Tuesday, August 30, 2011

நீங்க எல்லாம் படிச்சி எந்த _ _ _ புடுங்க போறீங்க??

காதலர்கள் நிச்சயம் படிக்கணும், காதலிக்க போறவங்க கூட படிக்கலாம், தப்பு இல்ல.

சமீபத்தில் ஒரு உள்ளூர் பேருந்தில் (லாங் டிரைவ் வா இருந்து இருந்தா கூட நாம அமைதியா தூங்கிட்டு இருக்கலாம்)ஒரு மணி நேர பயணம் செய்ய வேண்டியது வந்தது. அதுல ரெண்டு பேர் பண்ண அராஜகம் இருக்கே, ஒரு வாரமா எப்ப நினைச்சாலும் கடுப்பு தலைக்கு ஏறுது.


ஏதோ ஒரு பொறியியல் கல்லூரில படிக்கற ரெண்டு பசங்க. பொண்ணு ஜன்னலோரமா உட்கார்ந்துகிட்டு இருக்கு. பையன் அது பக்கத்துல உட்கார்ந்துகிட்டு இருக்கான். மூணாவது சீட்டில் ஒருவர் (கொஞ்சன் வயசானவர்) உட்கார்ந்து கொண்டு இருந்தார். பையன் ஏற்கெனவே அவன் வேலைய செய்துகொண்டிருந்தான் போல. நான் ஏதேச்சையா பார்த்தேன். உட்கார இடம் இல்லாததால் நான் நின்று கொண்டிருந்தேன்.

அவன் பொண்ணுக்கு பின்புறம் கழுத்து பக்கமா ஒரு கையும் முன் பக்கம் (என்ன இருக்கும்) அந்த பக்கம் ஒரு கையுமா போட்டுக்கிட்டு ஆடறான், பேசறான், தடவுறான். பக்கத்துல ஒரு பெரிய மனிசன் உட்கார்ந்துகிட்டு இருக்கார் என்று அவனும் சரி அந்த பொன்னும சரி கொஞ்சம் கூட சட்டை பண்ணல. பேருந்துல அவ்ளோ பேர் இருக்கறதையே அவங்க கண்டுக்கல. ஒரு ஆளையா கண்டுக்க போறாங்க? கொஞ்ச நேரத்துல அவர் இறங்கவேண்டிய இடம் வந்த உடன் எழுந்து இறங்கி போய்ட்டார். நாம உட்கார்ந்தாலும் இதே நிலைமைதான்னு நினைச்சி வேற ஒருத்தவங்கள (பெண்) உட்கார விட்ட பிறகு, பக்கத்துல ஒரு பொண்ணு இருக்குனு பார்த்து கூச்சப்பட்டு அமைதியா இருப்பாங்கனு பார்த்தா ?

அவன் எழுந்து ஜன்னல் ஓரம் போயிட்டு அந்த பொண்ணை இந்த பக்கம் உட்கார வைச்சிட்டு திரும்பவும் ஆரம்பிச்சிட்டான். தொடைய கிள்ளறான், தலைல இருக்கற முடிய கோதி விடறான், மடியில படுக்க வைக்கறான், அந்த பொண்ணோட துப்பட்டாவ சரி பண்ணி விடறான், அப்பாப்பா, தலைய ஜன்னலோரம் திருப்பி பார்க்க முடியல. அந்த நாய்ங்க பின்னாடி இருந்த இருக்கை காலி ஆக அங்க போயிட்டு உட்கார்ந்தா, நாம கொஞ்சம் உயரம் என்பதால இப்பவும் அந்த சனியனுங்க கண்ணுல பட்டு தொலைய பார்வையை ஜன்னலோரம் திருப்பிட்டேன்.

அதுங்க பக்கத்துல இருந்த பெண் வேறு ஒரு இருக்கையை நோக்கி நகர, அந்த இருக்கையில் வந்து அமர்ந்த ஒரு பெரிய மனிசன் தலயில கைய வைச்சிகிட்டு கடைசி நிறுத்தம் வரை திரும்பி பார்க்காம, குனிஞ்ச தலை நிமிராம வந்ததை பார்க்கும் போது எனக்கே பாவமா இருந்தது. கடைசி வரைக்கும் அந்த -------------- யாரையும் கண்டுக்கல. ஒரு நேரத்துல முத்தம் வரைக்கும் போகிடிச்சிங்க.
பொது இடத்தில் காதலிப்பதோ, கை பிடிப்பதோ நிச்சயம் தவறாக எல்லோராலும் பார்க்கப்படாது. ஆனால் எல்லையை மீறும் போது? வீட்டில் இதுங்க என்ன செய்து கொண்டு இருந்தாலும் யாரும் எதுவும் கேட்டு விட போவது இல்லை, தவறு நடக்காத வீடுகளும் இல்லை.

சமுகத்தில் பொது இடம் என்பது சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை கூடும் இடமாக உள்ள போது அந்த இடங்களில் புகை பிடிப்பதே குற்றம் என்று சொல்லப்படுகின்றது. இது போன்ற சம்பவங்களை பார்க்கும் பள்ளி மாணவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பது வயது வந்தோர் எல்லோர்க்கும் தெரிந்த ரகசியம். ஏற்கெனவே எட்டாவது படிக்கும் போதிலிருந்தே ஜோடியாக சுற்ற ஆரம்பித்திருக்கும் மாணவர்கள் தொடுதல் வரை செல்லுதல் என்பது, தனி மனித வாழ்க்கையை நிச்சயம் வேறு பாதைக்கு அழைத்துக்கொண்டு சென்று விடும். தனி மனிதர்கள் சேர்ந்ததே இந்த சமுகம்.

சமுகத்தில் தான் செய்யும் தவறுகள் என்ன மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதை பற்றி நினைக்காத, வருத்தப்படாத இந்த ................................. எல்லா படிச்சி எந்த மயிற புடுங்க போகுதுங்க?

படிக்காத, மனித பிறப்பா இல்லாத நாய்கள் நடு ரோட்டில் செய்வதற்கும் இதுங்களுக்கும் என்ன வித்தியாசம்?

நாகரீகம் கருதி சிலதை சொல்லவில்லை, இந்த பகுதியில் இருக்கும் புகைப்படத்திற்கும் நான் எழுதியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, கோப படுபவர்கள் தாராளமாய் கோபபடலாம், பின்னூட்டத்தில்.

4 comments:

Yaathoramani.blogspot.com said...

நீங்கள் கொள்ளுகிற கோபம் நியாயமானதே
இதுகளுக்கும் தெரு நாய்களுக்கும் என்னதான்
வேறுபாடு இருக்கு
படிக்கிற காலத்தில் இப்படி இருந்தால்
குடும்பம் நடத்தவேண்டிய காலங்களில் நிச்சயம்
சீரழிந்துதான் திரிவார்கள்
படங்களைப் பிரமாதமாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

தங்களுக்கு சமூகத்தின் மீதான கோபத்தை தலைப்பிலேயே முழுவதும் வெளிப்படுத்திவிட்டீர்கள்.

இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது..?????

முனைவர் இரா.குணசீலன் said...

வணிக மயமான கல்வி மதிப்பு மிக்க தலைமுறையினரை உருவாக்குமா...?????????

என்பதை இன்றைய சமூகம் சிந்திக்கவேண்டும்.

கிராமத்து காக்கை said...

இதைபோல கசப்பான அனுபவம் எனக்கும் நேர்ந்துள்ளது
படிச்சவர்கள் தான் இந்த தவறை
அதிகமாகவே செய்கிறார்
சமூக அக்கறைகொண்ட மனிதன் இவ்வாறான செயலை செய்ய மாட்டான்