Thursday, October 6, 2011

தமிழில் கலக்கிய top 10 குத்து பாடல்கள்

காதலில் விழுந்தேன் - 2 (2008)

ஒலித்தகடு ரிலீஸ் ஆன உடனே இந்த நாக்க முக்க பாட்டு பத்திகிச்சி. இதை கேட்டு சன் டிவி சன் பிக்சர்ஸ் ஆரம்பிச்ச உடனே இந்த படத்தை தான் முதலில் வாங்கி விற்க ஆரம்பித்தது. விஜய் ஆண்டனி இசையில் ஒரு பெண்மனியில் குரல் முதலில் மிகவும் வசிகரித்தாலும் பின்னர் விஜய் ஆண்டனியின் குரலே எங்கயும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. லுங்கியை தூக்கிகிட்டு குழந்தை பசங்களை எல்லாம் நாக்கை கடிசிகிட்டு , டான்ஸ் எனக்கு பிடிக்கலைனாலும் சில வெளிநாடுகள் வரை விழாக்களில் ஒலிபரப்பு செய்யப்படும் அளவுக்கு ரீச் ஆனா பாடல்.கில்லி - 5 (2004)

ஓ போடு பாடலுக்கு அப்பறம் வந்த அப்படி போடு. விஜய் படத்தை கிண்டல் செய்பவர்கள் கூட அவரது படப்பாடலை கேட்டுகொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். அந்த அளவுக்கு படம் மொக்கையாக இருந்தால் கூட பாடல் எப்பவுமே ஹிட் அடிக்கும் நடிகர். ஆனா கில்லி படமும் செம ஹிட். கில்லி அளவுக்கு நேர்மையான ஹிட் விஜய்து வேற எந்த படமாவது இருக்கானு தெரியல. இசை வித்யாசாகர். இசையும் செம . விஜய் திரிஷா ஆட்டமும் செம. படம் கூட நல்ல தான் இருக்கும்.
திருடா திருடி - 1 (2003)

தினா இசையில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆனா ஒரே படம். இந்த படம் வெளிவந்த போது மன்மத ராசா பாடல் கேட்காத இடமில்லை. சாயாசிங் தனுஷ் ஆட்டம் சும்மா தூசு பறந்தது. தனுஷை எல்லார்க்கும் அறிமுகம் செய்து வைத்த பாடல். மாலதினு ஒரு பாடகியை தமிழ் சினிமா உலகம் தெரிந்து கொண்ட பாடல். மியூசிக் சேனல்களில் மிகப்பெரிய ஆட்சி செய்த செம குத்து.ஜெமினி - 4 (2002)

ஓ போடு. படம் ரிலீஸ் ஆன போது எல்லா குட்டி குழந்தைகளும் கைய காட்டி ஓ போடுனு சொல்லிகிட்டு ரோட்டில் அலைய வைத்த பாடல். விக்ரமுக்கு செம பெரிய ஹிட். பரத்வாஜ் இசை. அப்போதைக்கு ஹாட். அப்புறம் காணாம போய்டுச்சி.
அஞ்சாதே - 6 (2008)

மிஸ்கினின் மீண்டும் ஒரு மஞ்சள் புடவை பாட்டு. ஆனா வாழை மீனு அளவுக்கு இல்லையென்றாலும் இதுவும் செம ஹிட் ராகம் தான். பல வருடங்களுக்கு பிறகு பாண்டியராஜனை திரையில் வித்தியாசமாக பார்க்க வைத்த பாடல். அதே சுந்தர் சி பாபு இசை. படம் வொர்த் டு watch.
சித்திரம் பேசுதடி - 3 (2006)

பாடல்களை வைப்பதில் உடன்பாடு இல்லை எனும் மிஸ்கினின் படம். சுந்தர் சி பாபு என்னும் இந்த படத்தின் இசை அமைப்பாளரை தமிழகத்திற்கு தெரியுமா என தெரியவில்லை. பெருசான டான்ஸ் மூவ்மெண்ட் இல்லாமலே ஒரு குத்து பாடலை வடிவமைக்க முடியும் என்று செய்து காட்டிய பாடல். ஒரே பாடலில் ஸ்டார் ஆகி அப்புறம் காணமல் போய்விட்டார் கானா உலகநாதன். ஆனா பாட்டு எப்பவும் நிக்கும்.


நாடோடிகள் – 10 (2009)

ரெண்டு படம் இயக்கிவிட்டு அப்புறம் மறுபடியும் இணை இயக்குனராக பணியாற்றி விட்டு மீண்டும் இயக்க கிடைத்த வாய்ப்பை சமுத்திரக்கனி அழகாக பயன்படுத்திக்கொண்ட படம். அடப்பாவிங்களா ? இசை சுந்தர் சி பாபு. நல்ல ஒரு திருவிழா பாடல். அப்புறம் நிறைய பாட்டு இதே மாதிரி. ஆனா எதுவும் நிக்கல.
பருத்தி வீரன் -7 (2007)

கார்த்தி என்னும் ஹிட் ஹீரோ (இன்னும் எத்தனை நாளைக்கினு தெரியல) அறிமுகம் ஆன படம். பாட்டு ரொம்ப வித்தியாசமாய் இருந்தது. ஆனால் திருநங்கைகளை கொஞ்சம் மோசமாக சித்தரித்து இருந்தது. யுவனின் இசையில் ஊர் ஓரம் புளியமரம் கிராமத்து பக்கம் எப்பவும் கேட்கும்.வசூல் ராஜா mbbs – 8 (2004)

பரத்வாஜ் இசையில் வீணை சத்தம் வரும் இடம், அதற்கேற்ற நடனம், எக்க சக்க நடிகைகளை துண்டு துணிகளுடன் ஆட வைத்தது, சீனா தானா என்ற வார்த்தைகள் எல்லாமே சேர்ந்து வந்த சராசரி குத்து பாட்டு. நல்ல காலம் சினேகாவை ஆட விடல. துள்ளல் ரக பாடல்.தூள் – 9 (2003)

70 வயசுக்கு மேல சினிமாவுக்குள்ள நுழைஞ்சி எல்லார்க்கும் ஒரே படத்தில் அறிமுகமாகர அளவுக்கு ஹிட் ஆன பாட்டு “மதுரை வீரன் தானே”. இப்பவும் இந்த பாட்டை நிறைய பேர் கைப்பேசியில் ரிங் டோனா கேட்க முடியுது. இசை வித்யாசாகர். TR க்கு அப்புறமா சண்டையின் பின்னணியில் ஒரு பாட்டு.

1 comment:

raja23 said...

onru irandu.. mooru ena varisai paduthi paaadu..