரம்பிக்கின்றது ஆட்டம். லாரி இவனை கொல்ல முயற்ச்சிக்கும் போதெல்லாம் தப்பிக்க முயல்கின்றான். படத்தில் எப்போதெல்லாம் லாஜிக் மீறல் என்று நினைத்து கதையின் நாயகன் இதிலிருந்து தப்பிக்க இப்படி செய்யலாமே என்று நினைத்தால் அதை உடனே அவனும் செய்து விடுகின்றான். ஆனால் அதையும் தாண்டி திரைக்கதை ஜெயித்துவிடுகின்றது. சும்மாவா? ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

கீழ்கண்ட இரண்டு புகைப்படங்களை ஸ்டோரி போர்டு போல திரும்ப திரும்ப வைத்தால் அது தான் இந்த திரைப்படத்தின் திரைக்கதை. இந்த படத்தை பார்த்தால் இதை எழுத்து வடிவில் (திரைக்கதை) எழுதுவது எவ்வளவு கடினம் என்பது புரியும். ஆனால் இது ஒரு புத்தகமாக வந்த கதை, பின்பு படமாக்கப்பட்டுள்ளது.



Dead End : கதையின் நாயகி தான் குடும்பத்துடன் தன் உறவினர் வீட்டிற்க்கு கிளம்புகின்றாள். சாலையில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது ஒரு பெண் தன் கை குழந்தையுடன் குறுக்கிடுகின்றாள். பின்பு ஆரம்பிக்கின்றது இங்கே கதை. (நில் கவனி செல்லாதே படத்திற்கும் இதற்கும் சம்பந்தம்இருகின்றதா என்று எனக்கு தெரியாது). இங்கே எங்கே எல்லாம் லாஜிக் மீறல் என்று நினைகின்றோமோ, கடைசி ஒரு நிமிடத்தில் அதை எல்லாம் தவறு என்று நினைக்க வைத்துவிடுகின்றார்கள். fight club, inception போன்ற திரைப்படங்களில் கையாளப்பட்டு இருக்கும் நிச்சயமற்ற திரைக்கதை யுக்தி கையாளப்பட்டு இருப்பது தான் இந்த படத்தை wrong turn, the hills have an eyes போன்ற படங்களில் இருந்து வேறுபடுத்துகின்றது.


இந்த இரண்டு படங்களிலுமே பிரதான பாத்திரமாக வருவது வாகனங்கள் தான். Duel லில் ஒரு கார் ஒரு லாரி. Dead End இல் இரண்டு கார்கள்.
இண்டு படங்களிலுமே இவர்கள் புறப்பட்டு காரில் சென்றுகொண்டு இருப்பதே முதல் காட்சி
இரண்டு படங்களிலுமே இவர்கள் சென்று சேர நினைத்த இடத்தை சென்று சேர்வதில்லை
இரண்டு படங்களிலுமே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே தான் கதாபாத்திரங்கள் கையாளப்பட்டு இருக்கின்றது


Duel psychological thriller குடும்பத்துடன் பார்க்கலாம். Dead End horror movie குழந்தைகளை தவிர்த்தல் நலம்.
Duel முழுக்க பகலில் நடக்கின்றது. Dead End முழுவதும் இரவு. இரண்டு படங்களுமே ஒரே நாளில் நடந்து முடியும் திரைக்கதை.
Duel லில் பின்னணி இசை குறைவு. அதனால் படத்துடன் ஒன்ற முடிகின்றது.
Dead End இல் பின்னணி இசை அதிகமாக வைத்து பயப்பட வைகின்றர்கள்.








அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். இந்த இரண்டு படத்தையும் தமிழ் ல சுட முடியாது.
படத்தின் கால அளவு ஒன்னரை மணி நேரத்திற்கும் குறைவு தான்.

Friday, April 1, 2011

அபோகலிப்டோ 2006 - உயிர் வாழ்தலின் போராட்டம்

வணக்கம் நண்பர்களே..
இந்த திரைப்படத்தை ஏற்க்கெனவே பலர் பார்த்துவிட்டு இருப்பீர்கள்.இருந்தாலும் இந்த திரைப்படத்தை பற்றி எழுத காரணம் , எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் நம்மை புதிதாய் ஒரு காட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு உயிர் வாழ ஆசை இருந்தால் ஓடு என்று சொல்லி, ஓடவிட்டால் எப்படி திக்கு தெரியாமல் ஓடுவோமோ அப்படிப்பட்ட ஒரு உணர்வை ஏற்ப்படுத்த கொஞ்சமும் தவறுவதில்லை இந்த படம்.
கதை மாயன் இன மக்கள் வாழும் காலத்தில் நிகழ்கின்றது. நம் நாகரிக வாழ்க்கையின் ஆரம்ப காலம் எப்படி இருந்து இருக்கும்? காட்டில் வசித்தவர்களாக, குறைந்த பட்ச உடை அணிந்தவர்களாக, சத்தத்தில் ஒரு வாக்கியத்தின் பொருளை உணர்த்துபவர்களாக, வேட்டையாடுபவர்களாக.....,! அப்படிப்பட்ட காலகட்டத்தில் நம்மை கூட்டிக்கொண்டு போய், வெறுமனவே கதை சொல்கின்றேன், உட்க்கார்ந்து பார்த்துவிட்டு போ, என்று சொல்லாமல் நம்மையும் ஒரு ஆதிமனிதனின் எண்ணங்களோடு சேர்த்து உயிர் வாழ்தலின் போராட்டத்தை உணரவைத்து விடுகின்றார் இந்த திரைப்படத்தின் இயக்குனர். படத்தின் பல இடங்களில் ஆதிகால மக்களின் வேட்டையாடும் யுக்தி அற்புதமானதாக இருக்கின்றது. படத்திற்காக பல ஆராய்சிகளை செய்துள்ளனர் இந்த படக்குழுவினர்.

ஒரு சிறு கிராமத்தை தீடீர் என்று ஒரு குழு வந்து தாக்கி அழித்துவிட்டு, அங்கு இருப்பவர்களை சிறை பிடித்து அடிமைகளாக கொண்டு போகின்றது. அங்கே கொண்டு போய் அடிமைகளாக வேலை வாங்க போகின்றார்கள் என்று பார்த்தால் கடவுளுக்காக பலி கொடுக்க போகின்றார்கள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரியப்படுத்தப்படுகின்றது. அந்த பலிஇட போகின்ற மனிதர்களில் கதையின் நாயகனும் ஒருவன். அவர்களிடம் இருந்து தப்பிப்பது இயலாத காரியம் என்று தெரிந்து பலி மேடையில் படுத்துக்கொண்டு, இவர்களிடம் இருந்து பாதுகாக்க தன் மனைவியையும், சிறு மகனையும் ஓர் கிணறு போன்ற பள்ளத்தில் விட்டு விட்டு நிச்சயம் திரும்பி வந்து காப்பாற்றுவேன் என்று சொன்னதை நினைத்து தன் இயலாமையில் அமைதியுருகின்றான்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு அசாதாரண நிகழ்வால் (இயற்கையின்) இவனும் இவனுடைய சில நண்பர்களும் பலியிடப்படுவதில் இருந்து தப்பிகின்றார்கள். ஆனால் அடிமைகளை வெருமெனவே விட்டுவிடுவார்களா? அடுத்து ஆரம்பிகின்றது ஓட்டம். நாம் இன்று பெரும்பால படங்களில் பார்க்கும் கார் சேசிங் எல்லாம் சும்மா என்று நினைக்க தோன்றும். discovery சேனலில் காமெராவை மறைத்துவைத்து விலங்குகளை படம் பிடிக்கும் போது இருக்கும் நம்பகத்தன்மை இந்த படம் நெடுங்கிலும் உள்ளது. படத்தின் மொழி மாயன் மொழி என்பது குறிப்பிட தக்கது. (அமெரிக்க காரங்களே சப்-டைட்டிலோட தான் படம் பார்த்தாகனும்). இருந்தாலும் எந்த மொழி தெரியதவங்களும் இந்த திரைப்படத்தை பார்க்க முடியும். முக பாவனைகளும், நடக்கும் சம்பவங்களும் அவர்கள் பேசும் பொருளின் சாரம்சத்தை நிச்சயமாக புரியவைத்துவிடும். படத்தின் வசனங்களை 4 காகித தாள்களில் எழுதி முடித்துவிடலாம் போல. வசனம் இல்லாத காட்சிகளில் முக்கியமானவற்றுள், கடத்தப்பட்ட தாய் மற்றும் மகன்களில், மகனின் கண் முன்பே தன் தாய் ஏலம் விடப்படுவதும், அவள் வயதானவள் என்பதால் யாரும் அவளை வாங்க முன்வராததால், அவளை வெளியே விட்டுவிடுவதும், அதே நேரத்தில் மகன் பலியிடப்பட போவதும், அந்த காட்சி அற்புதமாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும்.

அதே போன்று கர்ப்பிணி அந்த கிணற்றில் இருந்து வெளியேற முயற்சி செய்யும் போது அந்த சிறுவன் ஓடிவந்து உதவி செய்யும் காட்சிகளும் அதன் பின் வரும் காட்சிகளும்..........!
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் இந்த படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போய்விடுகின்றது. பொதுவாக படங்களின் பின்ணனி இசை அதிக்கப்படியான தாக்கத்தை action படங்கில் ஏற்ப்படுத்தாது. ஆனால் இந்த படத்தில் வசனம் குறைவு என்பதாலும் கதை நிகழ்வது மாயன் காலம் என்பதாலும் , மிக அற்புதமாக இழைக்கப்பட்டு இருக்கின்றது. ஒளிப்பதிவை பற்றி சொல்ல வேண்டுமானால் தாறுமாறா இருக்குது சொல்லிடலாம். படத்தை தியேட்டர் பார்க்க கொடுத்து வைக்கல....

படத்துல இருக்கறதா பத்தி நான் எவ்ளோ சொல்லாம விட்டுடேன். இன்னும் நீங்க இந்த படத்தை பார்க்கம இருந்தா, வீட்டில எவ்ளோ பார்க்காத படம் இருந்தாலும் அதை எல்லாம் அப்படியே வைச்சிட்டு இதை தாராளமாய் பார்க்கலாம். குழந்தைகளோட பார்க்கம இருப்பது நலம். adult சீன் எல்லாம் இல்ல. ஆனா ரத்தம் தெரிக்கும்படியான காட்சிகள் அதிகம்.

வேட்டைக்காரன் விஜய் அருவியில இருந்து குதிச்சு தப்பிக்கிற சீன், பொல்லாதவன் தனுஸ் கிளைமாக்ஸ் சண்டைல பயன்படுத்தும் யுக்தி னுநம்மாளுங்க முடிஞ்ச வரைக்கும் அடிச்சு இருக்காங்க.



படத்தை பாருங்க.....

நான் இந்த படத்தை வரலாற்று ரீதியா அணுக விரும்பல. அப்படி அணுக படம் பார்த்த பின்பு ஆசைபட்டா இங்கே கிளிக் செய்யவும். அந்த பதிவில் இருப்பதைவிட ஆரோக்கியமான விஷயம் பின்னுட்டங்களில் இருப்பதாக எனக்கு தோன்றுகின்றது.

எவ்வளவு எழுத ஆசைப்பட்டேன்.ஆனா முடியல. மறுபடியும் அந்த படத்தை பார்க்க போறன். ரஜினிக்கு எப்படி எந்திரன் ஒரு "it's not a just film, its a experince" ஒ அந்த மாதிரி இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் just filmaa பார்க்க முடியல.




already அபோகலிப்டோ வை பார்த்துடீங்கள? ஒன்னும் பிரச்னை இல்ல. எப்பையும் போல இன்னொரு படம். pathfinder ( 2007 ). பாருங்க. இதுவும் ஒரு surprice படம் தான்.


அபோகலிப்டோ
from விக்கி பீடியா
Directed by Mel Gibson
Produced by
Written by
  • Mel Gibson
  • Farhad Safinia
Starring
Music by
Cinematography Dean Semler
Editing by John Wright
Studio


Release date(s) December 8, 2006 (2006-12-08)
Running time 140 minutes


Language Mayan
Budget $40 million
Gross revenue $120,654,337