Tuesday, January 11, 2011

மன்மதன் அம்பு - நீல வான ஆச்சர்யம்..!

வணக்கம் நண்பர்களே...
இது மன்மதன் அம்பு திரைப்படத்தின் விமர்சனம் அல்ல. பலர் இதைபற்றி எழுதி முடித்துவிட்டதால், அத்திரைப்படத்தில் நான் பார்த்த , எனக்கு ஆச்சர்யம் தந்த ஒன்றை பகிர்ந்து கொள்ள இந்த பதிவு. இது எத்தனை பேருக்கு ஆச்சர்யம் தரும் என்று எனக்கு தெரியாது (காரணம் பின்பு சொல்கிறேன்).



எப்போதும் திரைப்படத்தின் சென்சர் போர்ட் சர்டிபிகேடில் இருந்து எண்டு கார்டில் ஆடியோ கம்பெனியின் லோகோ கீழிருந்து மேலே போகும் வரை பார்க்க ஆசைபடுவேன். ஆனால் அது நடக்காத காரியம். அதை பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

இந்தமுறை நண்பர்களோடு பார்க்க திட்டமிட்டு இருந்ததால் அரை மணி நேரம் தாமதமாகத்தான் உள்ளே சென்றோம். திடீர் திடீர் என்று சிலர் சிரித்தார்கள். புதிதாய் வந்த எங்களுக்கு சரியாக புரியவில்லை. (ஒருவேளை ஏற்க்கெனவே அரைமணி நேரம் உள்ளே இருந்ததால் பழகிட்டு இருப்பங்களோ ?). உபயம் LIVE AUDIO REC ..! சரி விசயத்திற்கு வருவோம்.

கமலும், மேலை நாட்டு பெண்ணும் (பெயர் தெரியவில்லை, தெரிந்தாலும் நம் வாயில் நுழையப்போவதும் இல்லை) தோன்றும் அந்த நீ........ வானம் பாடல் தான் நான் சொல்லவந்த மன்மதன் அம்பு - நீல வான ஆச்சர்யம்..! ஒரு நிமிடம் யோசித்து விட்டு பின்பு தொடரவும்...

உங்களுக்கு இரண்டு ஆச்சர்யங்கள் தோன்றி இருக்கலாம் .
1. மேலை நாட்டு பெண் .?
ம்ம் ! (ஒரு வேலை இந்திய நாட்டு பெண் சலித்து விட்டு இருக்கலாம்.... கவனிக்கவும் .. ரசிகர்களுக்கு )
ஆனால் அதை கூட மதராசப்பட்டினத்தில் செய்து விட்டார்கள் . அப்ப அது இல்ல . பின்ன அடுத்து என்னவா இருக்கும்?
2. பாடல் ஒளிப்பதிவு பின்னோக்கி செல்லும் யுக்தி ?
அதை கூட அலை பாயுதே , சித்திரம் பேசுதடி போன்ற படங்களில் செய்து விட்டார்கள் அல்லவா?
உங்கள் பதில் ஆமாம் என்று இருந்தால் , இதனால் தான் நான் முதலில் சொன்னேன். “இது எத்தனை பேருக்கு ஆச்சர்யம் தரும் என்று எனக்கு தெரியாதுஎன்று!

சரி அதில் நான் கண்ட ஆச்சர்யம் .

அந்த பாடலை நன்றாக கவனித்தால் அதில் கமல் உதட்டசைவு (lip sync) சரியாக இருக்கும். அதாவது ஒளிப்பதிவு பின்னோக்கியும் ஒலிப்பதிவு முன்னோக்கியும் இருக்கும் . நான் முன்பு சொன்ன மற்ற இரண்டு படங்களில் உதட்டசைவு இருக்காது. காரணம் உதட்டசைவு என்பது ஒலி சம்பந்தப்பட்டது. பின்பு அதுவும் பின்நோக்கி சென்று விடும். பின்பு எப்படி இது சாத்தியமாகியது?

இது பற்றி தெரிந்து கொள்ள சில அடிப்படை விசயங்களை தெரிந்து கொள்வோம்
ஒளிப்பதிவு என்பதில் சாதரணமாக ஒரு கேமரா வில் 24 fps (fps = frames per second) படம் பிடிக்கப்படும். தேவைபடும் காட்சிகளில் 48 fps ல் படம் பிடித்து அதை ஒரு செகண்ட்க்கு 24 fps என்று மாற்றும் போது நாம் கேமரா முன்பு 1 sec க்கு செய்த மூவ்மென்ட் திரையில் 2 செகண்ட் வரும் (slow motion). அதையே 12 fps என்று படம் பிடித்து 24 fps என்ற வேகத்தில் பார்த்தல் நாம் செய்த மூவ்மென்ட் மிக வேகமாக ஓடும் . பெரும்பாலும் action காட்சிகள் இப்படித்தான் படம்பிடிக்க படுகின்றது.

ஏன் இதை சொல்ல வந்தேன் என்றால், இந்த பாடல் முழுவதும் slow motion இருக்கும். எனவே இந்த பாடல் 48 fps இல் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு இருப்பீர்கள் . அதன் காரணமாக அவர்கள் சாதரணமாக ( 4 நிமிட காட்சிக்கு 2 நிமிடம்) நடித்தால் போதுமானது . ஆனால் உதட்டசைவு சரியாக இருக்க வேண்டும் அல்லவா? அதுவும் பின்னோக்கி...! முன்னரே நாம் இரண்டு நொடிக்கான காட்சியை ஒரு நொடியில் படம் பிடிக்க முடிவு செய்து விட்டோம் (48 fps because of slow motion). அப்போ ஒலி யில்? அதையும் இரண்டு நொடிக்கான பாடலை ஒரு நொடியாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் 4 நிமிட பாடல் 2 நிமிட பாடலாக வேகமாக ஓடிவிடும். (சில REMIX பாடல்களில் செய்யப்படும் யுக்தி இது). சரி அதையும் மாற்றி விட்டோம். அடுத்து ?


இது பின்னோக்கி செல்லும் பாடல் என்பதால் பாடலை முன்னோக்கி ஒலிப்பதிவு செய்து பின்பு மென்பொருள் உதவியுடன் அதை பின்னோக்கி மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் நமக்கு ஒரு புதிய மொழி கிடைக்கும். ஆனால் சத்தியமாக புரியாது. அப்படி மாற்றிவிட்டு அதை எழுத்து வடிவமாக்குவது மிக மிக கடினம். ஆனால் வேறு வழி இல்லை. LIP sync க்காக அதை எழுதி மனப்பாடம் செய்து ஒளிப்பதிவின் பொது பின்னோக்கி இருக்கும் பாடலை உதட்டசைக்க வேண்டும். பின்னர் ஒளிப்பதிவை மென்பொருள் உதவியுடன் பின்னோக்கி இருப்பது போல் மாற்றுவார்கள். அப்போதுதான் ஒளிப்பதிவை பின்னோக்கி மாற்றும் போது ஒலி (lip Sync) முன்நோக்கி வரும். அப்புறம் எடிட்டர் வேலை.. . ஒளியையும் ஒலியையும் சேர்ப்பது தான் .

அப்பா அப்பா அப்பா......
இப்பவே தலை சுத்துது இல்ல? புரியலைனா இன்னொரு முறை படிங்க பாஸ் !



புதிதாய் யோசித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் என் சார்பில் !
http://www.youtube.com/watch?v=bxNJHuM0Js0

வாழ்த்துக்கள் ரவிக்குமார் கும் கமலுக்கும் .
(நான் சொல்லும் பெரிய மனிதர்கள் பெயர் பின்னால் எல்லா இடத்திலும் திரு அல்லது சார் என்பதை சேர்துக்கொள்ளவும்)

இன்னொரு விஷயம் .
மேலை நாட்டு பெண்ணை பயன் படுத்தாமல் போய் இருந்தால் பின்பாதி ஒரு காட்சியில் அவர், அப்பெண் பேசும் மேலை நாடு மொழியை அக்கப்பலில் பணிப்பெண் பேசும் போது இவராலும் பதில் சொல்ல முடியாமல் போய் இருக்கும். திரிஷா inspire ஆகி இருக்க மாட்டார்கள். மேலும் கமலின் காதலை அக்காட்சியில் த்ரிசாவால் புரிந்து கொள்ள முடியும். மொழி கற்றுக்கொள்வது என்பது அப்பெண் மீது கொண்ட காதலால் வந்தது போன்றது தான் அந்த காட்சி. இது திரைக்கதை யுக்தி.

12 comments:

Anonymous said...

Naan indha paadalai partha podhu yosithean idhu eppadi saathiyamagum endru.. edho camera tricks endru dhan ninaithean.. idhai paditha pinbu dhan therigiradhu unmaiyagavey kashta patu irukirargal endru.. unmaiyai puriya veithadharku nandri.. Then hats of to Mr. Kamal & Mr. Ravikumar and also specially to u my dear brother.

Unknown said...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு, ஆனா நல்லா இருக்கு

Nagasubramanian said...

I have not yet watched the movie and song as well. but I heard that kamal has done a fabulous job in that song. but u clearly explained frames per second and all which I didn't know. (Remove word verification)

பாண்டியன் said...

I've Removed word verification Nagasubramanian.
பார்வை இட்டதற்கும், கருதுரைததற்கும் மிக்க நன்றி

Unknown said...

விமர்சனம் ஓ.கே.
நீங்கள் எழுதும் விதம் நல்லாயிருக்குங்க...
தொடர்ந்து எழுதுங்க.. எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு...

Unknown said...

இன்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் இணைக்கலாமே..

Unknown said...

நமக்கெல்லாம் தியேட்டர்-ல படம் பார்க்கவே பொறுமையில்ல ஆன நீங்க அதுல பெரிய ஆராய்ச்சியே பண்றீங்கபோல. அந்த படம் மாதிரியே உங்க பதிவும்ஒரு ஆங்கில படம் பார்த்தது போல ஒரு feel இருக்கு .

ஒருவன் said...

இப்ப நடிக்கிற ஹீரோ ஹெரோஇன் ஒரு படம் நடித்த உடனே தலைல கொம்பு முளைசெடுது.
கமல் அப்படி இல்லாம நடிக்கிறாங்க. he is great man, nice flim,
நீங்க இந்த song பத்தி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. ரொம்ப ரசித்து படம் பாபீகலோ?

Anonymous said...

http://www.youtube.com/watch?v=bxNJHuM0Js0

Pls watch this video till the end.... and u ll know how kamal has copied this song in visual and those lip sync stuffs u gave above......

Anonymous said...

coldplay The Scientist..

பாண்டியன் said...
This comment has been removed by the author.
பாண்டியன் said...

தெரிய படுத்தியதற்கு நன்றி நண்பரே ..!
உங்களின் பெயரை குறிப்பிட வசதியாய் அடுத்த முறை உங்கள் பெயரையும் சேர்த்து குறிப்பிடுங்கள்.
I've add it.