Friday, April 1, 2011

அபோகலிப்டோ 2006 - உயிர் வாழ்தலின் போராட்டம்

வணக்கம் நண்பர்களே..
இந்த திரைப்படத்தை ஏற்க்கெனவே பலர் பார்த்துவிட்டு இருப்பீர்கள்.இருந்தாலும் இந்த திரைப்படத்தை பற்றி எழுத காரணம் , எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் நம்மை புதிதாய் ஒரு காட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு உயிர் வாழ ஆசை இருந்தால் ஓடு என்று சொல்லி, ஓடவிட்டால் எப்படி திக்கு தெரியாமல் ஓடுவோமோ அப்படிப்பட்ட ஒரு உணர்வை ஏற்ப்படுத்த கொஞ்சமும் தவறுவதில்லை இந்த படம்.
கதை மாயன் இன மக்கள் வாழும் காலத்தில் நிகழ்கின்றது. நம் நாகரிக வாழ்க்கையின் ஆரம்ப காலம் எப்படி இருந்து இருக்கும்? காட்டில் வசித்தவர்களாக, குறைந்த பட்ச உடை அணிந்தவர்களாக, சத்தத்தில் ஒரு வாக்கியத்தின் பொருளை உணர்த்துபவர்களாக, வேட்டையாடுபவர்களாக.....,! அப்படிப்பட்ட காலகட்டத்தில் நம்மை கூட்டிக்கொண்டு போய், வெறுமனவே கதை சொல்கின்றேன், உட்க்கார்ந்து பார்த்துவிட்டு போ, என்று சொல்லாமல் நம்மையும் ஒரு ஆதிமனிதனின் எண்ணங்களோடு சேர்த்து உயிர் வாழ்தலின் போராட்டத்தை உணரவைத்து விடுகின்றார் இந்த திரைப்படத்தின் இயக்குனர். படத்தின் பல இடங்களில் ஆதிகால மக்களின் வேட்டையாடும் யுக்தி அற்புதமானதாக இருக்கின்றது. படத்திற்காக பல ஆராய்சிகளை செய்துள்ளனர் இந்த படக்குழுவினர்.

ஒரு சிறு கிராமத்தை தீடீர் என்று ஒரு குழு வந்து தாக்கி அழித்துவிட்டு, அங்கு இருப்பவர்களை சிறை பிடித்து அடிமைகளாக கொண்டு போகின்றது. அங்கே கொண்டு போய் அடிமைகளாக வேலை வாங்க போகின்றார்கள் என்று பார்த்தால் கடவுளுக்காக பலி கொடுக்க போகின்றார்கள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரியப்படுத்தப்படுகின்றது. அந்த பலிஇட போகின்ற மனிதர்களில் கதையின் நாயகனும் ஒருவன். அவர்களிடம் இருந்து தப்பிப்பது இயலாத காரியம் என்று தெரிந்து பலி மேடையில் படுத்துக்கொண்டு, இவர்களிடம் இருந்து பாதுகாக்க தன் மனைவியையும், சிறு மகனையும் ஓர் கிணறு போன்ற பள்ளத்தில் விட்டு விட்டு நிச்சயம் திரும்பி வந்து காப்பாற்றுவேன் என்று சொன்னதை நினைத்து தன் இயலாமையில் அமைதியுருகின்றான்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு அசாதாரண நிகழ்வால் (இயற்கையின்) இவனும் இவனுடைய சில நண்பர்களும் பலியிடப்படுவதில் இருந்து தப்பிகின்றார்கள். ஆனால் அடிமைகளை வெருமெனவே விட்டுவிடுவார்களா? அடுத்து ஆரம்பிகின்றது ஓட்டம். நாம் இன்று பெரும்பால படங்களில் பார்க்கும் கார் சேசிங் எல்லாம் சும்மா என்று நினைக்க தோன்றும். discovery சேனலில் காமெராவை மறைத்துவைத்து விலங்குகளை படம் பிடிக்கும் போது இருக்கும் நம்பகத்தன்மை இந்த படம் நெடுங்கிலும் உள்ளது. படத்தின் மொழி மாயன் மொழி என்பது குறிப்பிட தக்கது. (அமெரிக்க காரங்களே சப்-டைட்டிலோட தான் படம் பார்த்தாகனும்). இருந்தாலும் எந்த மொழி தெரியதவங்களும் இந்த திரைப்படத்தை பார்க்க முடியும். முக பாவனைகளும், நடக்கும் சம்பவங்களும் அவர்கள் பேசும் பொருளின் சாரம்சத்தை நிச்சயமாக புரியவைத்துவிடும். படத்தின் வசனங்களை 4 காகித தாள்களில் எழுதி முடித்துவிடலாம் போல. வசனம் இல்லாத காட்சிகளில் முக்கியமானவற்றுள், கடத்தப்பட்ட தாய் மற்றும் மகன்களில், மகனின் கண் முன்பே தன் தாய் ஏலம் விடப்படுவதும், அவள் வயதானவள் என்பதால் யாரும் அவளை வாங்க முன்வராததால், அவளை வெளியே விட்டுவிடுவதும், அதே நேரத்தில் மகன் பலியிடப்பட போவதும், அந்த காட்சி அற்புதமாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும்.

அதே போன்று கர்ப்பிணி அந்த கிணற்றில் இருந்து வெளியேற முயற்சி செய்யும் போது அந்த சிறுவன் ஓடிவந்து உதவி செய்யும் காட்சிகளும் அதன் பின் வரும் காட்சிகளும்..........!
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் இந்த படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போய்விடுகின்றது. பொதுவாக படங்களின் பின்ணனி இசை அதிக்கப்படியான தாக்கத்தை action படங்கில் ஏற்ப்படுத்தாது. ஆனால் இந்த படத்தில் வசனம் குறைவு என்பதாலும் கதை நிகழ்வது மாயன் காலம் என்பதாலும் , மிக அற்புதமாக இழைக்கப்பட்டு இருக்கின்றது. ஒளிப்பதிவை பற்றி சொல்ல வேண்டுமானால் தாறுமாறா இருக்குது சொல்லிடலாம். படத்தை தியேட்டர் பார்க்க கொடுத்து வைக்கல....

படத்துல இருக்கறதா பத்தி நான் எவ்ளோ சொல்லாம விட்டுடேன். இன்னும் நீங்க இந்த படத்தை பார்க்கம இருந்தா, வீட்டில எவ்ளோ பார்க்காத படம் இருந்தாலும் அதை எல்லாம் அப்படியே வைச்சிட்டு இதை தாராளமாய் பார்க்கலாம். குழந்தைகளோட பார்க்கம இருப்பது நலம். adult சீன் எல்லாம் இல்ல. ஆனா ரத்தம் தெரிக்கும்படியான காட்சிகள் அதிகம்.

வேட்டைக்காரன் விஜய் அருவியில இருந்து குதிச்சு தப்பிக்கிற சீன், பொல்லாதவன் தனுஸ் கிளைமாக்ஸ் சண்டைல பயன்படுத்தும் யுக்தி னுநம்மாளுங்க முடிஞ்ச வரைக்கும் அடிச்சு இருக்காங்க.படத்தை பாருங்க.....

நான் இந்த படத்தை வரலாற்று ரீதியா அணுக விரும்பல. அப்படி அணுக படம் பார்த்த பின்பு ஆசைபட்டா இங்கே கிளிக் செய்யவும். அந்த பதிவில் இருப்பதைவிட ஆரோக்கியமான விஷயம் பின்னுட்டங்களில் இருப்பதாக எனக்கு தோன்றுகின்றது.

எவ்வளவு எழுத ஆசைப்பட்டேன்.ஆனா முடியல. மறுபடியும் அந்த படத்தை பார்க்க போறன். ரஜினிக்கு எப்படி எந்திரன் ஒரு "it's not a just film, its a experince" ஒ அந்த மாதிரி இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் just filmaa பார்க்க முடியல.
already அபோகலிப்டோ வை பார்த்துடீங்கள? ஒன்னும் பிரச்னை இல்ல. எப்பையும் போல இன்னொரு படம். pathfinder ( 2007 ). பாருங்க. இதுவும் ஒரு surprice படம் தான்.


அபோகலிப்டோ
from விக்கி பீடியா
Directed by Mel Gibson
Produced by
Written by
  • Mel Gibson
  • Farhad Safinia
Starring
Music by
Cinematography Dean Semler
Editing by John Wright
Studio


Release date(s) December 8, 2006 (2006-12-08)
Running time 140 minutes


Language Mayan
Budget $40 million
Gross revenue $120,654,337

1 comment:

Anonymous said...

நீங்க இன்னும் வளரனும் தம்பி...