Thursday, May 5, 2011

vantage point - 8 கோணத்தில் ஒரு அதிரடி த்ரில்லர்

வேண்டேஜ் பாயிண்ட் 2008
வணக்கம் நண்பர்களே....!

பொதுவாக ஒரு திரைப்படத்தின் கால அளவு ஒன்னரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரம் வரை இருக்கும். அந்த கால அளவுகளில் கதையின் தன்மைக்கு ஏற்ப குறைந்த பட்சம் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களில் இருந்து ஒரு முழு மனிதனின் வாழ்க்கை வரலாறு வரை காட்சி படுத்தப்பட்டிருக்கும். ஒரு நாளில் நடக்கும் சம்பவங்கள் நிறைந்த பல படம் இருந்தாலும் நான் ஏற்க்கெனவே வலைப்பதிவில் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த படங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்பது என் எண்ணம். அதே போல தமிழில் சிங்கார சென்னை, (குவாட்டர் கட்டிங்) என்ற திரைப்படங்கள் ஒரு நாள் சம்பவங்களில் எடுக்கப்பட்டதாக கேள்வி பட்டிருக்கின்றேன். மற்றபடி நாம் பார்க்கும் படங்களில் பல நாள் நடக்கும் நிகழ்வுகள் தான் படமாக்கப்பட்டிருக்கும்.

ஒரு நாள் நடக்கும் சம்பவங்கள் என்பதை ஒரே நாளில் எடுக்கப்பட்ட படங்களுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். சுயம்வரம் ஒரு நாளில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால் அது ஒரு நாளில் நடைபெறும் சம்பவம் அல்ல என்பதை மனதில் கொள்ளவும். அதே போல நியுட்டனின் மூன்றாம் விதி கூட ஒரு நாளில் பழி வாங்கும் திரைக்கதையாக இருந்தாலும் பிளாஷ் பேக் யுக்தியில் பல நாட்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் சம நேரத்தில் காட்டப்படும்.ஒரு படம் இரண்டு மணி நேரம் என்று வைத்துக்கொள்வோம். அந்த இரண்டு மணி நேர காட்சி என்பது குறைந்த பட்சம் இரண்டு மணி நேர நிகழ்வாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் 23 நிமிட சம்பவங்கள் ஒரு படமாக காட்சி படுத்தினால்? அது தான் vantage point (2008).23 நிமிட காட்சி என்ற உடன் எல்லாமே slow motion னில் காட்டப்பட்டிருக்குமோ என்று நினைக்க வேண்டாம். பண்டி சரோஜ் குமார் இயக்கிய போர்க்களம் என்றதிரைப்படம் அதிகமான slow motion காட்சி நிறைந்த தமிழ் திரைப்படம் . ஏறக்குறைய 15 நிமிட நேரத்திற்குள் ஒரு குற்றம், அதற்க்கான திட்டம், அதன் காரணம், திட்டமிட்டவர்கள், புலனாய்வு, தண்டனை, மீட்பு என்ற எல்லாமே கட்டப்படுகின்றது. அது எப்படி?

படத்தின் கதையின் கருவும், திரைக்கதையின் போக்கும் அதன் poster design லில் எவ்வளவு அழகாக டிசைன் (வரைகலை) செய்யப்பட்டு இருக்கின்றது பாருங்கள். 8 strangers, 8 point of view (POV), 1 truth. படம் பார்க்கும் முன்பு புரியவில்லை என்றால் கூட படம் முடிந்த உடன் பார்த்தால் புரிந்து விடும்.

படத்தின் கதை இதுதான். ஒரு நாட்டின் பிரதமர் இன்னொரு நாட்டிற்கு வந்து பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போதே கொலை செய்யப்படுகின்றார். யார், எப்படி, எதற்காக கொலை செய்தார்கள், அவர்கள் எப்படி கண்டுபிடிக்கப்படுகின்றார்கள், என்பதை பல சஸ்பென்ஸ் காட்சிகளுடன் திரைபடத்தில் பாருங்கள். அந்த ஒருகொலை சம்பவம் திரும்ப திரும்ப அந்த 8 பேரின் மூலம் வெவ்வேறு கோணத்தில் (POV) இருந்து (நிகழ்வதுதான்) காட்டப்படுவதுதான் திரைக்கதையின் சிறப்பம்சம்.

ஒரு சிறந்த non-linear திரைப்படம் இது. இதே படத்தை எடிட்டிங் (படத்தொகுப்பு) இல் ஒரு linear திரைப்படமாக மாற்ற முடியும் என்றாலும் முதல் 50 நிமிடம் நிச்சயம் நமக்கு போரடித்துவிட வாய்ப்பு இருக்கின்றது. அதனாலேயே படம் ஆரம்பித்த 10 நிமிடத்திற்குள் நம்மை சீட்டின் நுனியில் உட்காரவைத்து விடுகின்ற மாதிரி நான் லினியர் ஆக மாற்றப்பட்டு இருக்கின்றது. எப்படி என்றால் அடுத்த 10 நிமிடம் தான் கிளைமாக்ஸ். ஆனால் அது கடைசியாக தான் காட்டப்படும்.

கிளைமாக்ஸ் இல் ஒரு குழந்தைக்காக இந்த திட்டத்தை தோற்கும் நிலைக்கு மாற்றுவார்களா என்ற கேள்வி எழும்பொது நமக்கு இரண்டு பதில்கள் தோன்றலாம். 1. தேவை இல்லாமல் ஒரு உயிரை எடுக்க நினைப்பதில்லை தீவீரவாதிகள். அல்லது 2. அப்போதைக்கு வண்டியை நிறுத்தி விட்டு பின்பு வளைந்து தப்பி சென்றால் மட்டுமே போலீசாரின் துரத்தலில் இருந்து தப்பிக்க முடியும் என்ற எண்ணத்தின் காரணமாக இருக்கலாம்.
* முதல் காரணம் தவறாக இருக்கலாம். காரணம் அவர்கள் நிறைய கொலை செய்கின்றார்கள்(குண்டுவெடிப்பு மூலம்) .
* இரண்டாவது காரணம் சரியாக இருக்கலாம். ஏன் என்றால் விபத்தை ஏற்ப்படுத்திவிட்டு அவ்வளவு சீக்கிரம் அவர்கள் தப்பி செல்ல முடியாது. காரணம் அது மேலை நாடு. இந்தியா அல்ல.

போஸ்டர் டிசைன், திரைக்கதைக்கான திட்டமிடல், எடிட்டிங், நான்-லினியர் ஸ்டோரி டெல்லிங் ஆகியவற்றிக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த vantage point என்னும் வச்ச குறி தப்பாது(தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வெளிவந்த தலைப்பு).

படத்தின் இயக்குனர் peter travis. இது தான் இவருக்கு முதல் திரைப்படம். அடுத்த படம் 2012 இல் வெளி வருகின்றதாம்.


டைம் இருந்து , படிக்க எண்ணம் இருந்தா இதையும் படிங்க...!


இனி எல்லா பதிவுகளிலும் நான் பிடித்த ஒரு படம் சேர்க்க ஆசை.
இந்த படம்: சென்னை கடற்கரையில் அலையை கண்டு ஓடிவரும் சிறுமி.

No comments: