Wednesday, January 26, 2011

BOYS SONG EFFECT-Time Slice

வணக்கம் நண்பர்களே.
மன்மதன் அம்பு திரைப்படத்தின் நீலவான பாடலுக்கு பிறகு நாம் தெரிந்து கொள்ள போகும் இரண்டாவது தொழில் நுட்பம் இது. BOYS திரைப்படத்தில் எகிறி குதித்தேன் என்ற பாடலில் கதை மாந்தர்கள் பாடிக்கொண்டு இருக்கும் போது தீடிர் என்று அந்தரத்தில் மிதப்பது போல நின்று விட்டு camera angle சுற்றி வந்த உடனே மீண்டும் தரையை வந்து அடைவார்கள் அல்லவா? அதை பற்றியது தான் இந்த பதிவு . அந்த தொழில் நுட்பத்தின் பெயர் Time slice . ( bullet time) இன்னும் சில பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு. அதற்க்கான இடம் எப்படி தயார் செய்யப்படுகின்றது என்பதை பார்க்க.




ஒரு சின்ன demo reel



ஒரு அட்டகாசமான demo reel



ஒரு superb add



இது matrix திரைப்படத்தில் இருந்து முதன் முதலில் உபயோகோப்படுத்த பட்டது என்பார்கள்.



சரி. இவ்வளவு வீடியோ வையும் பார்த்த பிறகும் புரியவில்லையா?

Red Color - video camera
blue color - still camera
green color - action area




ஒரு காமேரவிலிருந்து பார்த்தால் இப்படித்தான் தெரியும்.
நடிகர்கள் நடித்துக்கொண்டு இருக்கும் பொது இரண்டு video காமெராவும் ஒளிப்பதிவு செய்துகொண்டு இருக்கும். அதே நேரத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட action freeze ஆக வேண்டும் என்று இயக்குனர் நினைகின்றரோ அந்த movment வந்த உடன் அந்த மற்ற ஸ்டில் கேமரா ஒளிப்பதிவு செய்ய வைக்கப்படும். அவை அனைத்திற்கும் ஒரே சுவிட்ச் தான் இருக்கும். எனவே அவை அனைத்தும் ஒரே action னை தான் படம் பிடிக்கும். ஆனால் பல்வேறு தொடரச்சியான கோணங்களில். மீண்டும் ஒரு முறை முதல் 3 படக்காட்சிகளை பார்க்கவும். பின்னர் video படத்தொகுப்பின் (editing) போது இந்த வரிசையில் தொகுக்கப்படும்.


ஆனால் இங்கே எல்லாம் சரியாக இருந்தாலும் ஒரு கேமரா வழியே பார்க்கும் போது இன்னொரு கேமரா தெரிகின்றது அல்லவா?
ஆம் முடிந்த வரை அது போல தெரியாதவாறு கேமரா கோணத்தை அமைப்பார்கள். மீறி தெரிந்தால் ?

1. 1. Blue matte technology அல்லது 2. Roto scoping . தேவைப்படும் .



இப்போதே பதிவு பெரியதாகி விட்டதால் இன்னொரு பதிவில் பார்க்கலாம். மீண்டும் ஒருமுறை video வை பார்க்கலாமே?

No comments: