Saturday, February 4, 2012

சூப் சாப்பிடுவது சட்டப்படி குற்றமாகிவிட்டதா சென்னையில்?

நானும் உதவி இயக்குனர் நண்பர்கள் மூன்று பேரும் (மொத்தம் 4 பேர்) மாலை ஐந்து மணி அளவில் வடபழனி பேருந்து நிலையம் அருகே சந்திச்சி (முதல் சந்திப்பு) பேசிட்டு இருந்தோம். நண்பர்கள் டீ சாப்பிடலாம் என்று சொன்னார்கள். நான்தான் டீ வேண்டாம், பக்கத்துல ஒரு பார்க் இருக்கு , அங்க போன மட்டன் சூப் பல வகைகளில் கிடைக்கும்னு சொன்னேன். சரின்னு எல்லாரும் கிளம்பினோம்

அது ஒரு தள்ளுவண்டி சூப் கடை. பூங்காவுக்கு வெளியில இருக்கு (அதுல ரெண்டு பேர் இது வரைக்கும் அந்த பூங்கா பக்கமே வந்ததில்லை). நாங்க போன டைம் நல்ல பகலா இருந்ததால இன்னும் சூப் ரெடி ஆகல. சரின்னு பார்க் உள்ள ஒரு ரவுண்டு போனோம். குடிச்சிட்டு மட்டையானவர் ஒருவர் ஆரம்பத்துலேயே புல் தரையில் சுருண்டு கிடந்தார். போக போக காதலர்கள், குடும்ப இஸ்திரிகள், குழந்தைகள் எல்லாம் அங்க அங்க உட்கார்ந்துகிட்டு விளையாடிகிட்டு இருந்தாங்க. நாங்க வெளிய வந்து சூப் குடிக்க ஆரம்பிச்சோம்

அதுவரை எந்த பிரச்சனையும் இல்ல. அப்ப பார்த்து ஒரு போலிஸ் வண்டி வந்து நின்னுச்சி. அந்த வண்டியில ஒரு டிரைவர், ஒரு (பெண்) உதவி ஆய்வாளர் மட்டும் தான் இருந்தாங்க. அந்த வண்டி உள்ள நல்ல படிச்ச லுக்ல , வெள்ளையா ஒரு பணக்கார வீட்டு பையன் உட்கார்ந்துகிட்டு இருந்தான். எஸ் ஐ இறங்கி வந்து எல்லா போலீசும் செய்வது போல இங்க நிக்க கூடாது, அங்க உட்கார கூடாதுனு லத்தியால தட்டிகிட்டே சூப் கடை கிட்ட வந்து கத்திட்டு இங்க கடை போட கூடாதுனு (மாசம் மாசம் சூப்-பும் பணமும் மட்டும் வேணும் போல, ஆமாம் கவர்மென்ட் இடத்தை எல்லாம் போலிஸ் காரங்க வாடைகைக்கு விடலாம்னு சட்டம் ஏதாவது இருக்கா என்ன?) கத்திட்டு பார்க் உள்ள போனாங்க.


லவ்வர்சை வெளியே துரத்தி விட்டாங்க (நல்ல பசங்க தான் போல அவ்ளோ டிஸ்டன்ஸ்). அப்புறம் பார்க் உள்ள கருப்பா இருந்த ரெண்டு பேரை வெளிய கொண்டுவந்து வண்டியில வலுக்கட்டாயமா உட்காரவைத்தாங்க. அதோடு போவும் பிரச்சனை னு பார்த்தா சூப் சாப்பிட்டு கொண்டிருந்த நண்பன் ஒருவனை (தலை முடிய வாருங்கனு சொன்னா எவன் கேட்கிறான்?) கருப்பா இருந்த ஒரே காரணத்துக்காக ஏற சொல்லிட்டாங்க. பையன் எவ்ளோ சொல்லியும் விட முடியாதுன்னு சொல்லிடானுங்க. எங்களுடன் இருந்த இன்னொரு நண்பன் பேச அவனையும் உள்ளே உட்காரவைச்சி வண்டிய கிளப்பிட்டாங்க. முதல்ல படுத்துங்கிடந்த போதையில மட்டையானவனை என்ன பண்ண முடியும்? ஆம்பளை போலிஸ் னா தூக்கி கொண்டு வரலாம். (பட் லேடி போலிஸ்)

சூப் கடைக்காரருக்கு காசை கொடுத்துட்டு விருகம்பக்கம் போலிஸ் ஸ்டேஷன் போனா ஒரு போர்டு. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களிடம் காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை னு. (நிசமான சட்டமா சாமி?)

நாங்க என் நண்பர்களுக்காக வந்த மாதிரி இன்னும் பல பேர் அவரவர் நண்பர்களுக்காக வந்து, கல்யாண வீட்டு வாசல் மாதிரி கூட்டமா இருந்தது நுழைவு.போயிட்டு என்ன விஷயமா புடிச்சீங்கனு கேட்டா சூப் கடையில தகராறுனு ஒரு ஏட்டு விரைப்பா சொல்ல , நான் அங்க தான் இருந்தேன் தகராறு எல்லாம் ஒண்ணுமில்லையே னு கேட்டா “இன்னிக்கு இல்ல நேத்து தகராறு” சொல்லி எதுனா பேசணும்னா வெளிய எஸ் ஐ (பெண்) இருக்காங்க அங்க போயிட்டு பெசிக்கோங்கனு சொல்லிட்டு எல்லாரையும் வரிசையில வந்து பேர் முகவரி எல்லாம் கொடுக்க சொல்லிட்டு இருந்தார்.

(நல்லா செய்யுது சட்டம் கடைமையை – நேத்து தகராறுக்கு இன்னிக்கு இருந்தவன் என்னய்யா பண்ணுவான்?)

அந்த மேடம் கிட்ட கேட்டா, சும்மா தான் விசாரிச்சிட்டு பேர் முகவரி வாங்கிகிட்டு பத்து நிமிசத்துல வெளியே அனுப்பிடுவோம்னு சொல்லிட்டு வேகமா அடுத்த ரவுண்டுக்கு ஆள் பிடிக்க கிளம்பிட்டாங்க.

போதையில இருந்தவனை எல்லாம் தனியா உட்கார வைச்சிட்டு சும்மா இருந்தவனை மட்டும் பேர் முகவரி எல்லாம் வாங்கிட்டு அனுப்ப்பிடாங்க. வெளிய வரும் போது பார்த்தா (லவ்வர்ஸ் ல இருந்த) அந்த பையன். பார்க் ல இருந்து வெளியே போனவன் ஒழுங்கா வீட்டுக்கு போய் இருக்கலாம். சிக்னல் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்து இருக்கான், போலிஸ் வண்டி U turn போட, இவனை பார்த்த எஸ் ஐ அவனை தூக்கி வண்டி உள்ள போட, அந்த பொண்ணுக்கு பயந்து என்ன ஆகி இருக்குமோ?

கடைசியா அந்த educated look ல இருந்தவன ஏன் புடிச்சாங்க னு கேட்ட அப்பத்தான் தெரிஞ்சுது பய புள்ள கஞ்சா யூஸ் பண்ணிட்டு அவ்வங்க வீட்டில் டார்ச்சர் பண்ணிட்டு இருக்க அவங்க அம்மா அப்பா போலிஸ் கு போன் பண்ணி பையனை புடிச்சி கொடுக்க (நல்ல அப்பா நல்ல அம்மா உண்மையிலேயே) அவன் இந்த பார்க் ல தான் கஞ்சா வாங்கினேன் னு கை காட்டி இருக்கான். அதான் ரெய்டு.

நாங்க உதவி இயக்குனர்களாக இருப்பதால் இது ஒரு தேவையான அனுபவமாக கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் புதிதாக அங்கே செல்பவர்களுக்கு? எந்த தப்பையும் பண்ணாம (குடிச்சிட்டு) அங்க இருந்தவங்களுக்கு எல்லாம் தப்பு பண்ணாம ஜெயிலுக்குள்ள ஒரு நாள் இருந்துட்டோமே தப்பு பண்ணினா என்ன என்ற எண்ணம் வந்தா என்ன ஆகும்?

அப்ப கூட ஒரு நியாயம் தர்மம்னு ஒன்னும் இல்லையா “சூப் குடிச்சிட்டு இருந்தவன் என்ன தப்பு பண்ணான்?” ஒரு வேலை சூப் குடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகிவிட்டதா சட்டத்தில்?

No comments: