Wednesday, March 16, 2011

Blue Matte or Green Matte

வணக்கம் நண்பர்களே...
இதற்க்கு முன்பு நாம் பார்த்த boys song பதிவிற்கு அடுத்த பதிவு இது. அதில் கடைசியாக blue matte மற்றும் rotoscoping பற்றி பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன். அதில் இப்போது ஒன்றை மட்டும் பார்ப்போம்.



ஏன் matte ஐ உபயோக படுத்த வேண்டும்? இதனால் என்ன பயன்?
காரணம் மிக சிறியது தான். நீங்களும் உங்கள் நண்பரும் தனித்தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணைக்க என்ன செய்வீர்கள் ?


ஏதேனும் ஒரு படத்தில் இருந்து photoshop உதவியுடன் ஒருவரை அழகாக கட் செய்து இன்னொரு படத்தில் பேஸ்ட் செய்வீர்கள் அல்லவா? அதிகமாக போட்டோ ஸ்டுடியோக்களில் கூட பார்த்து இருப்பீர்கள். அதில் ஒரு போட்டோவை கட் செய்ய அவரவர்கள் அனுபவத்திற்கு ஏற்ப வேகமாகவோ அல்லது மெதுவாகவோ நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஏன் என்றால் ஏறக்குறைய ஒருவரை சுற்றி வரைவதை போன்றது அது.



அதற்கு பொதுவாக lasso tool அல்லது pen tool பயன்படுத்துவார்கள். அதே நேரம் இன்னொரு tool உண்டு. அதுதான் magic wand tool. இந்த tool நீங்கள் ஒரு போட்டோவை கட் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரத்தை மிக எளிதாக்கிவிடும். ஒரு கிளிக் போதும்.

ரொம்ப ஈஸியா அந்த ஒரு வண்ணத்தை தெரிவு செய்து அதை நீக்கிவிட்டு அதற்க்கு பதிலாக இன்னொரு படத்தை பின்புறமாக வைத்துவிடலாம். ஒரே ஒரு படமாக இருக்கும் பட்சத்தில் பின்புறம் ஒரு குறிப்பிட்ட வண்ணமாக இல்லாவிடில் கூட நாம் மேற்சொன்ன படி போடோஷப் உதவியுடன் தெரிவு (select) செய்துகொள்ளலாம். ஆனால் ஒரு திரைப்படம் என்பது தொடர்ச்சியான படங்கள் (continued frames) என்னும் போது ஒவ்வொரு படத்தையும் தேவை இல்லாத பாகங்களை தெரிவு செய்வது காலம் கடத்தும் செயல் அல்லவா?

அதனால் தான் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை பின்புறமாக வைத்தால் ஒரே நொடியில் அதை நீக்கிவிடலாம். ஆனால் அதுவும் சாதரனப்பட்ட வேலை அல்ல. lighting மிக சரியாக வர வேண்டும். பின்னணியின் வண்ணம் object இன் மீது refelect ஆகாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் தெரிவு செய்யும் வண்ணத்தின் பகுதியில் object இன் பகுதியும் சேர்ந்துவிடும். அதனால் நமது object (edge) எல்லைகள் உருவத்தை இழந்துவிடும்.

சரி . ஏன் இந்த குறிப்பிட்ட இரண்டு வண்ணம்?
காரணம் மிக சிறியது தான். அடிப்படை வண்ணங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றில் மனித உடலில் இல்லாத வண்ணம் பச்சையும், நீலமும் தான்.


படபிடிப்பின் போது
*object ற்கும் matte ற்கும் குறைந்தபட்சம் 5 அடியாவது இருப்பது நல்லது.
* object இன் நிழல் matte இன் மீது விழாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் matte இன் சில பகுதியில் மட்டும் நிறம் மாறுபடும்.
* matte வண்ணத்தின் reflection object இன் மீது விழக்கூடாது.




மேலும் சில காணொளிகளுக்கு

http://www.youtube.com/results?search_query=vfx+green+screen&aq=f

சரி . போட்டோவை edit செய்ய போடோஷாப் இருக்கு. வீடியோக்கு?
Combustion, after effects, Shake, Fusion போன்ற பல மென்பொருட்கள் உள்ளது.
பெரும்பாலும் இரட்டை வேடம் அல்லது vfx திரைப்படங்களில் அதிகமாக பயன்படுத்தகூடிய விஷயம் இந்த matte தொழில்நுட்பம்.

matte வைத்து படப்பிடிப்பு நடத்திவிட்ட பின்பு அதை சரியாக நீக்க முடியாவிட்டால்?
அது என்ன matte இல் சில வெள்ளை புள்ளிகள் ?

இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

ஏதாவது டவுட் இருந்தா apn631@gmail.com க்கு ஒரு mail தட்டி விடவும்.

Friday, March 11, 2011

கடற்கரை பொழுதுகளில்....



கடற்கரை பொழுதுகளில்....

நான் அவள் அது
அவள் அதனோடு விளையாடிக்கொண்டு இருந்தாள்.
நான் அமைதியாய் நின்றுகொண்டு இருந்தேன்.
நான் அவளோடு விளையாடிக்கொண்டு இருந்தேன்.
அது சத்தம் போட்டுகொண்டே இருந்தது.
பின்பு,
நானும், அவளும், அதனோடு விளையாடிக்கொண்டு இருந்தோம்
கடற்கரை பொழுதுகளில்......



அலைகள் எல்லாம் சுனாமிதான்

கட்டிய வீட்டை
பறிகொடுத்துக்கொண்டே இருந்தது
கடற்கரை நண்டு



கூச்சம்

நான் நெருங்க, அது விலக,
அது நெருங்க, நான் விலக,
தொடாமல் விளையாடிக்கொண்டு இருந்தோம்.
நானும் அலையும்......!


நானும் நண்டும்

கடற்கரையில் பந்தயம்
அடைய வேண்டிய இடம் வளை
எப்போதும் வெற்றி
நண்டுக்குத்தான்......

Tuesday, March 8, 2011

ரெண்டும் கெட்டான்


எப்போதும் ஹெல்மெட் அணிந்தவுடன் வண்டியை ஸ்டார்ட் செய்பவன் சக்தி. போன வேலை முடியாததால் யோசித்துக்கொண்டே வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு வந்தான். அவன் மூளை சொல்லியது "அரை லிட்டர் பெட்ரோல் வீணா போய் இருக்கும்" என்று. மனம் சொல்லியது "பத்து நாள், தான் படிக்க விரும்பும் நாளிதழ் வாங்கி இருக்கலாம்" என்று. அதே நேரத்தில் திரும்ப வேண்டிய வளைவு வந்தது. மரவட்டை கால்களை போல வண்டிகள் ஊர்ந்து கொண்டு இருந்ததால் ஓரமாக நின்றான்.

திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு இருந்தான் இடையில் ஊடுருவ முடியுமா என்று. அப்போது அங்கு ஒருவர் வந்து நின்றார். ஒரு கையில் ஆப்பிள் கமலா பழங்கள் உள்ள இரண்டு பிளாஸ்டிக் பைகளும் மற்றொரு கையில் கோணிப்பையால் சுற்றப்பட்ட கத்தியுடனும். அந்த கத்தியின் முனை மரத்திலிருந்து வெளிவந்த 5 நாள் ஆன வாழை பூ போல லேசாக வளைந்து வெளியே தெரிந்தது. வெள்ளை தாடி, மரத்தின் ரத்தத்தால் கரையான சட்டை. கசங்கிய லுங்கி . அவர் ஏதோ பேச வந்தார்.

சக்தியின் மூளை சொல்லியது " பணம் கேட்க போகின்றார் , ஜாக்கிரதை !". மனம் சொல்லியது " லிப்ட் கூட கேட்கலாம் அல்லவா?". அவர் " தம்பி இருந்த காசுல பழம் வாங்கிட்டேன். பக்கத்துக்கு ஊருக்கு போகணும். ஒரு அஞ்சு ரூபா தரியா?". மேல் பாக்கெட்டில் பார்த்தான். இரண்டு 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தது. அறிவுக்கு (மூளை) நிம்மதி " இல்லையென்று சொல்லிவிடு". மனம் சொல்லியது " பர்சை திறந்து பார்க்கலாமே". எழுந்து நின்று எடுத்து பார்த்தான். பத்து ரூபாய் நோட்டுக்கள் மூன்றாவது இருந்து இருக்கும் குறைந்த பட்சம். மூளை சொல்லியது " வேண்டா........"!. அதற்குள் மனம் கொடுத்துவிட உத்தரவு இட்டதால் அனிச்சையாய் பணம் தரப்பட்டு விட்டது. அவர் முகத்தில் சந்தோசம். "நன்றாக ஏமார்ந்தாய்" என்றது அறிவு. "அப்பா வயசு இருக்கும்" என்றது மனம்.


அவருக்கு தெரிந்த வார்த்தைகளை கொண்டு நன்றி சொல்லிக்கொண்டு சுற்றி வந்தார். "நீங்கள் இப்படிக்க போன நானும் வரலாமா" என்றார், பணத்தை பாக்கெட்டில் வைத்தவாறே..! "நான் இந்த பக்கம் போறானே" என்று திரும்ப போகும் வளைவை காட்டினான். "அப்படியா? சரிப்பா" என்று முன்னோக்கி நடக்க ஆரம்பித்தார் அவர். இடம் கிடைத்ததால் விருட்டென கிளம்பியது வண்டி. வளைவில் திரும்பிய பின்பு தலை திரும்பி பார்த்தது அவரை. அவர் நின்று இருந்த இடத்தின் அருகில் இருந்தது டாஸ்மாக் . சிரித்தது அறிவு. "அங்கே பார். அவர் கையிலிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு உட்கார முயற்சிக்கிறார். அவர் ஒன்றும் கடையில் நுழையவில்லை. கை பாரம் தாங்க முடியாததால் ஓய்வுக்காக கூட அங்கே உட்கர்ந்து இருக்கலாம் அல்லவா?" என்றது மனம்.

"அப்படியா? சரி இரு பார்த்துவிடலாம்" என்று பிரேக்கை போட கால் முயற்சி செய்ய " வேண்டாம் போகலாம் " என்று ஆக்சிலேட்டரை முறுக்கியது கை. அதை பற்றி மேலும் நினைக்க இடம் தராமல் தன்னையும் மரவட்டைகளின் ஒரு காலாக்கியது மனம். வண்டியை ஓட்டுவதில் கவனம் செலுத்தியது அறிவு. "எல்லா பணத்தையுமா செலவழித்து பழம் வாங்கி இருப்பார்? பணத்தை வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு லிப்ட் கேட்டாரே?" மனம் யோசிக்க தொடங்கி உடனே முடித்துக்கொண்டது .

மனம் என்ன நினைத்து இருக்கும்? இவர் டாஸ்மாக் உள்ளே செல்வதை பார்த்து இருந்தால் அடுத்த முறை யாராவது உதவி கேட்டால் அறிவு ஜெயித்துவிடும் என்றா?

எது எப்படியோ. அறிவு சொல்வதே நடக்கின்றது. மனமே பல நேரங்களில் ஜெயிக்கின்றது. மனமே ஜெயிக்கட்டும்.