Saturday, September 17, 2011

சினிமாவில் விஷுவல் எபக்ட்ஸ் -part 2

முந்தைய பதிவிற்கு இங்கே சொடுக்கவும்.

அந்த பதிவில் கடைசியாக கிரீன் அல்லது ப்ளூ மேட்டில் (திரை பின்னணி) யில் வெள்ளை நிற புள்ளிகள் ஏன் அதன் பயன் பாடு என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன்.

வெள்ளை புள்ளிகள் காம்போசிட்டிங் (compositing) செய்ய பயன்படும் ட்ராக்கிங் (tracking) என்ற ப்ராஸஸிர்க்கு பயன்படுகின்றது. எளிமையாக சொல்லவேண்டுமானால், கிரீன் மேட் பின்னணியில் எடுக்கப்படும் காட்சியானது ஸ்டெடி கேமரா கொண்டு எடுக்கப்பட்டால் காம்போசிட்டிங் செய்யும் போது எளிமையாக அந்த பின்னணி நிறத்தை நீக்கிவிட்டு பின்னணியில் தேவையான ஒரு படத்தை வைத்துவிட்டால் போதும். கீழ் உள்ள வீடியோ இந்த வகை.




ஆனால் எடுக்கப்படும் கேமரா அசையும் படியான காட்சிக்கு தேவைபட்டாலோ, பின்னணி அசையும் படி இருந்தாலோ நாம் நமது வீடியோவில் எடுத்த காட்சியை பின்னணி நிறத்தை நீக்கி அப்படியே வைத்தால் இரண்டும் தனிதனி வீடியோ காட்சிகள் என்பது மிக எளிமையாக கண்டுபிடிக்கப்பட்டு விடும்.




இரண்டு காட்சிகளும் தனித்தனியாக ஆடிக்கொண்டிருக்கும். அது போல சிறு அசைவு கூட இது கிராபிக்ஸ் என்பதை பார்வையாளனுக்கு தெரியப்படுத்திவிடும். எனவே ஒரு வீடியோவின் அசைவுகளும் இன்னொரு வீடியோவின் அசைவுகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.





மேற்கண்ட வீடியோவில் கேமரா அசைந்தாலும் கூட காம்போசிட் செய்யப்பட்டு இருக்கும் அந்த இரண்டு சிறிய உருவங்கள் சரியாக தரையில் ஆடாமல் இருப்பது போல உள்ளதற்கு காரணம் tracking.



எப்படி track செய்வது:? ஒரு வீடியோவில் இருக்கற மூவ்மென்ட் ஐ அப்படியே எடுத்து இன்னொரு வீடியோவுக்கு வைக்கற வேலைதான் நாம இப்ப பார்க்க போற tracking. மேல இருக்கற வீடியோவில் கிரீன் மேட்டில் நிற்பவனின் வீடியோ ஆடுகின்றது அல்லவா? (கவனம் : கேமரா ஆடியதால் வீடியோ இப்படி தெரிகின்றது) அது ஒரு வீடியோ. இன்னொரு வீடியோ பின்னணியில் காம்போசிட் செய்து வைக்கப்பட்டுள்ள தீ எரியும் வீடியோ. காம்போசிட் செய்யப்படும் இரண்டு வீடியோக்களில் ஒன்று ( பெரும்பாலான நேரங்களில்) கம்புயூட்டரில் டிசைன் செய்து இருப்பார்கள். காரணம் லைவ் வாக எடுக்க முடிந்த காட்சிகளுக்கு எதுக்கு தேவை இல்லாமல் கிரீன் மேட்? அப்படி கணினியில் டிசைன் செய்து வீடியோவாக மாற்றும் போது எந்த அசைவுகளும் இல்லாதவாறு ரெண்டர் (வீடியோவாக மென்பொருளில் இருந்து மாற்றும் ப்ராசெஸ்) செய்வார்கள். அவ்வாறு கேமராவில் எடுக்கப்பட்ட காட்சி மற்றும் கணினியின் துணையுடன் வடிவமைக்கப்பட்ட காட்சி இரண்டையும் காம்போசிட் செய்ய பயன்படும் மென்பொருளில் (combustion, after effects, fusion, shake ) ஏதாவது ஒன்றில் ஏற்றி (import) செய்துகொண்டு, முதல் வீடியோ வில் உள்ள கிரீன் மேட்டை நீக்கிவிட்டால் (வெள்ளை புள்ளிகள் போகாது, ஏன் என்றால் அது வேறு வண்ணம்) பின்னணி எம்ப்டியாக (transprent) கிடைக்கும்.


பின்னர் இன்னொரு வீடியோவை செலக்ட் செய்து அந்த ப்ளூ மேட் வீடியோவில் உள்ள வெள்ளை நிற புள்ளிகளின் ஏதாவது சில புள்ளிகளை தேர்வு செய்து (bind - காகிதத்தின் அடியில் காந்தமும் மேல் புறம் இரும்பு தாதுக்களும் வைத்திவிட்டு காந்தத்தை நகர்த்தினால் மேல் உள்ள தாதுக்களும் நகரும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்) track ஐ தேர்வு செய்தல் வெள்ளை புள்ளிகள் ஆடும் அல்லது (ஒவ்வொரு படமாக , நினைவில் கொள்ளுங்கள் வீடியோ என்பது தொடர்ச்சியான படங்கள்) நகரும் அசைவிற்கேற்ப இந்த வீடியோவும் நகரும். இப்போது மேல் உள்ள lord of the wings வீடியோவை மறுமுறை பாருங்கள்.



இவ்வாறு track செய்து முடித்த பின்பு அந்த வெள்ளை புள்ளிகளை தனியாக நீக்குவார்கள். அது வேறு ஒரு தனி வேலை. சரி இந்த வீடியோவில் கேமரா ஒரு பக்கம் ஆடிக்கொண்டு இருக்கின்றது, அதனால் ஈசியாக track செய்து விட்டோம். ஆனால் கேமரா சுற்றி வருவதாக இருந்தால்?




அடுத்த பதிவில் 3D tracking பற்றி பார்க்கலாம்.

2 comments:

Anonymous said...

அருமையான தகவல்

Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

stalin wesley said...

அட்டகாசமான பதிவு .....


தேங்க்ஸ் நண்பரே ...