Friday, January 7, 2011

முதல் மனிதனும் முதல் தொழிலும்

இந்த உலகில் பல உயிர்கள் வாழ்கின்றன. இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பரிணாம வளர்சியில் தங்கள் மூல அமைப்புகளை இழந்து இன்று இந்த நிலையை அடைந்து இருக்கின்றன. அவை அனைத்தும் இயற்க்கையாக நிகழ்ந்த மாற்றங்கள் . அவை ஓர் இரவிலோ ஒரு வருடத்திலோ நடந்தவை அல்ல. அந்த மாற்றங்களை அந்த இனங்களே கண்டு இருக்காது . உதாரணமாக குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சியை சொல்லலாம். அந்த மாற்றங்கள் பல ஆண்டுகளாக சிறிது சிறிதாக நிகழ்ந்து இருக்கும்.

இது போன்ற மாற்றங்களை தாண்டி பல மாற்றங்கள் நமது பூமியில் நிகழ்ந்து கொண்டு இருகின்றது. அவை எல்லாம் நம் மனித இனத்தால்.! நாடோடிகளாக வாழ்வை தொடங்கிய மனித இனம், உணவை மட்டுமே பிரதானமாக் கொண்டு வாழ்ந்த போது வேட்டையாடுதல் மட்டுமே தொழிலாக இருந்தது. அப்போதெல்லாம் நமக்குள் ஜாதி, மத, இன வேறுபாடுகள் தோன்றி இருக்கவில்லை. பின்னர் நிலைத்து ஓர் இடத்தில் வாழ தொடங்கிய பின்பு ஏற்பட்ட நாகரீகம் என்ற ஒன்று இந்த பூமிப்பந்தை இப்போது பெருமளவில் மனித கூட்டங்களை நிலை நிறுத்தச் செய்துள்ளது.

இப்போது நாம் உண்ணும் உணவு, உடை, உறைவிடம், தொழில், மொழி, கலை, பொழுதுபோக்கு, போன்ற அனைத்தும் இந்த நாகரீகங்களால் உண்டானவை. இயற்க்கையை விட்டு தூரச்சென்று இயந்திரங்களோடு வாழ கற்று கொண்டு, இது தான் சிறந்த வாழ்க்கை என உணர்ந்து கொண்டு அல்லது ஏற்றுக் கொண்டு வாழ தொடங்கிவிட்டோம்.

மக்கள். ஒற்றை வார்த்தையில் நாம் மனிதர்கள் என்றாலும் நம்முள் பல இன, மத, ஜாதி அடையாளாங்கள் நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது. அவ்வாறாக ஒவ்வொறு இனத்திற்கும் தனித்தனியாக உணவு, உடை, உறைவிடம், தொழில் உண்டு . உதாரணமாக மரதொழில், உழவு, மீன்பிடித்தல், களவு போன்றவற்றை சொல்லலாம். நாம் அல்லது நமது முன்னோர்கள் இது போன்ற ஏதோ ஒரு தொழில் சார்ந்தவர்களா இருந்து இருப்போம். இப்போது நாம் அதே தொழில் செய்துகொண்டோ, அல்லது அறிவியல் வளர்ச்சி காரணமாக வேறு ஒரு தொழிலுக்கு சென்று விட்டோ இருக்கலாம்.

ஆனால் அதுபோன்று தொழில்கள் இன்றும் உள்ளது. விஞ்ஞான உதவியோடு ஏர்கலப்பை போய் உழுவதர்க்கும், அறுவடை செய்வதர்க்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதே போல் எல்லா தொழில்களிலும் இயந்திரம் வந்துவிட்டன. ஆனால் சில
தொழில்கள் இன்று முற்றிலுமாக இல்லை. அதில் முதன்மையானது நமது மனித இனத்தின் முதல் தொழிலான வேட்டையாடுதல்..!

மனித நாகரீக வளர்ச்சியில் காணாமல் போன தொழில். இந்த நூற்றாண்டுகளில் கூட அந்த தொழில் செய்துவந்தவர்களை நாம் பார்த்து இருப்போம். அவர்கள் தான் குறவர்கள். குருவிக்காரர்கள் என்றோ குறிக்காரர்கள் என்றோ அழைக்கப்படுபவர்கள். அவர்களுக்கு என்று சில அடையாளாங்கள் நம் மனதில் தோன்றும். பெரிய குழல் துப்பாக்கி, உணவு சேகரிக்க டப்பாக்கள், வித விதமாண மணிகள் விற்க்கும் பெண்கள், அழுக்காண துணிகள், நமக்கு புரியாத ஏதோ ஒரு மொழி, ஆனால் சமீபகலாங்களில் அவர்கள் தங்கள் அடையாளாங்களை இழந்து விட்டனர். சமகாலத்தில் நம் கண்முண்ணே நிகழ்ந்து மிகப்பெரிய மாறுதல் இது. மாற்றம் நல்லது தான். ஏனென்றால் அவர்களது அந்த பழக்க வழக்கங்கள் மற்ற சக மனிதர்களிடையே நல்ல மதிப்பையோ, மரியாதையையோ , ஏன் ஒரு மனிதனாக மதிக்கும் எண்ணத்தை கூட ஏற்படுத்தவில்லை. அதுபோன்ற அடையாளாங்கள் எந்த இனத்திற்கும் நிச்சயம் தேவையானதாக இருக்க முடியாது.

அவர்கள் நாடோடிகள். அதனாலேயே கல்வி அறிவு இவர்களுக்கு இல்லாமல் போனது. தொழில் மற்றும் அமைப்பு முறை அடிப்படைகளில் 20 வகை குறவர்கள் உள்ளதாகவும், இவர்கள் மராட்டியர்கள் என்றும், லம்பாடி இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு. இவர்களிடம் பெண்ணடிமை இல்லை. விதவைகள் மறுமணம் உண்டு. இவர்களை இன்று நாம் கண்டுகொள்ள முடியாமால் போய்விட்டனர் .


மேலும் தெரிந்துகொள்ள இவரை படியங்கள்

http://aammaappa.blogspot.com/2008/09/blog-post_29.


1 comment:

ஒருவன் said...

உண்மை தான் நீங்க சொல்லறது.