Wednesday, April 6, 2011

Duel & Dead End - கார்களில் நகரும் கதைகள்

வணக்கம் நண்பர்களே...,

இரண்டு வித்தியாசமான திரைப்படங்களை பற்றிய பதிவு இது. அந்த திரைப்படங்கள் Duel (1971) . மற்றும் Dead End (2003).

Duel : கதையின் நாயகன் காரில் ஒரு இடத்திற்கு கிளம்புகின்றான். சாலையில் சென்றுகொண்டு இருக்கும் போது முன்னால் செல்லும் ஒரு tanker lorry முந்திச்செல்ல முற்ப்படுகின்றான். அவன் முந்திசென்ற பின்பு இவனது காரை அதே tanker லாரி இவனை முந்தி செல்கின்றது. மீண்டும் இவன் முந்தி செல்ல ஆரம்பிக்கின்றது ஆட்டம். லாரி இவனை கொல்ல முயற்ச்சிக்கும் போதெல்லாம் தப்பிக்க முயல்கின்றான். படத்தில் எப்போதெல்லாம் லாஜிக் மீறல் என்று நினைத்து கதையின் நாயகன் இதிலிருந்து தப்பிக்க இப்படி செய்யலாமே என்று நினைத்தால் அதை உடனே அவனும் செய்து விடுகின்றான். ஆனால் அதையும் தாண்டி திரைக்கதை ஜெயித்துவிடுகின்றது. சும்மாவா? ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

கீழ்கண்ட இரண்டு புகைப்படங்களை ஸ்டோரி போர்டு போல திரும்ப திரும்ப வைத்தால் அது தான் இந்த திரைப்படத்தின் திரைக்கதை. இந்த படத்தை பார்த்தால் இதை எழுத்து வடிவில் (திரைக்கதை) எழுதுவது எவ்வளவு கடினம் என்பது புரியும். ஆனால் இது ஒரு புத்தகமாக வந்த கதை, பின்பு படமாக்கப்பட்டுள்ளது.



Dead End : கதையின் நாயகி தான் குடும்பத்துடன் தன் உறவினர் வீட்டிற்க்கு கிளம்புகின்றாள். சாலையில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது ஒரு பெண் தன் கை குழந்தையுடன் குறுக்கிடுகின்றாள். பின்பு ஆரம்பிக்கின்றது இங்கே கதை. (நில் கவனி செல்லாதே படத்திற்கும் இதற்கும் சம்பந்தம்இருகின்றதா என்று எனக்கு தெரியாது). இங்கே எங்கே எல்லாம் லாஜிக் மீறல் என்று நினைகின்றோமோ, கடைசி ஒரு நிமிடத்தில் அதை எல்லாம் தவறு என்று நினைக்க வைத்துவிடுகின்றார்கள். fight club, inception போன்ற திரைப்படங்களில் கையாளப்பட்டு இருக்கும் நிச்சயமற்ற திரைக்கதை யுக்தி கையாளப்பட்டு இருப்பது தான் இந்த படத்தை wrong turn, the hills have an eyes போன்ற படங்களில் இருந்து வேறுபடுத்துகின்றது.


இந்த இரண்டு படங்களிலுமே பிரதான பாத்திரமாக வருவது வாகனங்கள் தான். Duel லில் ஒரு கார் ஒரு லாரி. Dead End இல் இரண்டு கார்கள்.
இண்டு படங்களிலுமே இவர்கள் புறப்பட்டு காரில் சென்றுகொண்டு இருப்பதே முதல் காட்சி
இரண்டு படங்களிலுமே இவர்கள் சென்று சேர நினைத்த இடத்தை சென்று சேர்வதில்லை
இரண்டு படங்களிலுமே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே தான் கதாபாத்திரங்கள் கையாளப்பட்டு இருக்கின்றது


Duel psychological thriller குடும்பத்துடன் பார்க்கலாம். Dead End horror movie குழந்தைகளை தவிர்த்தல் நலம்.
Duel முழுக்க பகலில் நடக்கின்றது. Dead End முழுவதும் இரவு. இரண்டு படங்களுமே ஒரே நாளில் நடந்து முடியும் திரைக்கதை.
Duel லில் பின்னணி இசை குறைவு. அதனால் படத்துடன் ஒன்ற முடிகின்றது.
Dead End இல் பின்னணி இசை அதிகமாக வைத்து பயப்பட வைகின்றர்கள்.








அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். இந்த இரண்டு படத்தையும் தமிழ் ல சுட முடியாது.
படத்தின் கால அளவு ஒன்னரை மணி நேரத்திற்கும் குறைவு தான்.

1 comment:

சேக்காளி said...

//அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். இந்த இரண்டு படத்தையும் தமிழ் ல சுட முடியாது.
படத்தின் கால அளவு ஒன்னரை மணி நேரத்திற்கும் குறைவு தான்//
இரண்டு படத்தினையும் சேர்த்து ஒரே படமாக சுட்டால்?