Tuesday, January 17, 2012

Type tamil in twitter or Easy typing in (facebook) tamil- எளிமையாக தமிழில் தட்டச்சு செய்ய.

இந்த பதிவு ஏற்கெனவே கணினி பயன்பாட்டில் புலிகளாக இருப்பவர்களுக்கும், ஏற்கெனவே தமிழ் தட்டச்சு தெரிந்தவர்களுக்கும் பயன்படாது.

புதிதாக கணினி அல்லது முகப்பத்திரை அல்லது ட்விட்டர் பயன்பாட்டிற்கு வந்தவர்களுக்கு சிறு துரும்பாக இருந்தால் போதும்.

http://www.google.com/ime/transliteration/

மேலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்தால் கீழே உள்ள பக்கம் திறக்கும்.
ஒரு setup file தரவிறக்கம் ஆகும். அதை install செய்யவும்.
install செய்ய மட்டும் நிச்சயம் இணைய இணைப்பு தேவைப்படும். பின்பு தட்டச்சு செய்ய net connection தேவை இல்லை.

install செய்து முடித்த பின்பு
control panel => all control panel view => region and language முறையே கிளிக் செய்யவும்.

region and language panel open ஆகும். அதில் (கவனிக்க 4) keyboard and language ஐ கிளிக் செய்து change keyboard option ஐ (கவனிக்க 5) அழுத்தவும்.

text service and input language window open ஆகும். அதில் google tamil input (கவனிக்க 7) ஐ சரிபார்த்துவிட்டு
அதே window வில் advance key setting ஐ (கவனிக்க 8) கிளிக் செய்து, between input language (கவனிக்க 9) என்ன key மொழியை மாற்ற தேவைபடுகின்றது என்பதை பார்த்து மனதில் எப்போதும் நினைவில் கொள்க.

இப்போது word pad open செய்து கொள்ளவும். அந்த shortcut key ஐ அழுத்தவும்.
10 ஐ கவனியுங்கள். அ குறியீடு தோன்றும் போது amma என்று type செய்தால் அம்மா என்று வரும். இது ஏறக்குறைய sms இல் தமிழ் type செய்வதை போன்றது.
English வேண்டும் எனும் போது மீண்டும் அதே short cut ஐ அழுத்தினால் எப்போதும் போல ஆங்கிலத்தில் type செய்யலாம்.
இப்போது அந்த குறியீடு காணாமல் போய் இருக்கும்.
on-line லும் இதே போல type செய்யலாம்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் முயற்சி எப்போதும் திருவினையாக்கும்.

இனி english அல்லது தமிழ் இதன் ஒன்றிலாவது அழகாக சொல்லலாம் இணையத்தில் என்று நம்புகின்றேன்.

கருத்துக்களை தாரளாமாக comment இல் பதியலாம்.

3 comments:

K.s.s.Rajh said...

நல்ல தகவல் பலருக்கு பயன் படும்

esaidev said...

Very informative. Thanks

பாண்டியன் said...

கணினியில் XP2 OS பயன்படுத்துபர்களுக்கு : region and language இல் instal east Asian language ஐ enable செய்ய வேண்டி இருக்கும் (அப்போது மட்டும் XP2 OS CD தேவைப்படும்). அப்படி செய்த பின்னர் google IME ஐ enable செய்து கொள்ளலாம்.