Thursday, September 8, 2011

பேஸ்மன்ட் ஸ்ட்ராங், பில்டிங் வீக் - டாப் 10 தமிழ் திரைப்பட நடிகர்கள்

தலைப்பை பார்த்த உடனே புரிஞ்சி இருக்கும், ஆரம்பிக்கும் போது நல்லா ஆரம்பிச்சி பின்னர் காலுன்றி தமிழ் சினிமாவில் நிற்க முடியாமல் போன (அ) போராடிக்கொண்டிருக்கின்ற டாப் 10 நடிகர்களை (எண் வரிசைப்படி அல்லது என் வரிசைப்படி) வரிசைபடுத்தி இருக்கின்றேன்.

போட்டியில் பங்கேற்கும் நடிகர்கள் குணால், வினய், ஷாம், ரவி கிருஷ்ணா, ஜீவன், ஸ்ரீகாந்த், மனோஜ், ஜித்தன் ரமேஷ், விக்ரகாந்த், டேனியல் பாலாஜி, விஷ்ணு, பிரசன்னா, சிபி, சக்தி, அஜ்மல், பிரசாந்த், சாந்தனு, பரத், நகுல், சித்தார்த், அருள் நிதி, கிஷோர், பசுபதி, சம்பத்ராஜ். சுந்தர்.சி, எஸ் ஜே சூர்யா, சேரன், ஆகிய 26 நடிகர்கள் போட்டி போடுகின்றனர்.

முதலில் போட்டியிலிருந்து வெளியேறுபவர்களை பார்க்கலாம்.
சுந்தர்.சி , எஸ்.ஜே சூர்யா, சேரன்.






மூன்று பேருமே மிக பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்கள், நடிகராக சுந்தர் சி யின் தலைநகரம் ஓடியது போல அவர் நடித்த மீதி எந்த படமும் ஓடியதாக நினைவில்லை. அந்த படத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட் வடிவேலுவின் காமெடி. சூர்யாவின் வாலியும் குஷியும் போட்ட போடுல, தானே நடித்து எடுத்த படம் நியூ. ரகுமான் இசையும் சிம்ரனின் இடுப்பும் படத்திற்கு பக்க பலமா இருந்தாலும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட படம். அப்புறம் நடிச்ச படம் எதுவும் வேலைக்காகல. சேரன் தேசிய விருது வாங்கிய இயக்குனர். நடிக்க வந்து ஆட்டோகிராப் மட்டும் சக்கை போடு போட மத்ததெல்லாம் இவரை போட ஆனாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பவர். இந்த மூன்று பேருமே நடிக்க வந்த பின்பு தங்களுக்குரிய அடையாளங்களை இழந்தவர்கள். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இயக்குநராகி ஒரு கலக்கு கலக்க வாய்ப்பு இவர்களுக்கு உள்ளதால் பில்டிங்கும் ஸ்ட்ராங் ஆகும் என்று நம்புவோம்.

அடுத்து வெளியேறுபவர்கள் கிஷோர் பசுபதி சம்பத் ராஜ்.







மூன்று பேருமே எந்தவித கதாபாத்திரம் மற்றும் வில்லன் வேடங்களுக்கு நடிக்க தயங்குவதில்லை. கிஷோரின் பொல்லாதவன் திரைப்படமும் போர்க்களம் திரைப்படமும் மாறுபட்ட நடிப்புக்கு உதாரணம். பசுபதிக்கு தூளும் குசேலனும். சம்பத்க்கு கோவாவும் ஆரண்யகாண்டமும். மேலும் தமிழ் படம் இல்லையென்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துகொண்டு தமிழில் நல்ல வாய்ப்பு வந்தால் பிடித்து மீண்டும் ஒரு ரவுண்டு வர தயங்கவே மாட்டார்கள்.

அடுத்து வெளியே செல்ல நடையை கட்டிக்கொண்டிருப்பவர்கள் .

அருள் நிதி- வம்சம் ஓடினாலும் மற்ற எதுவும் ஓடாவிட்டாலும் எந்த கவலையும் இல்லை. நிதி இருப்பதால் படம் எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

பிரசன்னா சிபி அஜ்மல் : அஜ்மலை(கோ) தவிர மற்ற இருவரும் எந்த ஒரு பெரிய பட்ஜெட் படத்துலயும் நடிச்சதில்லை. தனியாக இவர்கள் நடித்த எந்த படமும் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை, ஹிட்டும் ஆகவில்லை. பேஸ்மேன்டே ஸ்ட்ராங் இல்லை. so rejected.

சாந்தனு - முதல் படமே ரகுமான் இசை. பாட்டு எல்லாம் ஹிட். ஆனா இப்ப வரைக்கும் நல்ல நடிகரா ஆகல. யருமே பட வாய்ப்பு கொடுக்கலைனா கூட அப்பா பாக்யராஜ் இருக்கார். பரத், நகுல் & சித்தார்த் - ஷங்கரின் பாய்ஸ் இவர்களுக்கு நல்ல பிரமாண்டமான அறிமுகம். சின்ன வயசு. கண்டேன் காதலை பரத்திற்கு சந்தானம் கொடுத்த ஹிட். நகுலுக்கு காதலின் விழுந்தேன் "நாக்க முக்க" பாடலால் குறைந்த பட்ச கவனம் இருக்கும் அவர்மேல் தயாரிப்பாளர்களுக்கு. இவரும் தனியா எந்த ஹிட்டும் கொடுத்ததில்லை. சித்தார்த் வேற மொழி பக்கம் ஓடி விட்டார். நான்கு பேருக்குமே சின்ன வயசு. எப்போதாவது ஜெய்க்க வாய்ப்பு உள்ளது.

பிரசாந்த் - சரியான வயது, உடல் நிலை, ரொம்ப பெரிய ஹிட்ஸ் எல்லாம் கொடுத்தும் இப்போதைக்கு இவருக்கு ஸ்க்ரீன் அலர்ஜி. நிறைய ஹிட்ஸ் கொடுத்து விட்டதால் இவரும் பட்டியலிலிருந்து வெளியே போகின்றார்.

மீதி இருப்பவர்களை கொண்டு டாப் 10

பத்தாவது இடம் - விக்ரகாந்த்

விஜயின் தம்பின்னு அறிமுகமாகி விஜய் சூர்யா போல விஜயகாந்த் கூட ஒரு படம் நடிச்சி ஹிட் ஆகலாம்னு பார்த்து வில்லன் ரோலுக்கு போய் இப்ப எங்க போறதுன்னு தெரியாம இருப்பவர்.

ஒன்பதாவது இடம் - மனோஜ் பாரதிராஜா

பெரிய இயக்குனரின் மகன். அவர் இயக்கத்தில் தாஜ்மஹால் ஒரு அறிமுக படம். ரகுமான் இசை, வைரமுத்து பாடல்னு ஆடியோ அட்டகாசமா போனாலும் படம் சரியாக போகவில்லை. அப்புறமும் விடாம ஈரநிலம் னு ஒரு படம் எடுத்தார் அப்பா இயக்குனர் இமயம். அப்பவும் சரி படல. அப்புறம் நிறைய படங்களில் நடிச்சி ஒரு நேரத்துக்கு அப்புறம் ச்சே போ னு நடிக்கரத்தை விட்டுட்டு இயக்கத்தின் பக்கம் போய்ட்டார்.

எட்டாவது இடம் - ஜித்தன் ரமேஷ்

அப்பா பெரிய தயாரிப்பாளர். ஜித்தன்னு ஒரு பெரிய படம். அதனாலேயே பெயர் கூட ஜித்தன் ரமேஷ். பாட்டு எல்லாம் ஹிட். ஆனா என்ன புண்ணியம், வசனம் பேச சொன்ன படிக்கச் ஆரம்பிச்சிடுறார். இவரை போலவே அருண் விஜய். பெரிய இடத்து பசங்களா இருந்தாலும் ஜெயிக்க முடியாம கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள். பில்டிங்க்ஸ் வீக்.

ஏழாவது இடம் - ஸ்ரீகாந்த்

முதல் படம் ரோஜா கூட்டம். ஆஸ்கார் பிலிம்ஸ் நாலர கோடி ரூபாய் தயாரிப்பில் பரத்வாஜ் இசையில் ஹிட் ஆன ஸ்ரீகாந்தின் முதல் படம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி பார்த்திபன் கனவு நல்ல ஹிட். அதோட போனவர் ரெண்டு ஹீரோ மூனாவது ஹீரோனு நடிக்க வேண்டிய அளவுக்கு ஆளாகிட்டார். நல்ல லுக் இருந்தும் ஏன் இப்படி இருக்கார்னு அவருக்கே தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இல்ல. (ரொம்ப வெள்ளையா இருக்கார்) ஹும், இனி தனியா வந்து ஹிட் கொடுக்க வாய்ப்பு ரொம்ப கம்மி.

ஆறாவது இடத்தில் ஷாம்

12 B னு ஜோதிகா சிம்ரன் கூட அட்டகாச அறிமுகம். ஜீவாவின் இயக்கம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை. வித்தியாசமான திரைக்கதை. அப்புறம் என்ன என்ன படமோ நடிச்சி பார்த்தும் முன்றாவது வேறு மொழிக்கு சென்று ரெண்டாவது ஹீரோ லிஸ்டில் சேர்ந்துட்டார். இவர் முகத்தில் பல தரப்பட்ட பாவனைகள் (expressions) வந்து நான் பார்த்தது இல்லை. இனி கஷ்டம் தான்.

5 மற்றும் நாலாவது இடம் - டேனியல் பாலாஜி & ஜீவன்

நல்லவர்களாக திரைப்படத்தில் அறிமுகமாகி வில்லனா மாறின பிறகு ஏல்லோரளையும் கவனிக்க பட்டவர்கள். திரும்ப நல்லவனா மாற ஆசைப்பட்டதால இருந்ததையும் இழந்தவர்கள். வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் பாலஜிக்குனா, காக்க காக்க ஜீவனுக்கு. இனி இவர்கள் என்ன செய்வதாய் உத்தேசமோ தெரியவில்லை. வில்லனாய் மாறினால் மறுபடியும் ஒரு ரவுண்டு வரலாம்.

மூன்றாவது இடம் விஷ்ணு

வெண்ணிலா கபடி குழு. ஒரு நல்ல அறிமுகம். இயக்குனர் சுசீந்திரனுக்கும். பாட்டு எதுவும் சொல்லிகொள்ளும்படியா இல்லனாலும் நல்ல ஹிட். அப்புறம் துரோகி, பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் னு என்ன பண்ணாலும் தியேட்டருக்கு கூட்டம் வராம போக என்ன பண்ணறதுனு திட்டம் போட்டுகொண்டிருகின்றார். I G புள்ளையா இல்லாம இருந்தா அந்த முதல் பட வாய்ப்பு கூட கிடைச்சி இருக்காதுன்னு தான் நான் நினைக்கி்றன். குரலும் சரி இல்ல . நடிப்பும் சொல்லிக்கொள்ளும் படியா இல்ல. இனி தனி ஹீரோ மாஸ் படம்னு எல்லாம் கனவு காண்பது சொந்த காசில் மட்டுமே முடியும்.

இரண்டாவது இடம் - வினய்

உன்னாலே உன்னாலே எவ்ளோ பெரிய மியுசிக்கல் ஹிட். ஜீவா இயக்கம். ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக். வெளி நாடுகளில் கண்ணுக்கு குளிர்ச்சியாக படம்பிடிக்கப்பட்ட படம். அப்புறம் வந்த படங்களில் ஜெயம் கொண்டான் படம் மட்டும் சுமாரா போக அதோடு அவரும் போய்ட்டார். இனி தமிழ் படங்களில் பார்பதே கடினம் தான்.

முதல் இடம் ரவிகிருஷ்ணா

7G ரெயின்போ காலனி. படம் தாறுமாறா ஓடின படம். யுவன் மியூசிக் செல்வா இயக்கம்னு பட்டைய கிளப்புன படம். பாட்டு எல்லாம் இப்ப கூட ரவியையும் சோனியா அகர்வாலையும் ஞாபகபடுத்தும். அதுக்கு அப்பறம் இவர் ஒரு டம்மி ஆகியது மிக பெரிய ஆச்சர்யம். குரல் இவருக்கு ரொம்ப பெரிய மைனஸ். ஆரண்ய காண்டம் படத்துல கரெக்டா செட் ஆச்சி. இவரும் தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் இனி கஷ்டம் தான்.

இவர்களின் குறிப்பிட்ட படங்கள் நல்ல படியா போனதுக்கு இவர்கள் தான் காரணம் என்று சொல்ல முடியாது. அதிகபட்ச காரணம் கதையும் திரைக்கதையும் இசையும், ஒளிப்பதிவும் தான். வேறு யாரவது புது முகம் நடித்து இருந்தாலும் படம் ஓடி இருக்கும். எனவே கதையே சினிமாவில் முக்கியம் என்று நிருபித்த டாப் 10 நடிகர்கள் இவர்கள். ஆனாலும் கதைக்கு இவர்கள் கொஞ்சம் பொருத்தமாகவே இருந்தார்கள். உதாரணமா ரவிகிருஷ்ணா கீச் கீச் என்று பேசினாலும் 7G கு அது நல்லா செட் ஆச்சி. அந்த கதையின் கதா பாத்திர வடிவமைப்புக்கு அது நன்றாகவே பொருந்தியது.

குணால விட்டுட்டோமே? காதலர் தினம் . ப்பா...! கதிர் இயக்கம், ரகுமான் இசை, ஸ்ரீ ராம் ஒளிப்பதிவு, am ரத்னம் பிரமாண்ட தயாரிப்பு. என்ன ஹேர் ஸ்டைல், கன்னத்துல குழி விழும் சிரிப்பு. பாவம் வாழ கொடுத்து வைக்கல. வீணா தற்கொலை பண்ணிக்கிட்டு போய் சேர்ந்துட்டார். இனி எங்கிருந்து நடிப்பது.?

1 comment:

M (Real Santhanam Fanz) said...

//கண்டேன் காதலை பரத்திற்கு சந்தானம் கொடுத்த ஹிட்//

ஒங்க நேர்மை பிடிச்சிருக்கு... வாழ்த்துக்கள்..