
ஏன் இந்த திடீர் கொலை வெறினா, ஒரு ஓ சி பார்க்ல (park = பூங்கா . ஓசி=?) சும்மா உட்காந்துகினு இருந்த அப்போ ஒரு டாடி அவங்க பொண்ணுகிட்ட (6 ஏஜ் தான் இருக்கும்) டால்கிங் பண்ணிட்டு இருந்தார். அந்த கேர்ள் சொல்லிச்சி " அப்பா , அண்ணன் எங்கூட ஒழுங்கா விளையாட மாட்டேன்கிறான் பா" னு. அதுக்கு அந்த டாடி "ஒய் ரமேஷ்? ப்ளே வித் ஹேர் , அண்ட் பி கேர்புள்" னு. சொல்லிட்டு அவர் போனை எடுத்து யார்கிட்டையோ பேசினார் பாருங்க? (யார்என்ன பேசின உனக்கு என்ன ? நீ ஏன் ஒட்டு கேட்ட? அப்படின்னு எல்லாம் கேட்ககூடாது காரணம் அது ஒரு பப்ளிக் பிளேஸ் ) என்ன பேச்சு? அது தமிழ் தான். ஆனா என்னால தான் புரிஞ்சிக்க முடியல போல? அந்த சின்ன பொண்ணு எவ்ளோ அழகா தமிழ் பேசுதுன்னு சந்தோசப்பட்டன் சாரி மகிழ்ச்சியுற்றேன். ஆனா அந்த அப்பா பேசுன இங்க்லீஷ் நல்லா இருந்தாலும் (எனக்கு மட்டும் ஒரு வேலை இப்படி தோணுதோ?) தமில் ரொம்ப கஷ்டம் டா சாமி. அந்த பொண்ணும இவர் மாதிரி தமிழ் பேச ஆரம்பிச்சா இதுக்கு பொறக்கும் குழந்தை தமிழை என்ன மொழியா மாத்திட்டு போகுமோ தெரியல.

அது என்னவோ ஒரு விளையாட்டு னு அந்த டாடி இங்க்ளிஷ்ள சொன்னார். எனக்கு தான் புரியல. மேல இருக்கற விளையாட்டு தான். சின்ன வயசுல அப்பா கால்ல ஏத்தா மர தோழி னு பாடியும் , மாட்டு வண்டி நெவுத்தடில ஆடியதோட சரி நம்ம ஆட்டம் எல்லாம்.. சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். அவங்களை விடுங்க. அவங்க எல்லாம் ரிச் பீப்புல்ஸ். (ரிச் பீபுல்ச்க்கு ஓசி பார்க் ல என்னவேலை? = நல்லா கேட்கரான்கையா டீடைலு). ஆனா இணையத்தை பயன்படுத்தும் (ஆக்கபூர்வமாக) நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் (நடுத்தர வர்க்கம்) குறைந்த பட்சம் ஒரு மொழியையாவது தவறின்றி உச்சரிக்க பழகிக்கொள்ள வேண்டாமா?
அதுவும் நாம் எல்லாம் தமிழ் (ழில்) எழுத்தாளர்கள் (எழுதுபவர்கள்). (இல்லையா பின்ன) நாம் கூட நம் மொழிக்கு மரியாதை தரவில்லை என்றால் வேறு யார் தருவார்கள்? பண்டங்களில் கலப்படம் உடலுக்கு கேடு. மொழிகளில் கலப்படம் ?
நாம் ஒன்றும் அவ்வை தமிழை எழுத வேண்டிய கட்டாயமில்லை (எ.கா : பின்நவினத்துவம் . எத்தனையோ ப்ளாக் (வலைப்பூ) ல பார்த்துட்டேன் . அர்த்தம் மட்டும் புரியவே இல்ல). எட்டாம் வகுப்பு தமிழ் உரைநடை பாடப்புத்தகத்தில் உள்ள தமிழை எழுதலாம் இல்லையா? சரளமான தமிழ் கூட வேண்டாம். பேச்சுமொழித்தமிழ் போதும்.
அதை வேற்று மொழி உச்சரிப்பு இன்றி எழுத அட்லீஸ்ட் (குறைந்த பட்சம்) முயற்சி செய்யலாம் அல்லவா?
மேற்கண்ட வாக்கியத்தில் இப்போதைக்கு அட்லீஸ்ட் ஐ இது போல வெளியே சொல்லி தமிழை பிராக்கெட் (அடைப்புக்குறி) க்குள் சொல்ல ஆரம்பியுங்கள். போகப்போக தானாகவே தமிழ் வெளிய வந்து ஆங்கிலம் உள்ளே சென்று விடும். எனக்கு நிறைய வார்த்தைகளுக்கு தமிழாக்கம் தெரியாதே னு சொல்றவங்களுக்கு இணையதள தேடு பொறி உதவும் என்று நம்புகின்றேன். அல்லது எனக்கு தெரிந்த ஒரு வலைப்பக்கம் இங்கே அழுத்தவும்.
உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் , எனக்கும் நிறைய தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்த புண்ணியம் வந்து உங்களை சேர வேண்டும் என்று நான் எதிர்பார்கின்றேன். ம்ஹும் . சேரட்டும்.
அப்பறம் முடிஞ்ச இந்த வலைப்பூவில் இந்த பக்கத்தை படியுங்கள்.
இஷ்டம் இருந்தா ஏத்துக்கங்க. இல்லனா முயற்சி செய்யுங்க. இப்படியே விட்டா அடுத்த தலைமுறை மாணவர்களின் தேர்வுகளில் கீழ்கண்ட கேள்வி இடம் பெரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
1.தொல்காப்பியம் என்ற நூல் எந்த மொழியில் இயற்றப்பட்டது?
a) தமிழ் b) ஆங்கிலம் c) சமஸ்கிருதம் d) பட்டம் விடுற நூல் எந்த மொழியில் இருந்தா என்ன?
தண்டோரா: போன பதிவை இன்ட்லி ல ஓட்டு போட்டு பிரபலமாக்கின 19 நண்பர்களுக்கும் நன்றி.
ஏன் கூ முட்டை னு சொன்னன்னா தமிழ் தெரியவதாவங்களா நீங்க இருந்தா இந்த பதிவை எப்படி படிக்க முடியும்? எப்படி உங்களால எழுத முடியும்?.
அப்பறம் அந்த மாதிரி i don't like Tamil னு பீட்டர் விட எப்படி மனசு வரும் ?
ஆமாம் பீட்டர் னா எந்த மொழி?
ஆளை விடுப்பா சாமி........!
வல்லினம் மெல்லினம் இடையினம் உள்ள நம் தமிழ் பிடிக்கவில்லை எனில் வேறு எந்த மொழி பிடித்துவிடப்போகின்றது?