Friday, February 4, 2011

சிறந்த நடிகைகளும் - செக்கு மாடுகளும்..!

செய்தி இதுதான்.
1. திவ்யா கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவி
2. உடன் படிக்கும் மாணவியின் பணம் 3000 காணமல் போய் விட்டது. சில பத்திரிக்கைகளில் 4000 என்று சொல்லப்படுகின்றது.
3. சில மாணவிகள் விசாரிக்கப்படுகின்றர்கள்
4. திவ்யாவை மட்டும் ?
5. தற்க்கொலை செய்து கொள்கின்றாள்
6. காவல் துறையினர் தற்கொலை என்று வழக்கு பதிவு செய்கின்றார்கள் . தற்கொலைக்கு தூண்டியதாகவோ அல்லது யார் பெயரயும் குறிப்பிட்டோ அல்ல.
7. ஏழைகள் போராட தயார் ஆகின்றார்கள் .
8. காவல் துறை 4 பேரை (ஜெயலட்சுமி , விஜயலட்சுமி , சுதா , செல்வி) கைது செய்கின்றது .
9. உடனே நான்கு பேருக்கும் நெஞ்சு வலி வந்து விடுகின்றது
10. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு காவல் துறையினரால் பாதுகாப்பு வழங்க படுகின்றது



திவ்யா
ஆவியாக வந்தாவது
நீதி வழங்கு
சகோதரியே !

( யாருக்காவது மன வருத்தம் தந்தால் மன்னித்துவிடுங்கள்)

திவ்யாவின் கடிதம்

பணமுள்ள மனிதரெல்லாம் பல தவறு செய்த பின்பும்
கை கூப்பி , வாய் சிரித்து மேடை ஏறும் போது
நீ மட்டும் காலுக்கடியில் இருந்த பொருளை
எட்டி உதைத்து ஏன் துடித்தாய் ?
தூக்கில் தொங்கிய வலியை விட
எத்தனை மடங்கு வலியை பட்டாயோ?




கண்ணை இன்னும் இறுக்கமாக கட்டிக்கொள்
இரண்டு பக்கமும் வைக்கப்படுவது
உண்மையும் நேர்மையும் அல்ல
வசதி படைத்தவனின் பணமும்
ஏழையின் கண்ணீரும் .
எவ்வளவு அழுதாலும் அதற்கும் மேலேயும்
வைக்கப்படும் பணம்.
அநியாயத்தின் பக்கமே எடை கூடிக்கொண்டு போக
எப்போது நீ விழுவாய் ,
உன் சமநிலையை இழந்து?


ஆசிரியர்களே ?
எந்த நிலையில் இருக்கின்றது உங்களின் புலனாய்வு?
காவலர்களே ?
எப்படி இருக்கின்றது உங்களின் பாதுகாப்பு ?
சக மாணவியே?
கிடைத்து விட்டதா உன் பணம்?

யாராவது கேட்டு சொல்லுங்கள்
என் சகோதரியின் ஆன்மா சாந்தி அடையட்டும்

1 comment:

spiritual ocean said...

இந்தியாவை இயக்குவது ஜனநாயகம் என்ற முகமூடிக்குள் பணநாயகமும்,காம ரிமோட் அரசும்தான் சகோதரி.என்ன செய்ய இந்தியாவின் வரம் அப்படி.