Tuesday, January 18, 2011

Machete-2010 ஒரு தலைவன் இருகின்றான்....!



யாராவது இது கமலின் அடுத்த படத்தின் கதை என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..!

இரண்டு அண்டை நாடுகள் உண்டு ( உங்களுக்கு தெரிந்த இரண்டு நாடுகளின் பெயர் example கு இந்தியா - இலங்கை அப்படினு கூட எடுத்துக்கலாம் அதற்கு நான் பொறுப்பல்ல)

இதில் ஒரு நாட்டில் ஒரு அரசியல் வாதி (ஒரு தலைவன் இருகின்றான்....!) உண்டு
அவர் அங்கே ஒரு உயரிய பதவியில் இருகின்றார்
அவருக்கு உதவி செய்ய ஒரு தொழில் அதிபர் (ரவுடி னு கூட சொல்லாம் போல) உண்டு. அவருக்கு கட்டளை இட போதை பொருட்கள் விற்கும் தாதா ஒருவர் உண்டு. இவர்கள் இருவரும் அண்டை நாட்டை சேர்ந்தவர்கள் . அந்த தாதா தான் போதை பொருட்களை அவர் நாட்டில் இருந்து இங்கே கொண்டு வந்து விற்று இந்த அரசியல் வாதிக்கு பங்கு கொடுத்து வைத்து இருப்பார்.

அரசியல் வாதியின் பொழுது போக்குகளில் துப்பாக்கி சுடுதலும் உண்டு. அதாவது அண்டை நாடுகளில் இருந்து இவர்கள் நாட்டுக்கு (தரை வழியாக) வருபர்களை சுட்டு விளையடிகொண்டு இருப்பார். அதற்கு அந்த எல்லை பாதுகாப்பு படை துறை தலைவரும் உடந்தை. ஏனென்றால் அரசியல் தலைவர் தானே அவரை நியமித்து இருப்பார்? (உதரணமாக நீங்கள் ஊழல் வழக்கு யார் மேல உள்ளதோ அவர் தான் ஊழல் கண்காணிப்பு துறை தலைவராக இந்தியாவில் இருப்பதை நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கின்றேன்)
அரசியல்வாதி செய்யும் அனைத்து வேலைகளையும் ? தொழில் அதிபர் படம் பிடித்து வைத்து இருப்பார் .

இந்த நிலையில் அண்டை நாடுகளில் இருந்து இங்கே வந்து பிழைத்துக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் ஒரு குழுவாக செயல் பட்டுக்கொண்டு இருப்பார்கள். முடிந்த வரை புதிதாக வருபவர்களுக்கு வேலை தங்குமிடம் எற்படுத்தி கொடுப்பார்கள். இவர்களுக்கு தன்நாட்டு மக்கள் கொல்லபடுவது தெரியும். இருந்தாலும் இந்நாட்டு அரசையும் அந்த எல்லை பாதுகாப்பு துறை தலைவரையும் கொல்வதற்கு (போர் புரிவதற்கு ) நேரம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

இந்த நிலையில் இங்கே தேர்தல் வரும். அரசியல்தலைவர் மேடை பேச்சுகளில் தன் இனம் தன் மொழி தன ஜாதி என்று அவர் நாடு மக்களிடம் பேசிக்கொண்டு இருப்பார். இருந்தாலும் இவர் தவறி கூட தோற்றுவிட கூடாது என்பதற்காக ஒரு நாடகம் அரங்கேறும். ஒரு வெளிநாட்டுகாரனை வைத்து இந்த தலைவரை கொல்ல திட்டம் இந்த தொழில் அதிபரால் தீட்டப்படும். அவன் அங்கு இவரை கொல்ல வரும் போது வேறு ஒருவன் இவனை சுட்டு விட்டு அந்த அரசியல் தலைவரை காலில் சுட்டு விடுவான். பழி வெளிநாட்டுகாரன் மேல் விழும். அரசியல் தலைவர் அனுதாப ஓட்டு வாங்கி ஜெய்துவிடுவார்.

உள்நாட்டு போலிஸ் இவனை தேடும். அந்த தொழில் அதிபரும் இவனை தேடுவான். எங்கே உண்மையை சொல்லிவிடுவானோ என்று. பின்பு நாயகனை(வெளிநாட்டுகாரன்) அந்த நாட்டில் தங்கியுள்ள அந்த குழுவை சேர்ந்த பெண் ஒருத்தி காப்பாற்றி தன வீட்டில் தங்க வைப்பாள். வில்லன்கள் அந்த வீட்டை கண்டு பிடித்து விட அங்கு இருந்து தப்பி ஓடி பின்பு எப்படி அவர்களை பழி வாங்குகின்றான் என்பதை திரையில் பாருங்கள்.

படத்தின் பெயர் Machete 2010
முழு நிர்வாண காட்சிகள் உள்ள படம்
உடலுறவு காட்சிகள் இல்லை
பேரல் கணக்குல ரத்தம் ஓடும்
தலையை கூட நாலு துண்டா வெட்டுவாங்க
குடலை புடுங்கி மாலையா போடறதுக்கு பதில் வேற ஒன்னு நடக்கும்
கடைசியில் அந்த அரசியல்வாதிக்கு நேரும் மரணம் இங்கே நிறைய பெயருக்கு நடந்தால் ரொம்ப நல்ல இருக்கும்னு நீங்க நினைச்சா அதற்கு நான் பொறுப்பல்ல
குழந்தைகளோடு நிச்சயம் இந்த படத்தை பார்க்க வேண்டாம்
உங்களுக்கு எதிர்பாராத காட்சிகள் நிறைய இருக்கும்
நம்பி பார்க்கலாம் செம ரத்தம் சாரி செம சூப்பர்
நம்ம அரசியல் வாதி எப்படி பட்டவர்கள் னு நிறைய காட்சிகள் இருக்கு

ஒரு முக்கிய உரையாடல் ஓன்னு வரும்
பாதிக்க பட்டவர்கள் சார்பில்

We didn’t cross the border
The border crossed us
இது எப்ப எல்லாருக்கும் புரிய போதோ தெரியல.

ஒரு வேலை நீங்க already இந்த படத்தை பார்த்துட்டு இருந்தால் ஒன்னும் கவலை பட வேண்டாம்.

shooter 2007 திரைப்படத்தை பார்க்கலாம்
இதுவும் செம surprice படம்



நம்ம நாட்டுல நடக்கறதை பத்தி வெளிநாட்டுகாரன் எல்லாம் படம் எடுக்கறான்.
இங்க இருக்கறவங்க?
ம் என்னத்த சொல்ல?

போயிட்டு 75 வது படத்தை பாருங்க
அப்பவாவது உங்களுக்கு தேச பற்று வருதானு பார்க்கலாம்



(யாரையும் திட்டாம பதிவு போடறது எவ்ளோ கஷ்டமா இருக்கு)

3 comments:

Anonymous said...

எப்ப இந்த தலைவன் சாவன் ?
அதுவும் இதே போல border i தாண்டி போகும் போது

Unknown said...

கடைசி பகுதிக்கு வந்த போது தான் விமர்சனம் என்பதே புரிந்தது.
புது ஸ்டைல்

பாண்டியன் said...

நன்றி malgudi