Tuesday, February 22, 2011

கவிதை என்னும் கிறுக்கல்கள் 4

உனக்காக இரயில் நிலையங்களில் காத்துக்கொண்டு இருக்கும் போது
நீ இல்லாமல் என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு தொடர் வண்டியின் சக்கரமும்
உருண்டு ஓடுவது இரும்பு தண்டவாளத்தின் மேல் அல்ல
என் இதய நரம்புகளின் மேல்......


நீ என்ன சொன்னாலும் நான் உன்னை விட்டுவிட போவதில்லை
கண்களை குளமாக்கி, இதயத்தை வற்ற வைக்கும் காதலை
நிச்சயம் ஒரு நாள் உனக்கு பரிசளிபேன்


சூரியனின் ஈர்ப்பு விசையில் சுழல்கின்றது ஒன்பது கோளும்..,
உன் விழி ஈர்ப்பு விசையில் நகர்கின்றது என் ஒவ்வொரு நாளும்..... !

Wednesday, February 9, 2011

தமிழக அரசின் புதிய கொள்(கை)ளை

நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் செல்ல வேண்டி வந்தது. கடந்த 10 வருடங்களுக்கு மேல் நான் அடிக்கடி செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் சென்று வருவேன். சமீப காலமாக சென்னைக்கு வந்துவிட்டதால் தாம்பரம் வழியாக செல்ல பேருந்து நிலையத்தில் வந்து சுமார் இரண்டு மணி நேரம் காத்து இருந்து ஒரு வழியாக தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் - விழுப்புரம் வந்து சேர்ந்தது.

வந்த மக்கள் கூட்டம் இறங்கும் என்று பார்த்தால் யாரும் இறங்குவதாக தெரியவில்லை. பேருந்து நிலையத்தில் பேருந்து வந்து நுழையும் முன்பே மக்கள் உஷாராக ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டு உள்ளனர் போல.
தாம்பரம் - காஞ்சிபுரம் = 52 KM . பெண்டு நிமிர்த்திடும் நம்ம பஸ். வலது பக்கம் 3 இருக்கை (மகளிர் னு அறிவிப்பு இருந்தது ?) பஸ். நிக்க கூட கஷ்டம் தான் .

கோணிப்பைகளில் கத்திரிக்காய்களை அடைக்கும் பொது தண்ணி ஊத்தி அழுத்தி அழுத்தி அடைப்பார்கள். அப்பதான் நிறைய புடிக்கும் பை. அப்படி ஆச்சி அந்த பஸ்ல இருந்த கூட்டம். ஒரு வழிய பஸ் கிளம்ப நடத்துனர் வந்து பின் பக்கம் ஏறி பயணச்சீட்டு கொடுக்க ஆரம்பித்தார் . நான் முன்பக்கம் நின்று கொண்டு இருந்தேன். சில சல சலப்புகள் பின் பக்கம் இருந்து வந்து கொண்டு இருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்துவிட்டு அமைதியாக கம்பி கிடைக்குமா சாய்ந்து நிற்க என்று தேட ஆரம்பித்தேன். அதற்குள்ள பெண்டு நிமித்திட்டாங்க மக்கள்.

ஒரு வழியா நடத்துனர் அருகில் வர நான் ஒரு 21 ரூபாயை கையில் எடுதுக்கொண்டு நின்றேன் . இரண்டு பயணச்சீட்டு வாங்க. தோரயமாக ஒரு டிக்கெட் 11 ரூபாய் இருக்கும் என்ற நம்பிக்கையில். காரணம் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் - விழுப்புரம்.

சொகுசு பேருந்தா இருந்த கொஞ்சம் உசாரா 30 ரூபாய் எடுத்து வைச்சி இருந்து இருப்பேன். சரி டப்பா பஸ் தானே னு நினச்சி காஞ்சிபுரம் ரெண்டு எவ்ளோ சார் னு கேட்ட 42 ரூபாய் னு குண்டை தூக்கி போட்டார். ஏன் னு பக்கத்துல டிக்கெட் எடுக்க ஆரம்பிச்ச எல்லோரும் சத்தம் போட ஆரம்பிக்க நடத்துனர் ரொம்ப சிம்ப்ளா சொன்னார். " இங்க பாருங்க , நான் delux பஸ் கண்டக்டர் , இந்த பஸ் கு duty போட்டுட்டாங்க, இந்த mechine தான் டிக்கெட் கொடுக்க. இதுல வர ரேட் தான் கேட்க முடியும் . உங்களுக்கு ஏதாவது பிரச்னை னா டிப்போ போய் கேளுங்க " னு. TN 21 N 1035 (08.02.11 காலை 9 மணி)

ஆளாளுக்கு திட்டிகிட்டே டிக்கெட் எடுக்க, யார் எப்படி போன எனக்கு என்ன னு டிரைவர் வண்டியை உருட்டிகிட்டு இருந்தார். என்னடா கண்டக்டர் மட்டுமே திட்டு வாங்கிட்டு இருக்கார்னு பார்த்தா , இந்த பஸ் நிக்க வேண்டிய stoping எல்லாம் நிக்காம போறதால (அதுதான் delux பஸ் னு டிக்கெட் போட்டுட்டாங்க இல்ல) அங்க நிக்கறவங்க அசிங்க அசிங்கமா திட்டறாங்க. அவங்களுக்கு எப்படி தெரியும்? இது delux பஸ் னு.

எப்படா சீட் கிடைக்கும் னு பார்த்தா யாரும் இறங்குற மாதிரி தெரியல. அதற்குள்ள ஒரு வழியா மக்களின் கோபம் (புலம்பல்) எல்லாம் அடங்கி போச்சி. அதுல சிலர் சொன்ன வாக்கியங்கள் .

ஏன் சார் ? டிக்கெட் ரேட் எல்லாம் ரௌண்டா 50 , 100 னு மாத்திட்டா உங்களுக்கு வசதியா போய்டும் இல்ல ?

எல்லாம் இன்னு 3 மாசத்துக்கு தான?
இல்ல பா. election வருது இல்ல? அதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே குறைசிடுவாங்க !

வாலஜாபாத் வந்துச்சி. சீட் கிடைச்சுது.

பாவிப்புள்ள . யார் கண்ணு பட்டுச்சோ? டிரைவர் வண்டி போகாது . எல்லாரும் இறங்குங்க . போய் அதோ முன்னாடி நிக்கற பஸ்ல போங்க னு சொல்ல , ஒரே நிமிசத்துல பஸ் காலி. அங்க போய் பார்த்த மறுபடியும் நிக்க வேண்டியது போச்சி. அந்த கண்டக்டர் முன்னாடி நாங்க வந்த பஸ் கண்டக்டர் ஐ ஏகத்துக்கும் வசை பாட ஆரம்பிச்சிட்டார். டிக்கெட் ல mention பண்ணலன்னு. அவர் கண்டக்டர் ஐ திட்டறார? இல்ல எங்களை திட்டராரனே தெரியலை. ஏன் னா பஸ் புல். ஆனா நோ டிக்கெட் . அதான் கடுப்பு போல.

திரும்பி காஞ்சிபுரத்துல இருந்து வரும் போது செங்கல் பட்டு வழியா வந்தோம். தனியார் பஸ். செம Interior work. பக்கவான மியூசிக் சிஸ்டம். ஒரே குத்து பாட்டு . காஞ்சிபுரம் - செங்கல்பட்டு 40 KM. 11 ரூபாய் டிக்கெட். உட்கார சீட் எல்லாம் arange பண்ணி தராங்கஎனக்கு தெரிஞ்சி ஒரு 7 வருடமா இதே ரேட் தான் இந்த ரூட் தனியார் பஸ் டிக்கெட். நல்ல காலம் govt பஸ்ல ஏறல.

செங்கல் பட்டுள்ள இருந்து மறுபடியும் தாம்பரம் ஒரே ஒரு govt பஸ் தான் கிடைச்சுது. 33 KM . 15 ரூபாய் டிக்கெட்.
யாரோ அறிக்கை விட்டாங்க . அரசு பேருந்து எல்லாம் நஷ்டத்துல தான் இயங்குதாம். இவ்வளவு கொள்ளை அடிச்சியுமா?
அப்ப தனியார் பஸ் எல்லாம் எப்படி ஓடுது? அவங்க கிட்ட போய் பிசினஸ் managment கத்துகிட்டு வர சொல்லுங்க . அப்படி இல்ல னா கீழ இருக்கும் படத்தை நல்ல பெருசா பிரிண்ட் எடுத்து govt பஸ்ல மாட்ட சொல்லுங்க .

Friday, February 4, 2011

சிறந்த நடிகைகளும் - செக்கு மாடுகளும்..!

செய்தி இதுதான்.
1. திவ்யா கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவி
2. உடன் படிக்கும் மாணவியின் பணம் 3000 காணமல் போய் விட்டது. சில பத்திரிக்கைகளில் 4000 என்று சொல்லப்படுகின்றது.
3. சில மாணவிகள் விசாரிக்கப்படுகின்றர்கள்
4. திவ்யாவை மட்டும் ?
5. தற்க்கொலை செய்து கொள்கின்றாள்
6. காவல் துறையினர் தற்கொலை என்று வழக்கு பதிவு செய்கின்றார்கள் . தற்கொலைக்கு தூண்டியதாகவோ அல்லது யார் பெயரயும் குறிப்பிட்டோ அல்ல.
7. ஏழைகள் போராட தயார் ஆகின்றார்கள் .
8. காவல் துறை 4 பேரை (ஜெயலட்சுமி , விஜயலட்சுமி , சுதா , செல்வி) கைது செய்கின்றது .
9. உடனே நான்கு பேருக்கும் நெஞ்சு வலி வந்து விடுகின்றது
10. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு காவல் துறையினரால் பாதுகாப்பு வழங்க படுகின்றதுதிவ்யா
ஆவியாக வந்தாவது
நீதி வழங்கு
சகோதரியே !

( யாருக்காவது மன வருத்தம் தந்தால் மன்னித்துவிடுங்கள்)

திவ்யாவின் கடிதம்

பணமுள்ள மனிதரெல்லாம் பல தவறு செய்த பின்பும்
கை கூப்பி , வாய் சிரித்து மேடை ஏறும் போது
நீ மட்டும் காலுக்கடியில் இருந்த பொருளை
எட்டி உதைத்து ஏன் துடித்தாய் ?
தூக்கில் தொங்கிய வலியை விட
எத்தனை மடங்கு வலியை பட்டாயோ?
கண்ணை இன்னும் இறுக்கமாக கட்டிக்கொள்
இரண்டு பக்கமும் வைக்கப்படுவது
உண்மையும் நேர்மையும் அல்ல
வசதி படைத்தவனின் பணமும்
ஏழையின் கண்ணீரும் .
எவ்வளவு அழுதாலும் அதற்கும் மேலேயும்
வைக்கப்படும் பணம்.
அநியாயத்தின் பக்கமே எடை கூடிக்கொண்டு போக
எப்போது நீ விழுவாய் ,
உன் சமநிலையை இழந்து?


ஆசிரியர்களே ?
எந்த நிலையில் இருக்கின்றது உங்களின் புலனாய்வு?
காவலர்களே ?
எப்படி இருக்கின்றது உங்களின் பாதுகாப்பு ?
சக மாணவியே?
கிடைத்து விட்டதா உன் பணம்?

யாராவது கேட்டு சொல்லுங்கள்
என் சகோதரியின் ஆன்மா சாந்தி அடையட்டும்