Tuesday, May 24, 2011

கொய்யால...! யார்கிட்ட வெச்சிகிறீங்க?


லீக்கோட லாஸ்ட் மேட்ச்ல டாஸ் வின் பண்ணி எங்க தலைய பேட் பண்ண சொல்லி 20 ஓவர் ல 8 பேரை கழுத்தை புடிச்சி வெளிய தள்ளி 128 ரன்க்கு மேல போன போது பாவம்னு கூட பார்க்காம 10 ரன் மட்டும் எக்ஸ்ட்ரா கொடுத்து, அடுத்து பேட் பண்ண ஒரு அடியாள (ஆப் ல போற பந்தை கூட மடக்கி லெக்ல அடிக்கறான் பாரு சிக்ஸர்...!) அனுப்பி அவனை கடைசி வரைக்கும் அவுட் ஆகாம ஆட சொல்லி 18 ஓவர்ல அந்த ரன்னை அடிக்க வைச்சி அவனுக்கே ஆட்ட நாயகன் விருதையும் (என்னது ஆட்ட நாயகன் சக்தியா? ஏம்பா இங்க என்ன படமா ஓடுது?) வாங்கி கொடுத்து சந்தோஷ பட்டீங்க இல்ல? அது மட்டும் இல்லாம எங்க தலையோட டீம் ஐ செகண்ட் பிளேஸ்க்கு தள்ளீட்டீங்க. ஏதோ மும்பை ஜெயித்ததால தல டீம் அங்கேயே இருந்துச்சி. இல்லனா மூனாவது இடத்துக்கு இல்ல போயிட்டு இருக்கும்? அதுக்கு தான் இந்த பிளே ஆப் மேட்ச் ல உங்களை ஆப் பண்ண தலை முடிவு பண்ணி இருக்கு போல.!

அதான் இந்த முறை அதே போல டாஸ் வின் பண்ணி உங்களை பேட் பண்ண வைச்சி, உங்களை மாதிரி சல்லித்தனமா 128 ரன்னுக்கு வெளிய தல்லாம 175 ரன் கொடுத்து (எக்ஸ்ட்ரா 14 ஞாபகம் வைச்சிக்கோங்க) உங்களை கௌரவப்படுத்தினோம். ஏன்னா எங்களுக்கு ஆப்போசிட் டீம் அடிச்சா ரன்லியே இது தான் அதிகம். (நல்லா காலம் அந்த அடியாள் சீக்கிரம் அவுட் ஆகிட்டான்- இல்லனா மேட்ச் என்னத்துக்கு ஆகிறது? எவ்ளோ பால் மாத்த வேண்டி இருந்து இருக்குமோ? விளையடிக்கினு இருக்கும் போதே பாலை தூக்கி வெளிய அடிச்சிடரன்யா அவன் )
அவரை அவுட் ஆக்கின புண்ணியம் நம்ம அஸ்வினுக்கு வந்து சேர்ந்தது. சின்ன புள்ள தனமா ஸ்டம்ப்க்கு போற பாலை காலால தடுத்தா? அதான் அம்பயர் இவரை வெளிய போய் எங்கனா சின்ன பசங்க கூட ஆட சொல்லி துரத்தி விட்டுட்டார். அந்த கோபத்தை மனசுல வைச்சிகிட்டு அஸ்வின் மண்டையை உடைச்சிடீங்க இல்ல?
போதாதுன்னு கோலி வேற 70 ரன். ரைனவும் கோலியும் ஒரே ஏஜ் பசங்களாச்சே, இந்த மாதிரி ஆடனா பசங்களுக்குள்ள ஒரு காம்ப்ளெக்ஸ் வந்துடுமேனு நினைச்சி பார்க்க வேண்டாமா? அதான் எங்க தல (என்னது அஜித்தா? யப்பா அவரை சொல்லலப்பா) டிரெஸ்ஸிங் ரூம் ல போட்டுது பாரு மீட்டிங். ஏதோ சின்ன பசங்க, தெரியாம அடிச்சிட்டானுங்க. மன்னிச்சி விட்டுட்டு நாம நல்லா ஆடுவோம்னு சொல்லி முரளியையும் ஹஸியையும் அனுப்பி வைச்சா, மறுபடியும் உங்க வேலைய கான்பிச்சிடீங்க. அதான் பத்ரிய அனுப்பி மொக்கை போடா சொல்லி உங்களை எல்லாம் கடுப்பு ஏத்த வைச்சிச்சி எங்க தல (எங்களையும் தான்).அவனையாவது ஒழுங்கா வைச்சி வாழ்ந்து இருக்கலாம். தேவை இல்லாம அவனையும் வெளிய தள்ளி எங்க சிங்கத்தை களமிரக்கிடீங்க. கெயில் அடிச்ச ஒரு சிக்சருக்கு பதிலா ஒரு 6 அடிச்ச எங்க தலையையும் அவுட் ஆக்கி நீங்க பட்டீங்கலே ஒரு சந்தோசம்? அதான் இதுக்கு மேல உங்களை ஆட விட கூடாதுன்னு ஒரு போலரை (புண்ணியவான் மோர்கல் - மூனு 6 ஒரு 4 னு 10 பாலுக்கு 28 ரன்) இறக்கி விட்டு அடி பின்னிவிட்டோம். ரன் ரேட் 14 வேணும் நா கூட அசால்ட்ட அடிச்சோம் பார்த்த இல்ல ராயல் ? (ஆஸ்திரேலிய போலர் என்னமா பேட் பன்னராங்கடா யெப்பா? செம வொர்த்.)


அப்பறம் ரைனாவ 73 அடிக்க சொல்லி சமம் பண்ணிட்டோம். பாவம் புள்ள . மான் ஆப் தி மேட்ச் வாங்கும் போது கூட சிரிக்க முடியல. கால்ல அடி பட்டிருக்கு போல. இனி (கோலி -ரைனா)அவங்களுக்குள சண்டை வராது இல்ல? அப்பறம் ஆறு 6 வேற அடிச்சி அந்த தடி மாட்டு பயல வேற அடக்கிட்டோம். அப்ப கூட அவனை பால் போடா வைச்சி நாலு ஓவர் ல 19 ரன் தான் கொடுத்தீங்க இல்ல?

ஒரு வழியா பைனளுக்கு போய்ட்டோம். மறுபடியும் தப்பி தவறி நீங்க அங்க வந்தா கூட நல்லா புள்ளைங்களா கோப்பை வேணும்னா கேட்டு வாங்கிக்கணும். அதை விட்டுட்டு ஏதாவது பிரச்சனை பண்ணீங்க? ப்ளாக் டைட்டிலை படிங்க. அதை தான் மறுபடியும் சொல்ல வேண்டி இருக்கும். கொய்யால யாரு கிட்ட வைச்சிகிறீங்க?

பாதி பேர் மேட்ச் ஐ பார்த்து இருக்க மாட்டீங்க . சென்னை தோத்துடும்னு டிவியை ஆப் பண்ணிட்டு இருப்பீங்க. உங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிகிரன். நம்பிக்கை தான் வாழ்க்கை. செம மேட்ச். மிஸ் பண்ணிடீங்க போங்க.

வின் பண்ணுவோம்னு தலைக்கே 100% நம்பிக்கை இல்லையம். அப்பறம் நமக்கு எங்க இருந்து இருக்க போகுது இல்ல?


சரி தோத்திருந்தா என்ன தலைப்பு வைச்சி இருக்கலாம்?

தோத்தாலும் சிங்கம் சிங்கம் தான்.....!
ஆனா ப்ளாக் எழுத தான் மனசு வந்து இருக்காது.

24-05-2011 11.55 pm .

10 comments:

Rajkumar said...

தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்....!

நிலா said...

பின்னுாட்டமிடுவதற்க்கு நன்றி நண்பரே!

koodal bala said...

வித்தியாசமான ..சூடான ....கிரிக்கெட் விமர்சனம் ...அருமை !

Anonymous said...

செம காமெடி...!

ஜெகதீஸ்வரன்.இரா said...

தோழா கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொள்ளுங்கள்...!! படிக்கிற எனக்கே மூச்சு வாங்குது...!!

அருமையான தொகுப்பு வடிவேலு ஸ்டைல் ஒகே.. அடுத்து யாரு ஸ்டைலு...??

நிலா said...

நன்றி தோழா...!

DRபாலா said...

//நல்லா காலம் அந்த அடியாள் சீக்கிரம் அவுட் ஆகிட்டான்- இல்லனா மேட்ச் என்னத்துக்கு ஆகிறது? எவ்ளோ பால் மாத்த வேண்டி இருந்து இருக்குமோ? விளையடிக்கினு இருக்கும் போதே பாலை தூக்கி வெளிய அடிச்சிடரன்யா அவன் //

ha..ha.ha.ha.

Raja said...

பாஸ் !! சூப்பர் கவரேஜ் ... கலக்கிட்டிங்க போங்க... :)

நிலா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே....!

Thameez said...

thalaippu nalla comedy