Saturday, October 1, 2011

தெரிந்து கொள்வோம். stop motion அனிமேஷன் - சினிமா தொழில்நுட்பம்

stop motion. உங்கள்ள நிறைய பேருக்கு ஏற்க்கெனவே தெரிந்திருக்கும். அது போல தெரிந்தவர்கள் கீழ் உள்ள படத்த மட்டும் பார்த்துட்டு போய்டுங்க. நான் எழுதி இருப்பதை எல்லாம் படிச்சிகிட்டு இருந்தா கிறுக்கு பிடித்துவிட வாய்ப்பு இருக்கு. அப்ப பாடத்துக்கு போலாமா? முதல்ல இந்த படத்தை பாருங்க.



எவ்ளோ அழகா மனித குணத்தை பிரதிபலிக்க வைக்கும் படம் இல்ல? வேண்டும் என்றால் இன்னொரு முறை பார்த்துவிட்டு வந்து படத்தை மறந்து விடுங்கள். அதன் மேக்கிங்கிர்க்குள் போகலாம். வீடியோ என்பது தொடர்ச்சியான படங்களின் ஓட்டம் என்பது உங்களுக்கு தெரியும். அதை தொடர்ச்சியாக வீடியோ கேமரா கொண்டு எடுக்காமல் ஸ்டில் கேமரா கொண்டு ஒரு ஒரு படமாக (image) எடுத்து பின்பு அதை விடியோவாக ( குறைந்த பட்சம் நொடிக்கு 12 படங்கள் என்று) மாற்றி ஓடவைக்கப்படும் இவை stop motion animations என்று அழைக்கப்படுகின்றது.



டவுட்: அதான் வீடியோ கேமரா இருக்கே? அப்புறம் எதுக்கு ஸ்டில் கேமராவுல எடுக்கணும்?

ஏன்னா நாம படத்துல நடிக்க வைக்க போறது உயிர் உள்ள மனிதர்களை அல்ல. உயிர் அற்ற பொருட்களை. start camera action என்று சொன்னவுடன் சிவாஜியை போல வசனமும் பேசாது, MGR போல வாள் சண்டையும் போடாது. அப்படியே அமைதியா தான் இருக்கும். நாம தான் ஒரு ஒரு (action) நகர்தலையும் செய்ய வேண்டும். பின்பு அந்த ஒரு ஒரு நகர்தலையும் படம் பிடிக்க வேண்டும்.

டவுட்: சரி எப்படி எடுக்கணும்? என்ன என்ன வெல்லாம் வேணும்?

ஒரு மேஜை அளவு இடம். ஸ்டில் camera, லைட், கணினி. மற்றும் ஸ்டோரி போர்டு, மற்றும் கதா பாத்திரங்கள்.

டவுட்: ஸ்டோரி போர்டா?


ஆம்மாம். என்ன கதைன்னு முடிவு பண்ண பிறகு அது எப்படி பண்ண போறோம்னு ஒரு சின்ன pre plan. நமக்கு தெரிஞ்ச அளவுக்கு புரியற மாதிரி சிம்பிள் ஸ்கெட்ச்.



டவுட் : அப்பறம்?
கதா பாத்திரங்கள். உதாரணத்துக்கு மேல உள்ள ஸ்டோரி போர்டு ல கதைக்கு ரேணு கதா பாத்திரம். ஒன்னு பூ. இன்னொன்னு மனித வடிவில் clay model (களிமண் பொம்மை) இப்ப எல்லாம் களி மண்ணில் செய்ய வேண்டிய அவசியம் இல்ல. தனியாக கடைகளில் அந்த மண்ணிற்கு பதிலான பொருள் கடைகளில் கிடைக்கின்றது. அது கைகளில் ஒட்டாது. எப்போது இலகுவாக இருக்கும். மிக சுலபமாக வடிவங்களை மாற்றலாம். ஒரு சின்ன ஐடியா இங்க இருக்கு..

செய்த பின்பு ?
மேல உள்ள படத்தின் படி ஒருவன் குனிந்து அந்த பூவின் அருகில் வந்து கை நீட்ட வேண்டும்.
அதற்க்கு இயல்பாய் நிற்கும் படி ஒரு pose. பின்பு குனிய தயார் ஆவது ஒரு pose, பின்பு கை நீட்டுவது, உடல் வளைந்துள்ள நிலை என pose செட் செய்து கொண்டே கமெராவில் கிளிக் செய்ய வேண்டும். உதாரனத்திர்ற்கு தலை திரும்புவதை இருந்தால்
இப்படி ஒரு ஒரு pose யும் செட் செய்து கிளிக்க வேண்டும்.



பின்பு எல்லா புகைப்படங்களையும் ஏதாவது ஒரு வீடியோ எடிட்டிங் மென்பொருளில் ஏற்றம் செய்து வரிசையாக வைத்து play செய்து பார்க்க வேண்டியதுதான். தேவைப்பட்டால் பின்ணனி இசையும் வசனமும் கொடுத்துகொள்ளலாம்.

எதிலாவது அதிக முக்கியத்துவம் ?

ஆம். camera மற்றும் லைட் ஆகியவை இடம் மாறாமல் இருப்பது நலம். மாற்றியே ஆக வேண்டு என்றால் அதே வேறு வேறு காட்சியாக இருக்கலாம். அப்படி இல்லையென்றால் frame by frame மெதுவா இடமாற்றம் செய்யலாம். ஏறக்குறைய சிலையை செதுக்கி அதை நடிக்க வைப்பதற்கு சமம் இந்த stop motion.

கதைய யோசிக்க ஏதாவது ஒரு சின்ன ஐடியா?
உண்மையாக படம்பிடிக்க (you cant shoot that things in real) முடியதவைகளே அனிமேஷன்க்கு ஏத்த கதைக்கரு.



short film பண்ண ஆசை. ஆனால் என்கிட்டே பணம் இல்ல. அனிமேஷன் பண்ற அளவுக்கு வரைதலிலோ, அல்லது மேன்போருட்களிலோ பரிச்சயம் இல்லை என்பவர்களுக்கு இது ஒரு நல்ல வழி.

இதைக்கொண்டு ஆரம்ப காலங்களில் நிறைய படங்கள் வந்து உள்ளது. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வருவதில்லை.

http://en.wikipedia.org/wiki/List_of_stop_motion_films

சினிமாவில் விஷுவல் எபக்ட்ஸ் -part 2 ப்ரீயா இருந்தா படிச்சி பாருங்க. படிப்பதற்கு ப்ரீ தான்.

2 comments:

stalin wesley said...

பாஸ் டப்பிங் பேசுறதுக்கு என்ன என்ன தேவை .........


ப்ளீஸ் சொல்லுங்க ........

நன்றி ...

பாண்டியன் said...

stalin mail to apn631@gmail.com. Thanks