Tuesday, September 20, 2011

நிர்கதியாய் நிற்கின்றோம் - காங்கிரஸ் (பின்னி எடுத்த polimer tv )


ஞாயிறு தோறும் பாலிமர் டிவியில் இரவு 9 மணிக்கு மக்களுக்காக என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதில் யாரவது ஒரு அரசியல்வாதியை பேட்டி (பின்னி) எடுப்பார்கள். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு (பச்சாதாபம்) எல்லாம் கிடையாது. போன வாரம் (18-09-2011) அன்று பேட்டிகொடுக்க வந்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஞானசேகரன் (முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்). மெதுவாக சிரிசிகிட்டே ஆரம்பிச்ச பேட்டி கொஞ்ச நேரத்துல சூடாகியது.
அவர் கொடுத்த பேட்டியில நினைவில் நிற்பது மட்டும்

* அந்த தொகுதியில நின்னா தோற்றுவிடுவோம் னு தெரிஞ்ச பிறகும் ஏன் நின்னீங்க?
அப்படி இல்ல, நிக்க மாட்டேன்னு சொன்ன பயந்து போய் ஒதுங்கிட்டதா சொல்லுவாங்க. போரில் போரிட சென்ற பிறகு வெற்றி அல்லது தோல்வி இரண்டில் ஒன்றை பார்க்கத்தான் வேண்டும்.
(போர் ..... அதுவும் நீங்க?)

*தங்கபாலுவை இந்த தேர்தலுக்கு முன்னாடியாவது மாத்தி இருக்கலாமே? (எரியற தீயில் எண்ணைய ஊற்றும் கேள்வி)
இல்ல இப்ப மாத்தினா உள்ளாட்சி தேர்தல்ல தோற்றுவிட்டால் (?) மீண்டும் புது தலைவரை போட சொல்லுவாங்க. அதனால மொத்தமா போட்டுக்கலாம் னு அவரையே தொடர்ந்து தலைவராக ஏற்றுக்கொண்டு வழி நடப்போம்.

*சட்ட மன்ற தேர்தல் தோல்வி எதிர்பார்க்கப்பட்டது என்று சொல்லும் நீங்கள் ஏன் தி மு க வோடு கூட்டணியை தொடர்ந்தீர்கள்?
மேல் இடத்திற்கு எடுத்து சொன்னோம். ஆனால் (அன்னை சோனியா காந்தி) அவர்கள் செய்யும் முடிவே இறுதியானது என்பதால் வேறு வழி இல்லாம போய்விட்டது.
(தொண்டனின் எண்ணத்தை கேட்காத கட்சி எல்லாம் ஒரு கட்சியா?)

* இந்த தருணத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி என்பது தற்கொலைக்கு சமமான முடிவு என்பது போல தோன்றுகின்றதே?
நீங்க என்னங்க, நாங்களே தனியா நிக்க முடிவு பண்ணி வெளிய வந்தா மாதிரி சொல்லறீங்க? அவரே (கலைஞர்) கூட்டனினு சொன்னார், அப்புறம் அவரே இல்லன்னு சொல்லிட்டார். வேறு வழி இல்லாம நிர்கதியாய் நிற்கின்றோம், தே மு தி க வந்தால், அல்லது யாராவது கூட்டனி குறித்து பேச வந்தால் நிச்சயம் கூட்டனி அமைத்து போட்டியிடுவோம் (பா ஜா கா கூட பேசி பாருங்க சார்). தனியா நின்னா கூட நல்லது தான். சீட் கேட்டு அடிக்கடி சண்டை போடற எல்லாருக்கும் தேர்தல்ல நிக்க வாய்ப்பு கொடுக்க இதுதான் சரியான தருணம்.
(அம்மா வாங்க, அய்யா வாங்க, என் போதைக்கு நீங்க தான் ஊறுகாய்)

* போர் குற்றம் செய்ததாக சொல்லப்படும் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்ததன் காரணம் என்ன?
(வாய் ரொம்ப நேரம் ரோலிங் ஆச்சு என்ன என்னவோ சம்பந்தம் சம்மந்தம் இல்லாம பேசிட்டு) அது நமது பண்பாடு. வந்திருப்பது எதிரியாக இருந்தாலும் நாம் அவர்களிடம் நாகரீகமாகத்தான் நடந்துகொள்ள முடியும்.

* சர்ச்சையில் சிக்கியுள்ள அவரை இந்தியாவுக்கு கூப்பிட அப்படி என்ன அவசியம்?
கடைசி வரைக்கும் பதில் வரல.

* ராஜீவ் கொலை வழக்கில் அவர்கள் மூவரை (சாந்தன் முருகன் பேரறிவாளன்) அவசரமாக (விசாரணை கமிசன் அறிக்கை வரும் முன்பு) தூக்கில் போட சொல்வதின் காரணம் என்ன ?
விசாரணை கமிசனுக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கும் தொடர்பு எதுவும் இல்லை. ஆதலால் அது வெளி வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல. (அப்புறம் எப்பவும் போல ரோலிங்)

பாலிமர் டிவி பார்க்கற வழக்கம் இல்லனா கூட சண்டே மட்டும் இரவு 9 மணிக்கு பாருங்கள்.

9 comments:

K.s.s.Rajh said...

நல்ல ஒரு நிகழ்சி அது..நானும்..பாக்கிறனான்..

Sandy_speaks said...

நண்பரே.,

பாலிமர் டி.வி.யில் வரும் மக்களுக்காக நிகழ்ச்சியை நானும் பல மாதங்களாக பார்த்து வருகிறேன்., விகடனுக்காக வெள்ளி கிழமையின் வரவை எதிர்ப் பார்ப்பதைப் போல் ஒவ்வொரு ஞாயிருக்காகவும் காத்திருக்கிறேன்., திரு.கண்னன் (பேட்டி எடுப்பவர்) சமுதாயத்திற்கு கேள்வி கேட்க கற்றுக் கொடுத்து கொண்டுருக்கிறார்., இந்த நிகழ்ச்சியை நிறைய மக்கள் பார்க்க வேண்டும் குறிப்பாக இளைஞர்கள்.,

Sandy_speaks said...

நண்பரே.,

நான் இந்த நிகழ்ச்சியை பல மாதங்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன்., விகடனுக்காக வெள்ளி கிழமையின் வரவை பலர் எதிர்ப்பார்த்திருப்பதைப் போல் இந்நிகழ்ச்சிக்காக ஞாயிற்று கிழமையின் வரவை எதிர்ப்பார்க்க வைத்துவிட்டார் திரு.கண்ணன்.,(நிகழ்ச்சி தொகுப்பாளர்), இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் வாழை பழத்தில் ஊசி குத்துவது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்., இந்நிகழ்ச்சியை பலரும் பார்க்க வேண்டும் குறிப்பாக இளைஞர்கள்., நண்பர்களிடம் சொலுங்கள்.,

Anonymous said...

ரொம்ப சந்தோசம்...!பாலிமர் தொலைக்காட்சியை தொடர்ந்து பார்க்கிறேன்...!அதிலும் மக்களுக்காக நிகழ்ச்சி டபுள் சூப்பர்...!இன்னும் நிறைய சுவாரசியமான கேள்விகள்..உங்கள் கவனத்தில் வரவில்லை....!என நினைக்கிறேன்...இனி உங்களுடன் சேர்ந்து மக்களுக்காக நிகழ்ச்சியை உன்னிப்பாக பார்க்க போகிறேன்...இதை வாசிக்கும் அத்தனை இணைய தோழர்களும் பின் பற்றினால்..நலம்....!நன்றியுடன் கந்தையா-நெல்லை

யூர்கன் க்ருகியர் said...

அப்படியே டிவி சேனல் ரோலிங்ல போனப்ப பாலிமரில் "ஞானசூனியத்தை" பத்து நிமிஷத்திற்கு மேல் பார்க்க முடியாம சேனலை மாத்திட்டேன்..

aotspr said...

கலக்கல் பதிவு....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

முருக சிவகுமார் (murugasivakumar) said...

பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை. உங்கள் பதிவை படித்து முடித்தபோது நிகழ்ச்சி பார்த்த திருப்தி இருந்தது. சிறப்பானதை அடையாளப்படுத்திய உங்களுக்கு நன்றி....

Anonymous said...

why don't show the comments?

ம.தி.சுதா said...

காங்கிரசோட டவுசரை மட்டுமல்ல உள்ளாடையையும் கழட்டணும்...

ரத்த வெறி பிடித்த கொலை வெறிக்கூட்டம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்