Saturday, June 18, 2011

தமிழில் நேர்மையான பி கிரேட் படங்கள் நிறைய வர வேண்டும்.

-18 தவிர்த்துவிடுங்கள். இந்த பதிவில் சொல் என்னுடையது. அர்த்தம் உங்களுடையது, என்ற வாரியாரின் வரிகளை மனதில் கொள்ளுங்கள்.

பி-கிரேட்னா என்ன?
ஆங்கிலம் நல்லா படிக்க எழுத தெரிஞ்சவங்க இங்க படிச்சி தெரிஞ்சிக்கங்க. சாதரணமா எனக்கு தெரிந்த தமிழ்ல அதனோட வரையறைகளை சொல்லனும்ன "குறைந்த செலவில், உள்ளரங்க படப்பிடிப்புகளை அதிகமாக கொண்டு, பெரிய அளவில் சம்பளம் வாங்காத நடிகர்களையும் தொழில் நுட்பக்கலைஞர்களையும் கொண்டு, அகநானுரை புறநானுரின் விளகத்துக்குள் கொண்டு வர (புதிய?) முயற்சி செய்ய எடுக்கப்படும் படங்கள்" அப்படின்னு சொல்லலாம்.

புரியலையா? வேற என்ன பண்ண முடியும்? படம் பார்த்து கதை சொல்.
இந்த படத்தோட போஸ்டர் ல பார்த்தோம்னா நடிகர் நடிகையை கட்டிபிடித்துக்கொண்டு (மோப்பம்) இருக்கிறார். அதோடு A வை வட்டத்துக்குள் போட்டு இருகின்றார்கள் (வட்டத்தை விட்டு வெளிய வந்து சிந்திச்சி படம் எடுக்கற இவங்களை ஏன் வட்டத்துக்குள் அடைகிறாங்க?). அது தணிக்கை குழு தருவது (சான்றிதழ்), அல்லது படக்குழுவினர் கேட்டு வாங்குவது.இதுல என்ன நேர்மை வேண்டி கிடக்கு? இருக்கு. அது எப்ப தெரியும் னா காசு கொடுத்து டிக்கெட் (நுழைவுசீட்டு) வாங்கி திரையங்கில் உள்ளே ஓடி நடுவுல, முன்னாடி இல்லனா பின்னாடி (இது அவங்க அவங்க ஆசைக்கு ஏத்தா போல ) ஒரு சீட்டை புடிச்சி உட்கார்ந்து எப்ப வரும் எப்ப வரும்னு காத்திருந்து கடைசி வரைக்கும் வராம போன பிறகு திரையரங்கை விட்டு வெளிய வரும் போது அடுத்த காட்சிக்கு தயாராகி கொண்டு இருக்கும் ரசிகனிடம் "செம மொக்கை , வேஸ்ட் "அப்படின்னு சொல்லும் போது தான் அவன் முகத்தில் தெரியும். அவன் எவ்ளோ ஏமார்ந்து போய் இருப்பான்? அப்ப போஸ்டர்ல (விளம்பர சுவரொட்டி) போட்ட எல்லா விசயத்திலிருந்தும் அந்த படக்குழு நேர்மை தவறி இருக்குனு தான அர்த்தம்?

ஏன் நிறைய நேர்மையான படங்கள் வர வேண்டும்.? கீழ் உள்ள காணொளி, புகைப்படங்களை பாருங்கள்.
பி கிரேட் படங்களை விட இந்த படங்கள் கிக் இல்ல? இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
இது அனுஷ்கா விபச்சாரிய நடிச்ச படம்.
இது வேட்டைக்காரன். இதுல எது விபச்சாரி வேசத்துக்கு சரியா இருக்கும்? இது அழகு. சைட் அடிக்க ஜாலியா பார்க்கவும்தான் காட்டப்படுதுன்னு சொல்லறவங்க, கல்யாணம் ஆனவன் தன் மனைவியிடமும், காதலிப்பவன் தன் காதலியிடமும், வயதுக்கு வந்தவன் ரோட்டிலும் (செல்லும் பெண்களை) பார்க்காத அந்த நளினமான புடவை சுடிதார்களில் இல்லாத அழகா இதில் காட்டப்படுகின்றது?

இது ஒரு மெகா பட்ஜெட் (அதிக பண செலவு) படம். இந்த படத்துல நார்மலா பார்த்தா கூட இந்த நடிகை தாவணியை வித்தியாசமாய் கட்டிக்கொண்டு இருப்பார். அது அவங்க அப்பா கூட இருந்தாலும் சரி, காதலனுடன் இருந்தாலும் சரி. அதே போல (தெரியுமாருதான்) உடை உடுத்தி இருப்பார். இது இயக்குனரா கேட்டதா. இல்ல இவங்களா தந்ததானு படக்குழுவினருக்கு தான் தெரியும்.

இது உள்ளரங்கில் வீட்டில் இருப்பவர்கள் தனியாக இருப்பது போல காட்சி அமைக்கப்பட்ட பி கிரேட் படம் னு வெளிவந்த படம்.

இது வெளி அரங்கில் எடுக்கப்பட்ட காட்சி அமைப்பு. இது எது உண்மையான பி கிரேட்? போதாத குறைக்கு நெஞ்சில் முகம் புதைப்பது வரையான காட்சிகளும் உண்டு. கிராமத்து படங்களாக இருந்தாலும் கூட பாடல் என்று ஒன்று வைத்து உள்ளாடைகளுடன் ஆட விடும் இயக்குனர்கள் எதை எதிர்பார்த்து அது போல ஒரு காட்சியை திணிகின்றார்கள்? இதை பார்ப்பதர்க்குனு சில ஜொள் பார்டிங்க நாக்கை தொங்க போட்டுக்குனு வரும்னு தான? அதை தாண்டி என்ன சமுகம் சார்ந்த நல்ல விஷயம் இருக்குனு படம் பார்க்கும் சிலர் மீதும் கட்டாயமாக அல்லவா அந்த சதைக்காட்சிகள் திணிக்கப்படுகின்றது?

அதிக பணம் வாங்கி கொண்டு நடித்தால் அது நார்மல். குறைவான பணத்தில் எடுத்தால் அது A? வெளி அரங்கில் விரசமாக எடுத்தால் அது கமர்சியல். உள்ளரங்கில் எடுத்தால் அது A. அதிகமான ஒளி மற்றும் நடிகர்கள் சேந்து இருந்தா அது பெரிய U படம். இல்லனா A. விரசமான வரிகள் இருந்தா அது U/A . சத்தங்கள் மட்டும் இருந்தா அது A. பெரிய நடிகர்கள் படம்னா ஹீரோயின் செம அழகு. சின்ன நடிகர்கள் னா அது செம கட்டை அல்லது அயிட்டம்.? பெரிய படம் னா செம மெசேஜ். சின்ன படம் னா அது மேட்டர் படம். எவ்ளோ பெரிய அநியாயம் ?

U படமும் சரி, A படமும் சரி. ரேனுமே நம்மளை ஏமாத்தறாங்க. சதையை பண்ட பொருளாக வைத்துதான் இன்றைய எல்லா பெரிய பட்ஜெட் படங்களும் வந்துகொண்டு இருகின்றது. அது தான் மெகா ஹிட். அப்பறம் நல்ல படம் எடுக்க எவனுக்கு மனசு வரும்? வருடத்திற்கு 2 அல்லது 3 நல்ல படங்கள் வந்து கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையில் ஏற்ப்படுத்தும் மாற்றங்களை ஒரு பெரிய செலவில் எடுக்கப்படும் குப்பைகள் நிறைந்த மசாலா படங்கள் தடுத்துவிடுகின்றன. இதில் காட்டப்படும் கவர்ச்சி எனப்படும் ஆபாசங்களை தனியாக பி கிரேட் படங்கள் தெளிவாக ? சொல்லிவிட்டால் தானாக இந்த அரைகுறை ஆபாசங்கள் குறைய ஆரம்பித்துவிடும். கறி சாப்பிட முடிவு செய்த பிறகு அது தோலுரித்த கோழியா இருந்தா என்ன , உரிக்காததா இருந்தா என்ன? அனுஷ்கா வும் தமன்னாவும் காட்டும் அரைகுறை சதைகளால் தான் அந்த படங்கள் ஓடுதுனா ஏதோ ஒரு நடிகை காட்டும் முக்கா சதைகளை கொண்ட படமும் தனியாக ஓடட்டுமே?

நாம் பார்க்கும் எல்லா படங்களிலும் அரைகுறை ஆபாசங்கள் நிறைந்து இருக்கும் போது தனியாக முழு ஆபாச படம் வந்தால் தானாக மற்ற படங்கள் ஆபாசத்தை ஒரு பெரிய விசயமாக திணிக்க முடியாது அல்லவா? அதை தாண்டிய கதைகளை யோசிக்க ஆரம்பிக்க அதை மட்டுமே மையமாக கொண்ட படங்கள் நிச்சயம் வர வேண்டும்.

இங்கே என்ன பிரச்சனைனா A படங்களும் நேர்மையானதாக இல்லை என்பது தான்.. ! அவர்களும் இதே அரைகுறைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் நிறைய சொல்ல ஆசை பட்டாலும் வார்தைகள் வர மாட்டேங்குது. (பேசிக்கலி ஐயம் குட் பாய்)


தமிழ் சினிமா எப்போது இந்த சதை சார்ந்த விசயங்கள் மீது ஆர்வம் குறைகின்றதோ அப்போது தான் கதை சார்ந்த திரைப்படங்கள் வரும், அதை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன்.

இந்த பதிவின் மூல கருத்தை சொன்னவர் அருணாச்சலத்தின் அப்பா: நினைத்து பார்க்க : ரஜினி சொல்லும் சுருட்டு கதை.

தண்டோரா: இந்த பதிவை ஹிட் ஆக்கிய வாசகர்களுக்கும், இதே பதிவை நல்ல பதிவு என்று தானாக சென்று பல பக்கங்களில் சொன்ன முகம் தெரியாத தாஸ் அவர்களுக்கும் நன்றி.

5 comments:

Anonymous said...

உண்மை சொன்னால் தமிழர்களுக்கு பி கிரேடு என்றால் செக்ஸ் படங்கள் என்று தான் நினைக்கின்றார்கள் ... ஏ கிரேடுல மட்டும் என்ன வாழுதாம்.

பெண்களை இழிவாக நினைப்பவர்கள் மத்தியில் நல்ல படங்களும் வருவது மகிழ்வே ! உதா. அழகர்சாமி குதிரை , தென்மேற்கு பரவக்காற்று


**********************************

வலைப்பதிவர்களே கொஞ்சம் கவனியுங்க ? ரொம்ப அவசரம்

Ashwin-WIN said...

ஹி ஹி ஹி ஒரு B-பதவு
நல்ல தேடல்

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்....!

வருணன் said...

நியாமான வாதம் தங்களுடையது. இந்தியர்களைப் போல குறிப்பாக தமிழர்களைப் போல Hypocrites யாரும் கிடையாது.நமது தணிக்கைக் குழுவின் லட்சணம் குறித்து தனிப் பதிவே எழுதலாம் நண்பா !

சேக்காளி said...

ஏம்ண்ணே.செல்போனுல அம்மண படங்களை பாக்குற நெலமைக்கு நாடு முன்னேறியாச்சு.அப்புறமா புதுசா வர்ற படத்துக்கு கொட்டாயில[தியேட்டர்] மொத காட்சிக்கு ஒரு சீட்டு[டிக்கெட்] வாங்க ஆவுற செலவுல மாசம் பூறா மேயுறதுக்கு வலை[நெட்] இணைப்பு கெடைக்கு.அதுனால அரைகுறை ஆடையில பொண்ணுங்கள பாக்க வர்றாங்கனா ஒரே சிரிப்பா வருது.பாருங்க இப்பல்லாம் ஆம்பளயளே அம்மணமா படத்துல நடிக்காங்களாம்.வெசனத்துல என்னத்தையோ எழுத நெனச்சு என்னத்தையோ என்னத்தையோ எழுதிப்புட்டேன்.