Wednesday, May 25, 2011

horton hears a who? - ரொம்ப ஆடாதே. உலகம் ரொம்ப சின்னது

Horton hears a Who - 1954 லில் dr.seuss என்பவரால் எழுதப்பட்டு புத்தகமாக வெளிவந்த கதை. அந்த கதையை 2008 இல் ஒரு முப்பரிமான அசைவூட்டத்தில் (3D animation ) திரைப்படமாக்கி இருக்கின்றார்கள் Blue sky studios நிறுவனத்தினர்.

இந்த பதிவும் திரைப்படத்தை பற்றிய ஒரு அறிமுகம் தான். ஹோர்டன் ஒரு செம ஜாலியான யானை. அவரது நண்பர்கள் சிலர். ஆனா அவங்க யாரும் இவர் சைசுக்கு இல்ல. காட்டுல சந்தோசமா சுத்தி வர கேங். அதே காட்டுல ரொம்ப திமிரா சுத்திவர (தமிழ் பட வில்லன்மாதிரி) வில்லி கங்காரு. அது மடியில ஒரு குட்டி. ஒரு நாள் இந்த யானை ஆத்துல குளிச்சிட்டு வரும் போது ஒரு சின்ன பஞ்சு (இங்கிலிஷ்ல ஸ்பெக் னு சொல்லராங்க) ஒன்னு பறந்து கடந்து போகுது.


அப்படி அந்த பஞ்சு கடக்கும் போது ஒரு சத்தம் வருது. யாரோ அதுக்குள்ளே இருந்து பேசற மாதிரி. உடனே அந்த பஞ்சை பிடிக்க அதன் பின்னாடியே ஓடுது நம்ம ஹோர்டன். ஏன் நம்ம ஹோர்டன்? ஹ்ம்ம். அது குளிக்கற அந்த முதல் காட்சியை பார்த்தாலே தெரியும் , அது நம்மளையும் ஒரு சின்ன குழந்தையோட மன நிலையில் கொண்டு போய் விட்டுவிடும். அவ்ளோ அழகு.
அப்படி அந்த பஞ்சை பிடிக்க ஓடும் போது சில விலங்குகளை தொந்தரவு செய்யுது ஹோர்டன். (பெருசு இல்ல யானை ஓடும் போது பூமி குலுங்க தானே செய்யும்.) அதுல வானரமும் ஒன்னு. உடனே அந்த வானரங்கள் (புரியலையா? அதன் பா குரங்கு ---தமிழ் புரிய மாட்டேங்குது இல்ல?) எல்லாம் ஒன்னு சேர்ந்து தாக்குதுங்க பாருங்க யானையை....! அட அட அட... AK 47 ஐ எல்லாம் ஓரம் எடுத்து வைச்சிடலாம்.


எப்படியோ ஒரு வழியா அந்த பஞ்சை ஒரு பூவுல புடிச்சிடறார் நம்ம ஹோர்டன். அதன் பிறகு அந்த குரல் எங்க இருந்து வந்ததுன்னு தேடறார். அந்த டைம் la கேமெராவ zoom பண்ணி உள்ள போன அங்க அந்த பஞ்சுக்குள்ள ஒரு உலகம் இருக்குது. அங்க மனிசனுங்க வாழறாங்க. அந்த மனுஷ கூட்டத்துக்கு ஒரு தலைவர் (மேயர்). அவர் கூட பேசி இந்த யானை நண்பனாகி விடுகின்றது. அதுக்குள்ள நிறைய சுவாரிசியமான நிகழ்வுகள் இருக்கு. படம் பாருங்க. அப்ப தெரியும். அந்த மனிசனுங்க கிட்ட உங்க உலகம் ரொம்ப சின்னது அது என் மூக்கு நுனியில இருக்கு என்ற உண்மையை சொல்லி புரியவைக்கறதுக்குள்ள .....! யானைக்கு மேல் முச்சு கீழ் முச்சு எல்லாம் வாங்கிடுது. அப்பறமா உங்க உலகம் பறந்துகிட்டு இருக்கு. இப்படியே போன அழிஞ்சிடும். நான் எங்கனா ஒரு பாதுகாப்பான இடத்துல வைக்கரன்னு சொல்லி எடுத்துக்கிட்டு போகுது.அந்த உண்மையை மேயர் அங்க இருக்கற மக்களிடம் சொல்லும் போது அவருக்கு இருக்கற எதிரிங்க (இந்த மனுசங்களே இப்படித்தான் போல) இவரை பைத்தியம்னு சொல்லி துரத்திடறாங்க. இந்த டைம் ல கங்காரு ஒரு ஆளை (கழுகு) செட் பண்ணி இந்த பூவை தூக்கிட்டு போய் தொலைக்க சொல்லி கட்டளை இட அந்த பூவை காப்பாத்த யானை போராட ....... அது பெரும் கதை. ஆனா செம பக்கா.....! செம செண்டிமெண்டும் கூட.. தொலைந்து போன பூவை யானை தேடும் போது நமக்கே கண்ணுல தண்ணி வந்துடும். (பின்னணி இசை கூட காரணமாக இருக்கலாம்)

ஒரு வழியா அந்த பூவை யானையிடம் இருந்து பறிச்சு கொதிக்கற எண்ணையில (அது ஒரு மாதிரியா இருக்கு) போட விலங்குகள் எல்லாம் முடிவு பண்ண அந்த டைம்ல யானை, இருங்க உள்ள இருக்கறவங்கள பேச சொல்லறன்னு ஒரு வாய்ப்பு கேட்க்குது. பட் அந்த டைம் ல மேயரால பேச முடியாத நிலைமை. எல்லாம் கூட இருக்கற மத்தவங்களால தான். உடனே இந்த யானை சொல்லறது எல்லாம் பொய்னு முடிவு பண்ணி அந்த பூவை கொதிக்கற எண்ணையில அந்த கங்காரு போட்டுவிடுது.

அய்யய்யோ... அப்பறம்? அப்பறம் என்ன ? படத்தை பார்த்து தெரிஞ்சிக்கங்க.

அந்த கழுகும் கங்காருவும் என்ன வில்லத்தனம் பண்ணுது..! பட் கங்காரு குட்டி சோ ஸ்மார்ட்.

எவ்வளவோ அட்டகாசமான சீன் இருந்தாலும் அந்த முதல் கட்சி இருக்கே...! நிஜத்துலகூட அப்படி காட்சியை படம் பிடிக்க முடியாது.

படத்தோட லாஜிக் மற்றும் ஒன் லைன் எல்லாமே அந்த கடைசி ஷாட் தான்.

இதை வேற யாருனா சொன்ன கை தட்டுவோம். நம்ம ஆளுங்க சொன்ன ? எப்பவும் போல போடா காமெடி கீமெடி பண்ணாத னு சொல்லிட்டு போய்டுவோம்.
படத்தை பார்த்துட்டு இந்த போஸ்ட் டைட்டில் ஐ படிச்சி பாருங்க.

இதை குழந்தைக பார்க்கற பொம்மை படம்னு நினைச்சி மிஸ் பண்ணிடரதுக்கு பதிலா கொஞ்ச நேரம் குழந்தையா மாறி பார்க்கர அனுபவம்னு என்ஜாய் பண்ணுங்க சார் அண்ட் மேடம்...!


தண்டோரா: இதனால சகலவிதமானவர்களுக்கும் சொல்லிகிறது என்னன்னா என்னோட கடைசி பதிவை இன்ட்லி ல பாப்புலர் ஆக்குன அந்த 18 தோழர்களுக்கும் , கருத்துகளை சொன்ன 7 நண்பர்களுக்கும் . 500 க்கும் மேல ஹிட்ஸ் கொடுத்த வாசகர்களுக்கும் நன்றி சொல்லிகிறேனுங்க சாமியோவ்....................!

இப்படியே போன சீக்கிரம் ரீச் ஆகிடலாம் போல இருக்கே..?

5 comments:

Mahan.Thamesh said...

நல்லா இருக்கு.....!

சி.பி.செந்தில்குமார் said...

தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்....!
நல்லா இருக்கு.....!
பரவா இல்ல....!
செம காமெடி...!
ஏன் சார் எங்க டைம் ஐ வேஸ்ட் பண்ணறிங்க?
இந்த பதிவை அழித்துவிட்டால் நல்லது.

பின்னுாட்டமிடுவதற்க்கு நன்றி நண்பரே!

சி.பி.செந்தில்குமார் said...

>>இதனால சகலவிதமானவர்களுக்கும் சொல்லிகிறது என்னன்னா என்னோட கடைசி பதிவை இன்ட்லி ல பாப்புலர் ஆக்குன

அதென்ன கடைசி பதிவு?லேட்ட்டஸ்ட் பதிவு அல்லது முன் தின பதிவு என மங்களகரமாக சொல்ல்லாமே?

நிலா said...

மன்னிக்கணும் னா அடுத்த பதிவுல கரெக்டா போட்டுரன் னா!
பின்னுாட்டமிடுவதற்க்கு நன்றிங்க னா!

shortfilmindia.com said...

interesting
cablesankar