Thursday, April 21, 2011

The Game - 1997 பக்காவான சஸ்பென்ஸ் த்ரில்லர்.

வணக்கம் நண்பர்களே...!

உங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் செய்திகள் வாசிப்பவர் உங்களுடன் பேசினால் எப்படி இருக்கும்?
காரணமே என்னவென்று தெரியாமல் ஒரு மிகப்பெரிய கொலை கும்பல் உங்களை கொலை செய்ய துரத்தினால் எப்படி இருக்கும்?
ஒரு கால் டாக்ஸி யில் போய் கொண்டு இருக்கும் போது அந்த டிரைவர் வண்டியை வேகமாக ஓட்டி சென்று அவர் மட்டும் கீழே குதித்துவிட்டால்?
உங்களுடைய பணம் சொத்து எல்லாம் ஒரே நாளில் பறி போய் விட்டால்?
ஊர் பெயர் தெரியாத இடத்தில் கையில் பத்துபைசா கூட இல்லாமல் பிச்சை எடுக்க விட்டால்?
அப்படி ஒரு அடுக்கடுக்கான திருப்பங்கள் நிறைத்த படம் இது.

ஒரு கோடிஸ்வரன் நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருக்கிறார். ஆனா அவருடைய வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை. அந்த நேரத்தில் ஒரு பிறந்த நாள் விழாவில் அவரின் நண்பர் அவருக்கு பரிசாக ஒரு கூப்பனை கொடுகின்றார். அது ஒரு நிறுவனத்தின் கூப்பன் என்றும் அங்கே சென்று பதிவு செய்து கொண்டால் பல விதமான எதிர்பாராத சுவாரிசியமான நிகழ்வுகள் ஏற்ப்படும் என்றும் சொல்ல அவர் வேண்டா வெறுப்பாக அங்கே சென்று பதிவு செய்துவிட்டு வருகின்றார். அவரது சில நண்பர்களும் ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் பதிவு செய்து சுவரிசியமான சில நிகழ்வுகளை சந்தித்ததாக சொல்கின்றனர்.

அவர் வீட்டுக்கு வரும் போது அந்த நிறுவனத்திடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வருகின்றது. உங்களுக்கான விளையாட்டு நடைபெறாது என்றும் நீங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் சொல்லிவிட்டு இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. அதைபற்றி கவலை கொள்ளாமல் அவர் வீடு வந்து சேர்கின்றார். வீட்டின் முன்புறத்தில் யாரோ மாடியிலிருந்து வீழ்ந்து தற்க்கொலை செய்து கொண்டிருப்பது போல ஒரு உடல் கிடக்க இவர் பயந்து சென்று அருகில் பார்க்கும் போது அது ஒரு பொம்மை என்று தெரிகின்றது. இதன் பின்பு தான் மேலே சொன்னதெல்லாம் நடக்கின்றது.

படத்தின் பெயர் தி கேம் (1997). செவென் (seven) திரைப்படத்தின் இயக்குனர் டேவிட் ப்லேன்சேர் (david flencher) தான் இந்த படத்திற்கும் இயக்குனர். seven திரைப்படம் எப்போதும் துப்பறியும் திரைப்படங்களுக்கான வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் ஒரு இடத்தை பிடிக்க கூடியது.மைகேல் டௌக்லஸ் (michael douglas) இன் நடிப்பு அபாரமாக இருக்கும்.

உயிருக்கு பயந்து போலிசாரிடம் புகார் தந்து அவர்களை அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அழைத்துசென்று பார்க்கும் போது அங்கே அப்போது தான் கட்டுமான பணிகளே நடந்து கொண்டு இருக்கும்.

அப்பாவின் சொத்துக்கள் எல்லாம் போய்விட்ட பின்பு ஏதோ ஒரு ஊரில் பிச்சை எடுக்கும் நிலை வரும் போது நம்மை அறியாமலே நம் மனம் வேதனை கொள்ளும். காரணம் முதல் 20 நிமிடங்கள் அவர் எவ்வளவு சொகுசான வாழ்க்கையை சாதாரணமாக வாழ்ந்து இருகின்றார் என்பதை காட்டுவார்கள்.

சொத்துக்கள் எல்லாம் போன பின்பு உயிரே போனாலும் பரவா இல்லை என்று முடிவெடுத்து களத்தில் இறங்கும் போதும், கடைசி காட்சியிலும் அற்ப்புதமான இயல்பான நடிப்பு.

திரைப்படம் 2 மணி நேரம். முதல் 20 நிமிடம் இயல்பான வாழ்க்கை. அடுத்த ஒரு மணி நேரம் பரபரப்பு, கடைசி 20 நிமிடம் பழிவாங்குதல் என்று ஒரு பக்காவான சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது. ஒரு சில காட்சியை தவிர்த்துவிட்டால் குழந்தைகளோடு கூட இந்த படத்தை பார்க்கலாம்.

இந்த படத்தில் வருவதை போன்ற ஒரு கிளைமாக்ஸ் இதுவரை வேறு எந்த படத்திலும் பார்த்தது இல்லை. யாரிடமும் இந்த கிளைமாக்ஸ் ஐ சொல்லிடாதீங்க. அடுத்தடுத்து 2 கிளைமாக்ஸ் உள்ள படம்.

2 comments:

livingston baba said...

இந்த பதிவை அழித்துவிட்டால் நல்லது.தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்....!
அசத்தலா இருக்கு.....!
நல்லா இருக்கு.....!
பரவா இல்ல....!
நீங்க இன்னும் வளரனும் தம்பி...!
செம காமெடி போங்க...!
ஏன் சார் எங்க டைம் ஐ வேஸ்ட் பண்ணறிங்க?
இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா....
அய்யோ ராமா?
இந்த பதிவை அழித்துவிட்டால் நல்லது.sory bossu summa padam pathutu ungakitta solrean

நிலா said...

பின்னுாட்டமிடுவதற்க்கு நன்றி நண்பரே!