Friday, May 13, 2011

ஜெய்க்க போவது எந்த சேனல்?


ஜனநாயகத்தின் நான்காவது தூண், பத்திரிக்கை எனப்படும் ஊடகத்துறை. ஜனநாயகத்தை தாங்கி பிடிக்கும் தூண்களில் (நாடாளுமன்றம்-சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை) மக்களுக்காக உலக செய்திகளை நேர்மையாக நடுநிலைமையோடு சேகரித்து தர வேண்டிய பலமான தூண். மற்ற மூன்று துறைகளின் அன்றாட செயல்பாடுகளை மக்களிடம் சேர்த்து தெரியப்படுத்த (தெளிவுப்படுத்த) வேண்டிய துறை. இந்திய சுதந்திரத்திற்க்கும், மக்களிடம் கல்வி, நோய், மருத்துவம், மற்றும் அனைத்துவிதமான விழிப்புனர்விர்க்கும் பயன்பட்ட இந்த துறை சமீபகாலமாக வியாபாரத்தை நோக்கி சென்று விட்டது. வியாபாரத்தை கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த அரசியல் கட்சிகளின் சார்ப்பாக செய்தி ஊடகங்கள் தோன்றிய பிறகு செய்திகளை திரித்து கூறுவதும், அவர்களுக்கான செய்திகளில் (சப்பை மேட்டர்னா கூட) முன்னுரிமை கொடுப்பதும் அதிகமாகிவிட்டது.

எல்லா கட்சிகளுக்கும் கொள்கை இருகின்றதோ இல்லையோ , நிச்சயம் ஒரு ஊடகம் தேவைப்படுகின்றது. காரணம் நடு நிலை ஊடகங்கள் இவர்களின் செய்திகளை சிறிய அளவில் மட்டுமே வெளியிடுவதும், மற்ற கட்சிகள் அவர்களின் ஊடகங்களை கொண்டு அவர்களை முன்னிலைப்படுத்துவதாலும்
இவர்களின் வளர்ச்சிக்கும் ஊடகம் தேவையானதாக இருக்கின்றது. சீமான் கூடிய சீக்கிரம் சேனல் ஆரம்பித்துவிட்டாலும் ஆச்சரியபடுவதர்க்கில்லை.

ஒரு கட்சி தலைவரை ஆரம்பத்தில் புறக்கணித்த சில கட்சி சேனல்கள் அவர் சொந்தமாக டிவி சேனல் ஆரம்பித்த உடன் சிறு அளவில் செய்திகளை வெளியிட ஆரம்பித்தது. அதே நேரத்தில் வேட்ப்பாளரை அடித்தார் , குடித்தார் , உளறினார் என்று தேர்தல் நேரத்தில் செய்தியை வெளியிட வேண்டும் என்பதை தாண்டி அவரின் கட்சிக்கு கிடைக்கும் ஓட்டை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரை நாள் முழுவதும் அதே சேனல்கள் காட்டின.

பதிலுக்கு இவர் கட்சி சேனலும் மற்ற கட்சி தலைவரின் தேர்தல் பேச்சில் ஏற்ப்பட்ட தவறுகளை தான் பிரதானமாக்கி கொண்டிருந்தன. மக்களுக்கு இவர்களின் சேனல்களை தாண்டி பார்க்க ஒரு சில சேனல்கள் மட்டுமே இருந்தன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று. பாலிமர் , ராஜ், விஜய் போன்ற சேனல் எந்த கட்சியையும் முன்னிலைப்படுத்தவில்லை என்றாலும் விஜய் சேனல் airtel சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தேர்தலுக்கோ செய்திகளுக்கோ எப்போதும் தருவதில்லை.



இப்போதும் 2g இல் ஊழல் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஊடகங்களும் இருக்கத்தானே செய்கின்றது? ஈழ தமிழர் (என்று கூட தனிமை படுத்த வேண்டாம் அவர்களும் மக்கள் தானே? எந்த மொழி பேசினால் என்ன? அவர்கள் கொல்லப்படும் போது சாதாரண மனிதாபிமானம் உள்ள மனிதன் கூட மனதளவில் வருத்தப்பட்டு இருப்பான்) பிரச்சனையில் ஒரு மத்திய கட்சியின் கூட்டனிக்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்துவிட்டு தேர்தல் வந்த உடன் கூட்டணி உறுதி செய்யப்பட்ட உடன் தங்கள் ஊடகங்களை கொண்டு தங்களுக்கு தான் உண்மையில் அக்கறை உள்ளது போல செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை என்ன சொல்வது?

மக்களிடம் உண்மையை சொல்லி அவர்களை சுயமாக சிந்திக்க வைக்க வேண்டிய ஊடகங்கள் தங்களின் தேவையை அவர்கள் மேல் திணித்துக்கொண்டு இருக்கின்றன.அந்த வகையில் பெரும்பாலான சேனல்கள் கட்சி மாநாட்டின் மேடை நிகழ்ச்சியை போல தான் செயல்பட்டு கொண்டு இருந்தன? கருத்துக்கனிப்புகள் என்ற பெயரில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று முழக்கமிட்டன. அந்த வகையில் எந்த சேனல் ( லின் எண்ணம் அல்லது ஆசை அல்லது எதிர்பார்ப்பு) வெற்றி பெற போகின்றதோ தெரியவில்லை...!

என்னோட கெஸ் j வும் c யும் தான். பார்க்கலாம் இன்னும் கொஞ்சம் நேரத்தில்....

இதெல்லாம் ஒரு பரபரப்பா பாஸ்?

கட்சி சார்ந்த ஊடகங்கள் ஒழிந்தால் தான் நான்காவது தூண் நிமிர்ந்து நிற்கும். இல்லையேல் நான்காவது தூண் என்ற ஒன்று வருங்காலங்களில் வார்த்தையாக கூட உச்சரிக்கப்பட மாட்டாது.


இன்றைய போட்டோ
தாத்தா பேரன் உறவுகளை பார்க்க முடியாமல் போன இந்த காலத்தில் கடற்க்கரைக்கு தனியாக வந்திருந்த தாத்தாவும் பேரனும்.


இதையும் பார்க்கலாமே?

1 comment:

பாண்டியன் said...

ப்ளாக் வொர்க் ஆகல. அதான் லேட்.