இது blue matte டெக்னாலாஜி பதிவின் தொடர்ச்சி. விசுவல் எபக்ட்ஸ் னா என்னனு தெரிஞ்சிக்கணும்னு முடிவு பண்ணி இந்த பக்கம் வந்த பிறகு இந்த விசயங்களை முழுசா தெரிஞ்கிக்கணும் இல்ல? அப்ப மேல இருக்கற லிங்க் ஐ கிளிக் பண்ணி படிச்சி முடிச்சிட்டு இங்க வாங்க. தொடரலாம். நேரம் இல்லப்பா அப்படின்னு சொல்லறவங்க தொடருங்கள். இந்த பதிவின் முடிவில் அந்த பதிவுக்கு போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வர வைக்க முயற்சி செய்கின்றேன்.
அந்த பதிவை படிச்சிட்டு வந்துடீங்களா? அந்த பதிவில் கடைசியாக கேட்டு இருந்த கேள்விகள், 1. blue matte தவறாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலோ, ஒளி வடிவமைப்பு போன்ற இன்ன சில பிற விசயங்களில் தவறு நடந்து இருந்தாலோ என்ன செய்வது?
படத்தை நெகடிவில் (பிலிம் = ஒளிப்பதிவு) பதிவு செய்து முடித்து லேப் சென்று புராசசிங் செய்த பின்பு VFX நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்த பின்பு அங்கு அந்த நீல நிற பின்னணியை அகற்ற முற்படும் போது (matte remove) சரியாக வரவில்லைஎன்றால் நமக்கு தேவையான object இன் முனைகளில் (EDGE) நீல நிறம் தெரிய வாய்ப்பு உள்ளது.

Rotoscoping :
இந்த தொழில்நுட்பம் அதிகமாக திரைப்படங்களில் பயன்படுத்தபடுவது. திரைப்படம் என்பது தொடர்ச்சியான புகைப்படம் என்பதை அறிவீர்கள் தானே?


அப்ப அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? முதல் படத்தை ஏற்கெனவே தெரிவே செய்து விட்டதால் இரண்டாவது படத்திற்காக மீண்டும் தெரிவு செய்ய தேவை இல்லை. முதல் படத்தின் அந்த கோட்டை மட்டும் சிறு மாற்றம் செய்தால் போதும். நேரம் மிச்சம். பயன்படும் மென் பொருள் mocha . இது adobe தயாரிப்பில் இப்போது கிடைக்கின்றது. இப்போது வந்துள்ள adobe cs5 இல் இதை மேலும் எளிமை படித்தி இருகின்றார்கள். முதல் படத்தை மட்டும் நாம் தெரிவு செய்தால் போதும். தொடர்ச்சியான படங்களை அதுவே tracking முறையில் தெரிவு செய்துகொள்கின்றது.

இரண்டாவது கேள்வி. நீல அல்லது பச்சை திரையில் ஏன் அந்த வெள்ளை புள்ளிகள்? ஏற்கெனவே இதை படிச்சதே செம குழப்பமா இருக்கு இல்ல? அடுத்த பதிவில் பார்க்கலாம் அந்த (tracking for compositing) தொழில் நுட்பத்தை.
இங்க தசாவதாரம் மேக்கிங் உள்ளது.
No comments:
Post a Comment